India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
BSFஇல் 275 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு இருந்தன. இதற்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்புத் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. வயது வரம்பாக 18-23 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும். வேலையில் சேர விரும்புவோர் www.rcttd.bsf.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.
2024ஆம் ஆண்டுக்கான ICC-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில், பும்ரா (71 விக்கெட்கள்) இடம்பிடித்துள்ளார். இவரைச் சேர்த்து, இந்த பட்டியலில் மொத்தம் 4 பேர் உள்ளனர். ENGன் ஜோ ரூட் (1556 ரன்கள்), SLன் கமிண்டு மெண்டிஸ் (1049 ரன்கள்), ENGன் ஹேரி ப்ரூக் (1100 ரன்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உங்களுக்கு பிடித்தவருக்கு வாக்களிக்க இங்கே <
காமெடியன் டூ ஹீரோவாக மாறி கலக்கி வரும் நடிகர் சூரி, தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் ஹோட்டலை நடத்தி வருகிறார். இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவருந்தி வரும் நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் சூரியன் ஹோட்டல் அமைந்துள்ளதாக மதுரை ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கக் கோரியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது கடித நகல்களை பொதுமக்களிடம் த.வெ.க. நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் சென்னையில் ஜனநாயக வழியில் விநியோகம் செய்த கட்சியினரை கைது செய்தது கண்டனத்துக்கு உரியது என குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கையை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை தொடர்பாக விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை, பொதுமக்களிடம் விநியோகித்ததாக புஸ்ஸி ஆனந்த் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், 2 மணிநேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் விஜய் போனில் பேசினார். அப்போது “தைரியமாக இருங்கள்.. நான் எப்போதும் உங்களுடன்தான் இருக்கிறேன்” என விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவிற்கு மட்டும் வரவில்லை என்றால் தான் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது இயற்கை மரணமடைந்திருப்பேன் என இயக்குநர் பாலா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இளம் வயதில் போதைப்பழக்கத்தின் EXTREME நிலைக்குச் சென்றதாகவும், இன்னும் 1 வருடம் தான் தாங்குவான் என குடும்பத்தினர் நினைத்ததாகவும் அவர் நினைகூர்ந்துள்ளார். மேலும், சினிமா ஆர்வம் தான் தன் உயிரை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸை குற்றம் சொல்லமாட்டேன் என அவரது உறவினரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு தான் போலீசாருக்கு முக்கியம் எனவும், சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டநெரிசலில் உயிரிழந்த ரேவதியின் வீட்டிற்கு, அல்லு அர்ஜுன் சார்பாக யாராவது சென்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒருவர் ஒரு சிகரெட்டை புகைத்தால், அவரது ஆயுட்காலத்தில் 20 நிமிடம் ஆயுட்காலம் குறையும் என லண்டன் பல்கலை., எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சிகரெட் புகைப்பதாலும் ஆண்களின் ஆயுட்காலம் 17, பெண்களின் ஆயுட்காலம் 22 நிமிடங்களும் குறைகிறது. அதேநேரம் 8 நாள் புகைப்பிடிக்காமல் இருந்தால், ஒரு நாள் கூடுதலாக வாழ முடியும். எனவே, புத்தாண்டு முதல் புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால், பிப்.20க்குள் ஒரு வாரத்தை திரும்ப பெறலாம்.
AUSக்கு டெஸ்ட் தொடரில் INDவின் நட்சத்திரங்கள் யாருமே சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, கேப்டன்ஷிப்பிலும் பேட்டிங்கிலும் ரோகித் பயங்கரமாக சொதப்பினார். அவர் 3 டெஸ்ட்டில் 31 ரன் மட்டுமே எடுத்துள்ளார். பண்ட், ராகுல், கோலியும் சோபிக்கவில்லை. IND தோல்விக்கு இது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் தங்களை மேம்படுத்த வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் கையில் அணி செல்ல வேண்டும்.
திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாதகவினர் சிலர் வலைதளங்களில் மோசமாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீமான் உள்ளிட்டோர் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜரான வருண்குமார், நாதகவினருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.