India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயதான ஹீரோக்கள் இளம் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் படங்கள் இன்னும் வருவது குறித்து மோகன்லால் பதிலளித்துள்ளார். ஒருவர் ஆரோக்கியமாக, 100 வயது வரை நடிக்கும் திறன் பெற்றிருந்தால் இது தவறு இல்லை எனவும், கொடுக்கப்படும் கேரக்டர் தான் இதை தீர்மானிப்பதாகவும், வயது அல்ல என்றும் அவர் தெரித்துள்ளார். மேலும், மக்கள் இதை ஏற்கத்தயாராக இருக்கும் போது, ஏன் செய்யக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்தும் அதிமுகவை அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்துள்ளார். இல்லாத ஒன்றை இருப்பது போல வதந்திகளை பரப்பி, மாணவிகளை பயமுறுத்துவதை இபிஎஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்தார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும், பெண்கள் தற்போது புகார் அளிப்பதே முதல்வர் மீதான நம்பிக்கையில்தான் எனவும் கூறியுள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை வழங்கி, தவெகவினர் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சென்னை தி.நகரில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக புஸ்ஸி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறந்து 4 நாள்களே ஆன குழந்தையை விற்று, தந்தை புது பைக் வாங்கிய சம்பவம் ஒடிஷாவில் நடந்துள்ளது. தர்மு பெஹராவின் 2ஆவது மனைவி சாந்திக்கு, கடந்த 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்று, தர்மு புது பைக் வாங்கியுள்ளார். குழந்தைகள் நலக் குழுவினர் விசாரித்த போது, குழந்தையை தங்களால் வளர்க்க முடியாது என்பதால் தானம் செய்துவிட்டதாக அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.
சென்னை பரங்கிமலையில் ரயில் முன்தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022இல் மாணவி சத்யப்ரியாவை சதீஷ் ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்தார். மாநிலத்தையே உலுக்கிய இந்த வழக்கு விசாரணை, அல்லிக்குளம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் முடிந்தது. இதையடுத்து சதீசை குற்றவாளியாக அறிவித்த கோர்ட், தண்டனையை இன்று வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை விஜய் சந்தித்து புகார் மனு அளித்தது பேசுபொருளாக மாறியுள்ளது. அதே சமயத்தில், தனது கொள்கைக்கு மாறாக விஜய்யின் நடந்து கொண்டதாகவும் சிலர் விமர்சனம் வைக்கின்றனர். அதாவது, தனது முதல் மாநாட்டிலேயே ஆளுநர் பதவியை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியவர் விஜய். ஆனால், இப்போது அவரே ஆளுநரை சந்தித்துள்ளாரே என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
ஜனவரி 9 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பொங்கலை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு கொண்ட தொகுப்பை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நா. சுப்பையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜன.9 முதல் சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தாய்ப்பால் தானம் ஆதரவில்லாமல் கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கும், உடல் ஆரோக்கியமின்றி பிறந்த குழந்தைகளுக்கும் நீங்கள் அன்பால் கொடுக்கும் பரிசு. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாய்ப்பால் வங்கியை அணுகவும். 19 மாவட்டங்களில் இயங்கும் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களுடன் தாய்ப்பால் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது.
பாக்ஸிங் டே டெஸ்ட்டின் 4ஆவது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 3 கேட்சுகளை தவறவிட்டார். இதற்கு ரோஹித் ஷர்மா கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார். இதை ஆஸி., முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி உள்பட பலர் விமர்சித்த நிலையில், ரோஹித்தை ‘Captain Cry Baby’ என ஆஸி. ஊடகங்கள் கலாய்த்துள்ளன. முன்னதாக, கான்ஸ்டாஸ் உடனான கோலியின் மோதலை விமர்சிக்கும் விதமாக ‘Clown Kohli’ என ஆஸி. ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
பாஜகவில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக கஸ்தூரி, கவுதமி உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டி அதிமுகவில் ஐக்கியமாகினர். அந்த வரிசையில் நேரடியாக அண்ணாமலை மீது குற்றஞ்சாட்டி குஷ்பு, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே, திமுகவில் இருந்து விலகி காங்., சேர்ந்த அவர், பின் பாஜகவில் இணைந்தார். ஒருவேளை அவர் பாஜகவில் இருந்து விலகினால், எந்த கட்சியில் இணைவார் என்று கேள்வி எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.