news

News December 30, 2024

வருமான வரி கணக்குத் தாக்கல்: நாளையே கடைசி நாள்

image

2024-25 ஆண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் அளிக்கப்பட்ட அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதத்துடன் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. நாளைக்குள் கணக்குத் தாக்கல் செய்யவில்லையெனில், 20% வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். SHARE IT.

News December 30, 2024

ஜோசப் விஜய் ஆளுநரை சந்தித்தார்.. கவனிச்சீங்களா

image

அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை விஜய் சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். இது விஷயமல்ல. ஆனால், இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜோசப் விஜய் ஆளுநரை சந்தித்ததாகவும், சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் தலையிடுமாறு ஜோசப் விஜய் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய்யை ஜோசப் விஜய் என்றே ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

News December 30, 2024

மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன் இல்லை!

image

கஞ்சா, மெத்தமட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

News December 30, 2024

GOOD NEWS: எய்ட்ஸ்க்கு தடுப்பூசி வந்தாச்சு..!

image

AIDSக்கான தடுப்பூசி ஒரு வழியாக கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. Gilead Sciences தயாரித்த Lenacapavir மருந்தை, USA மருத்துவ நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதால், இதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை எடுக்க வேண்டிய இந்த தடுப்பூசியின் விலை, சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகாது என்ற கவலையும் எழுந்துள்ளது.

News December 30, 2024

AIDSஆல் பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேரா?

image

எய்ட்ஸ் முதன்முதலாக கடந்த 1983ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகநாடுகளுக்கு பரவி, மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், உலகம் முழுவதும் இதுவரை 4.20 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். தரவுகளின் படி, 2023ல் 3.99 கோடி பேர் AIDSல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

News December 30, 2024

1ஆம் தேதி முதல் இந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது

image

2025ஆம் ஆண்டு ஜன 1 முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது. அவை எந்தெந்த கணக்குகள் என்பதைப் பார்க்கலாம். 1) 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது. 2) 12 மாதத்திற்கு மேல் பயனில் இல்லாத கணக்குகள் செயல்படாது 3) குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் கணக்கில் பணமில்லாத வங்கிக் கணக்குகளும் செயல்படாது. SHARE IT.

News December 30, 2024

முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த பாக்யராஜ்

image

சிறுவயதில் முருங்கைக்காயின் ரகசியத்தை தனது பாட்டி மூலம் அறிந்து கொண்டதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அப்போதே, இதை எதிர்காலத்தில் சினிமாவில் பயன்படுத்த வேண்டும் என எண்ணி முந்தானை முடிச்சு படத்தில் யூஸ் செய்ததாகவும், அது உலக லெவலில் தன்னை ஃபேமஸ் ஆக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த ரகசியத்தை தனக்கு சொல்லிக் கொடுத்த பாட்டிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

அரசு பஸ்களில் போலீஸ் இனி இலவச பயணம்

image

அரசுப் பஸ்களில் போலீஸ் இலவச பயணம் செய்வது தொடர்பாக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. பாேலீஸார் பணிபுரியும் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மாநகர, நகர பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கான அட்டையை காண்பிக்கும் போலீஸாரை அனுமதிக்க வேண்டும். அட்டையை காட்டவில்லையேல் அபராதம் விதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News December 30, 2024

விமானத்தில் எங்கு அமர்ந்தால் பாதுகாப்பு?

image

சமீபத்திய விபத்துகளால், விமான போக்குவரத்தின் பாதுகாப்பு பற்றிய கவலைகள் எழுந்துள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் ‘Aviation Disaster Law’ மற்றும் ‘Popular Mechanics’ இதழின் ஆய்வு தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதன்படி, முன் சீட்களில் அமர்பவர்களின் இறப்பு விகிதம் 38% ஆகவும், நடுத்தர சீட்களின் இறப்பு விகிதம் 39% ஆகவும் உள்ளது. ஆனால், பின் சீட்களில் அது 32% ஆக குறைந்து காணப்படுகிறது.

News December 30, 2024

எல்லைப் பாதுகாப்புப் படை வேலை.. இன்றே கடைசி

image

BSFஇல் 275 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு இருந்தன. இதற்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்புத் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. வயது வரம்பாக 18-23 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும். வேலையில் சேர விரும்புவோர் www.rcttd.bsf.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!