India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சினிமாவிற்கு மட்டும் வரவில்லை என்றால் தான் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது இயற்கை மரணமடைந்திருப்பேன் என இயக்குநர் பாலா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இளம் வயதில் போதைப்பழக்கத்தின் EXTREME நிலைக்குச் சென்றதாகவும், இன்னும் 1 வருடம் தான் தாங்குவான் என குடும்பத்தினர் நினைத்ததாகவும் அவர் நினைகூர்ந்துள்ளார். மேலும், சினிமா ஆர்வம் தான் தன் உயிரை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸை குற்றம் சொல்லமாட்டேன் என அவரது உறவினரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு தான் போலீசாருக்கு முக்கியம் எனவும், சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டநெரிசலில் உயிரிழந்த ரேவதியின் வீட்டிற்கு, அல்லு அர்ஜுன் சார்பாக யாராவது சென்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒருவர் ஒரு சிகரெட்டை புகைத்தால், அவரது ஆயுட்காலத்தில் 20 நிமிடம் ஆயுட்காலம் குறையும் என லண்டன் பல்கலை., எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சிகரெட் புகைப்பதாலும் ஆண்களின் ஆயுட்காலம் 17, பெண்களின் ஆயுட்காலம் 22 நிமிடங்களும் குறைகிறது. அதேநேரம் 8 நாள் புகைப்பிடிக்காமல் இருந்தால், ஒரு நாள் கூடுதலாக வாழ முடியும். எனவே, புத்தாண்டு முதல் புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால், பிப்.20க்குள் ஒரு வாரத்தை திரும்ப பெறலாம்.
AUSக்கு டெஸ்ட் தொடரில் INDவின் நட்சத்திரங்கள் யாருமே சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, கேப்டன்ஷிப்பிலும் பேட்டிங்கிலும் ரோகித் பயங்கரமாக சொதப்பினார். அவர் 3 டெஸ்ட்டில் 31 ரன் மட்டுமே எடுத்துள்ளார். பண்ட், ராகுல், கோலியும் சோபிக்கவில்லை. IND தோல்விக்கு இது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் தங்களை மேம்படுத்த வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் கையில் அணி செல்ல வேண்டும்.
திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாதகவினர் சிலர் வலைதளங்களில் மோசமாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீமான் உள்ளிட்டோர் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜரான வருண்குமார், நாதகவினருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.
அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம் தொடர்பாக விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களிடம் விநியோகித்ததாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக அவரும், 300-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் அனைவரையும் போலீசார் தற்போது விடுவித்தனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான FIR கசிந்தது எப்படி என்று தேசிய தகவல் மையம் (NIC) விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்திய தண்டனை சட்டமாக இருந்த IPC, தற்போது BNS-ஆக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் எஃப்ஐஆரை, BNS ஆக மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அது கசிந்திருக்கும் என NIC விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக, பாலியல் வழக்கின் எப்ஐஆர்கள் முடக்கப்படுவது வழக்கம்.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை இன்று குறைந்திருந்தது. தக்காளி கிலோ ரூ.12ஆகவும், நவீன் தக்காளி ரூ.19ஆகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. செள செள, முள்ளங்கி கிலோ ரூ.10ஆக குறைந்திருந்தது. புடலங்காய் ரூ.20ஆகவும், வாழைக்காய் தலா 1 ரூ.3ஆகவும் சரிந்திருந்தது. சுரைக்காய் கிலோ ரூ.15ஆகவும், கேரட் கிலோ ரூ.25ஆகவும் வீழ்ச்சி கண்டிருந்தது. உங்கள் ஊரில் காய்கறி விலை என்ன? கீழே பதிவிடுங்க.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். வள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ₹37 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்ணாடி பாலத்தின் வழியாக முதல்வர் விவேகானந்தர் பாறைக்குச் சென்றார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.