India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெஸ்டில் எதிரணி கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை ஆட்டம் இழந்த கேப்டன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார். நடப்பு BGT தொடரில் இதுவரை 4 முறையும், அதற்கு முன்பு 2 முறையும் என இதுவரை 6 முறை ரோஹித் சர்மாவை, ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்க செய்துள்ளார். முன்னதாக ENG கேப்டன் டெட் டெக்ஸ்டர், AUS கேப்டன் ரிச்சி பெனாடின் பந்துவீச்சில் 5 முறை ஆட்டம் இழந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து ரயில்களுக்கும் பூஜ்யத்தில் தொடங்கும் எண்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், அந்த ரயில்களுக்கு தற்போது வழக்கமான எண்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. அவை 2025 ஜன. 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்ட ரயில்களின் எண்களும் மாறுகின்றன. SHARE IT.
நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவில் பங்கேற்று விஜய் சேதுபதி பேசினார். அப்போது, செருப்பு அணிவது, தீபாவளி-பொங்கல் போனஸ், 8 மணிநேர வேலை இவையெல்லாம் நல்லக்கண்ணு வாங்கிக் கொடுத்தது என்றும், அவரது வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், VJS கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஓடும் ரயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு <<15020442>>தூக்கு தண்டனை <<>>கிடைத்துள்ளது. இந்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் கூட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கலாம். ஆனால் தூக்கு தண்டனை அளித்தது சரியில்லை என்று சzzz
ஜன.9 முதல் <<15020099>>பொங்கல்<<>> பரிசுத் தொகுப்பை எந்த புகாருக்கும் இடமில்லாமல் விநியோகிக்க வேண்டுமென ரேஷன் கடைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தாெகுப்பு விநியோக தேதி குறிப்பிட்டு ரேஷன் அட்டைதாரர் வீடுகளுக்கே சென்று டோக்கன் அளிக்க வேண்டும். ஜன.9 காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் தொகுப்பு அளிக்க வேண்டும். பிறகு எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
வயதான ஹீரோக்கள் இளம் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் படங்கள் இன்னும் வருவது குறித்து மோகன்லால் பதிலளித்துள்ளார். ஒருவர் ஆரோக்கியமாக, 100 வயது வரை நடிக்கும் திறன் பெற்றிருந்தால் இது தவறு இல்லை எனவும், கொடுக்கப்படும் கேரக்டர் தான் இதை தீர்மானிப்பதாகவும், வயது அல்ல என்றும் அவர் தெரித்துள்ளார். மேலும், மக்கள் இதை ஏற்கத்தயாராக இருக்கும் போது, ஏன் செய்யக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தை முன்வைத்து போராட்டம் நடத்தும் அதிமுகவை அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்துள்ளார். இல்லாத ஒன்றை இருப்பது போல வதந்திகளை பரப்பி, மாணவிகளை பயமுறுத்துவதை இபிஎஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்தார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும், பெண்கள் தற்போது புகார் அளிப்பதே முதல்வர் மீதான நம்பிக்கையில்தான் எனவும் கூறியுள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் விஜய் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை வழங்கி, தவெகவினர் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சென்னை தி.நகரில் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக புஸ்ஸி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறந்து 4 நாள்களே ஆன குழந்தையை விற்று, தந்தை புது பைக் வாங்கிய சம்பவம் ஒடிஷாவில் நடந்துள்ளது. தர்மு பெஹராவின் 2ஆவது மனைவி சாந்திக்கு, கடந்த 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை, குழந்தை இல்லாத தம்பதிக்கு விற்று, தர்மு புது பைக் வாங்கியுள்ளார். குழந்தைகள் நலக் குழுவினர் விசாரித்த போது, குழந்தையை தங்களால் வளர்க்க முடியாது என்பதால் தானம் செய்துவிட்டதாக அந்த தம்பதி தெரிவித்துள்ளனர்.
சென்னை பரங்கிமலையில் ரயில் முன்தள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022இல் மாணவி சத்யப்ரியாவை சதீஷ் ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்தார். மாநிலத்தையே உலுக்கிய இந்த வழக்கு விசாரணை, அல்லிக்குளம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் முடிந்தது. இதையடுத்து சதீசை குற்றவாளியாக அறிவித்த கோர்ட், தண்டனையை இன்று வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.