news

News August 8, 2025

டிரம்ப்புக்கு ஷாக் கொடுத்த இந்தியா

image

அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடியாக இந்தியாவும் ஆக்‌ஷனில் இறங்கியுள்ளது. போயிங் நிறுவனத்திடமிருந்து P-8I ஜெட் விமானங்கள் வாங்கும் $3.6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஜெட் உற்பத்திக்கான மூலப் பொருள்கள் இந்தியாவிலிருந்து செல்லும் நிலையில், டிரம்ப்பின் 50% வரிவிதிப்பால், அவற்றின் விலையும் 50% உயர்ந்துள்ளது. இதனால் ஜெட் விலையும் உயர்வதால் ஆர்டரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

News August 8, 2025

மாநிலக் கல்விக் கொள்கை ஒரு நாடகம்: அண்ணாமலை

image

அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக்கொள்கை என்பது CM ஸ்டாலினின் நாடகம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், இந்தி உள்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஆனால் அரசுப் பள்ளிகளில் 2 மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என CM சொல்வதாக சாடியுள்ளார். ஏழை மாணவர்கள் 2 மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை எனவும் குற்றம்சாட்டினார்.

News August 8, 2025

நீதிபதி அழைத்தும் வரமறுத்த ராமதாஸ்..!

image

அன்புமணி தரப்பில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ராமதாஸ் தரப்பில் HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையின் போது <<17340719>>ராமதாஸ், அன்புமணியிடம்<<>> தனியாகப் பேச வேண்டியிருப்பதால் இருவரையும் நேரில் வருமாறு நீதிபதி அழைத்தார். இதற்கு அன்புமணி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராமதாஸால் வரமுடியாது என அவரது வழக்கறிஞர் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

News August 8, 2025

‘வாழும் பெரியார்’ CM ஸ்டாலின்: உதயநிதி

image

மதம்பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம் தான் மாநில கல்வி கொள்கை என உதயநிதி தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை, இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, நீட் என பல வழிகளில் தமிழக மக்களின் கல்வி கனவை சிதைக்கும் முயற்சிகள் நடப்பதாக சாடினார். புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என உறுதியாக நின்றவர் CM ஸ்டாலின் என்றும், ‘வாழும் பெரியாராக’ அவர் திகழ்வதாகவும் கூறினார்.

News August 8, 2025

சினிமா ரவுண்டப்: தெலுங்கில் கால் பதிக்கும் யோகி பாபு

image

*‘கூலி’ படத்துக்கான பின்னணி இசையை முடிந்த அனிருத்
*ராகவ லாரன்ஸ் தனது தம்பியுடன் இணைந்து நடிக்கும் ‘புல்லட்’ படத்தின் டீசர் வெளியானது
*கேரளாவில் கூலி படத்தின் முன்பதிவுக்காக குவிந்த ரசிகர்கள்
*தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் யோகி பாபு
*‘Kantara Chapter1’ படத்தில் நடிக்கும் ருக்மினி வசந்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது.

News August 8, 2025

சரிவுடன் முடிந்த பங்கு வர்த்தகம்

image

டிரம்ப் அறிவித்த கூடுதல் வரிவிதிப்பு, பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 765 pts குறைந்து 79,857 pts-லும், நிஃப்டி 232 pts சரிந்து 24,363 pts-லும் முடிவடைந்தது. Bharti Airtel, Tata Motors, Kotak Bank, Mahindra & Mahindra, Axis Bank, Reliance பங்குகள் கடும் சரிவில் முடிய, NTPC, Titan, Trent, ITC, Bajaj Finserv பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன.

News August 8, 2025

என்ன ரிலீஸ் பண்ணிடுங்க.. CSKக்கு அஸ்வின் கோரிக்கை!

image

CSK வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், வரும் மினி ஏலத்தை முன்னிட்டு தன்னை விடுவிக்கும் படி, CSK நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. 2025 தொடருக்கு முன்பாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ₹9.75 கோடி கொடுத்து அவரை CSK வாங்கியது. பெரும் நம்பிக்கையுடன் வாங்கப்பட்ட அஸ்வின், வெறும் 7 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். CSK-வில் அவருக்கு பதிலாக யார் கரெக்ட் சாய்ஸாக இருப்பார்?

News August 8, 2025

மாநாட்டில் விஜய்தான் ஒரே பிரபலம்: போலீஸுக்கு பதில்

image

மதுரை மாநாட்டில் விஜய்யை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகரும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என தவெக தெரிவித்துள்ளது. மாநாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை எனவும் காவல்துறையின் கேள்விகளுக்கு தவெக பதில் அளித்துள்ளது. பெண்களுக்கு என்று தனியாக பெண் தன்னார்வலர்கள், முதியவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

News August 8, 2025

ஆபரண தங்கம் 1 சவரன் விரைவில் ₹80,000-ஐ தாண்டும்!

image

ஆபரண தங்கத்தின் விலை <<17338724>>1 சவரன் 75,000-ஐ<<>> கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது வெகு விரைவில் ₹80,000-ஐ தாண்டும் என நகை வணிகர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். டிரம்பின் வரி அறிவிப்பு உலக முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திருப்பி இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாம். தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கம் வாங்குற கனவு கனவாவே போயிருமோ?

News August 8, 2025

9-ம் வகுப்பிலே கரியரை தீர்மானிக்கலாம்: அமைச்சர்

image

சென்னையில் மாநில கல்விக்கொள்கையை CM ஸ்டாலின் வெளியிட்டார். இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், அச்சம் நிறைந்த தேர்வு என்ற நிலையை மாற்றி மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். 9-ம் வகுப்பிலே கரியர் வழிகாட்டி பெற்று மாணவர்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!