news

News April 27, 2025

இன்று பெண்கள் Tri-series: எங்கு, எப்போது பார்க்கலாம்?

image

இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் ODI Tri-Series இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு இந்தியா – இலங்கை அணிகளின் மேட்சை, FanCode app-ல் காணலாம். இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (C), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹார்லீன் தியோல், ஜெமிமா, ரிச்சா கோஷ், யஸ்திகா, தீப்தி ஷர்மா, அமன்ஜோட் கவுர், கஷ்வீ கவுதம், ஸ்னேஹ் ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசப்னிஸ், ஸ்ரீ சரணி, ஷுச்சி உபாத்யாய்.

News April 27, 2025

நிறுத்தப்பட்ட சிந்து நதி நீர் இனி எங்கு செல்லும்?

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால் பாக். உடனே பாதிக்கப்படாது. காரணம், பாக்.ல் இருக்கும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் பாக்லிஹார், கிஷங்கங்கா அணைகள் என சிறிய உள்கட்டமைப்புகளை மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. இது குறைந்த அளவே நீரைத் தேக்கும். ஆனால், இந்தியா அணைகளை கட்டி நீரை முழுவதுமாக நிறுத்தினால் பாக்.-க்கு நீண்டகால பிரச்னையாக மாறும்.

News April 27, 2025

கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது!

image

கம்பீருக்கு<<16198203>> ‘I kill you’<<>> என மெயில் அனுப்பிய வழக்கில், குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ்சிங் பர்மர் (21) என்ற இன்ஜினியரிங் மாணவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி கம்பீருக்கு இந்த மெயில் வந்திருந்தது. ஏற்கனவே, கம்பீருக்கு 2022-ல் இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் மெயில் வந்திருந்தது.

News April 27, 2025

நடிகர் நாகேந்திரன் திடீர் மரணம்.. காரணம் இதுதான்

image

காவல் படத்தை இயக்கியவர் நாகேந்திரன். இதேபோல், மேலும் சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். நேற்று அவர் திடீரென மரணம் அடைந்தார். நாகேந்திரனின் மறைவுக்கு மாரடைப்பே காரணம் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயதில் அவர் மரணமடைந்தது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாகேந்திரன் மறைவுக்கு பல்வேறு நடிகர்களும், இயக்குநர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News April 27, 2025

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்எல்சிக்கு ஒரு நீதியா?

image

என்எல்சியால் நிலத்தடி நீர், நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஏற்படுத்திய தீங்குகளைவிட பல மடங்கு கேடுகளை என்எல்சி ஏற்படுத்தியுள்ளது. என்எல்சியால் கடலூரில் உள்ள 30 லட்சம் மக்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள அன்புமணி, உடனடியாக என்எல்சியை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News April 27, 2025

திமுக துணை பொதுச் செயலாளராகும் உதயநிதி?

image

உதயநிதி ஸ்டாலின், திமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு, அக்கட்சித் தலைமை அடுத்து ஒரு பெரிய பதவியை வழங்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. பொதுச் செயலாளராக துரைமுருகன் இருப்பதால், அவருக்கு அடுத்த பதவியில் உதயநிதியை நியமிப்பது குறித்த அறிவிப்பை விரைவில் திமுக வெளியிடும் எனச் சொல்லப்படுகிறது.

News April 27, 2025

மருத்துவ கழிவுகள் விவகாரம்.. அரசு முக்கிய முடிவு

image

தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால், விசாரணையின்றி நேரடி சிறை தண்டனை வழங்கும் வகையில், சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மசோதாவை அறிமுகம் செய்தார். வரும் 29-ம் தேதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

News April 27, 2025

வீட்டில் சாமி கும்பிடும் போது இந்த 3 விஷயங்கள் முக்கியம்

image

வீட்டில் கடவுளை தூய மனதுடன் வழிபட முடியவில்லை, பூஜை செய்ய முடியவில்லை என்றால் அதற்கு கர்ம வினையே தான் காரணம் எனப்படுகிறது. இதிலிருந்து விடுபட இந்த 3 விஷயங்களை பின்பற்ற வேண்டும். இதை ‘ திரிகரண சுத்தி’ என்கிறார்கள். அதாவது வழிபடும் போது, மனதில் நல்ல எண்ணங்களை நிலைநிறுத்தி, கைகளால் பூக்களை தூவி, வாய் முழுக்க கடவுளின் மந்திரங்களை உச்சரித்து கடவுளை பூஜிக்க வேண்டும். SHARE IT.

News April 27, 2025

நடிகை செளந்தர்யா மரணம்… கிடைக்காத சடலம்

image

பொன்னுமணி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிறகு, ரஜினியின் அருணாச்சலம், படையப்பா, விஜயகாந்தின் தவசி, சொக்கத்தங்கம் என பல வெற்றி படங்களில் நடித்தவர் செளந்தர்யா. பெங்களூரு அருகே கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி விமான விபத்தில் பலியானார். அப்போது அவரின் வயது 32 மட்டுமே. ஆனால் 21 ஆண்டுகளாகியும், அவர், அவருடன் பயணித்தோரின் சடலங்கள் கிடைக்கவில்லை. மர்மம் நீடிக்கிறது.

News April 27, 2025

5 ஆண்டுகளுக்கு பின் தொடங்கும் புனித யாத்திரை

image

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பின் தொடங்க உள்ளது. வரும் ஜூன் – ஆகஸ்ட் வரை 750 பேரை, 15 பிரிவுகளாக அழைத்து செல்ல வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2019-ல் இந்த யாத்திரை நடந்தது. கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன மோதலால் யாத்திரை நிறுத்தப்பட்டது. மானசரோவர் ஏரி சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் உள்ளது.

error: Content is protected !!