news

News December 30, 2024

அது என்ன ‘SPACE DOCKING’.. சாதனையை நோக்கி இஸ்ரோ

image

விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள இஸ்ரோ, இதற்காக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது. இந்த ராக்கெட், தலா 220 எடைக்கொண்ட 2 சாட்டிலைட்டுகளை (SPADEX A, B) புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தும். அதன் பிறகு, இந்த 2 சாட்டிலைட்டுகளையும் விண்வெளியிலேயே ஒன்றாக இணைக்கும் SPACE DOCKING எனும் சவாலான பணியைதான் இஸ்ரோ செய்யவுள்ளது. இது வெற்றியடைந்தால், SPACE STATION அமைப்பது சாத்தியமாகும்.

News December 30, 2024

இளைஞர்களுக்கு Inspiringஆக மாறிய டெலிவரி பாய்

image

உணவு டெலிவரி பணி செய்த யாசீன் ஷான் முஹம்மது, கேரள நீதித்துறை தேர்வில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். குழந்தை பருவத்தில் தந்தை கைவிட்ட நிலையில், தாயாரின் அரவணைப்பில் சட்டப்படிப்பு முடித்து சாதித்துள்ளார். அவரின் பயணம், தடைகளை கடக்க முயற்சிக்கும் எண்ணற்ற நபர்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது. கடின உழைப்பு, உறுதிப்பாடு இருந்தால், வெற்றியை எளிதில் எட்டிவிட முடியும்.

News December 30, 2024

வெளிநாட்டு சொத்து கணக்கு தாக்கல் அவகாசம் நீட்டிப்பு

image

வெளிநாடுகளில் சொத்து வைத்திருப்பாேர், அங்கிருந்து வருமானம் ஈட்டுவோர், அதுதொடர்பான கணக்கைத் தாக்கல் செய்ய டிச.31 வரை நேரடி வரிகள் வாரியம் அவகாசம் அளித்திருந்தது. அந்த அவகாசம் நாளையுடன் நிறைவடைய இருந்தது. இந்நிலையில், அந்த வாரியம் புதிதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், டிச.31ஆம் தேதி வரையிலான அவகாசத்தை 2025 ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

‘கேரளா ஒரு மினி பாகிஸ்தான்’ MH அமைச்சர் சர்ச்சை பேச்சு

image

கேரளாவை மினி பாகிஸ்தான் என்று மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய அவர், கேரளாவில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாகவும், இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலதான் கேரளாவிலும் நடத்தப்படுவதாகவும் குறை கூறியுள்ளார்.

News December 30, 2024

எத்தியோப்பியா: ஆற்றில் லாரி கவிழ்ந்து 66 பேர் பலி

image

எத்தியோப்பியா நாட்டில் ஆற்றுக்குள் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியாகினர். சிடாமா பகுதியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லாரியில் 70க்கும் மேற்பட்டாேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆற்றுப்பாலம் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடி, ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் 64 பேர் சம்பவ இடத்திலேயும், 2 பேர் ஹாஸ்பிடலிலும் பலியாகினர். எஞ்சியோர் சிகிச்சையில் உள்ளனர்.

News December 30, 2024

விலங்குகளுக்கு இது வேறு உலகம்!

image

மனிதர்களை ஒப்பிடும் போது விலங்குகள் வித்தியாசமாக நேரத்தை உணர்கின்றன. பூனை மற்றும் நாய்களை ஒப்பிடும் போது, பல்லி போன்ற ஊர்வனகளுக்கு பூமி மெதுவாக சுழல்வதாக தெரியும். அதாவது, அந்த உயிரினங்கள் நேரத்தை மெதுவாகவே உணர்கின்றன. மனிதன் பிற்பகல் வேளையை உணரும்போது, விலங்குகள் அதை நண்பகலாக உணரும். வெளிப்புற தகவல்களை மூளை எவ்வளவு விரைவாகச் செயலாக்குகிறது என்பதை பொறுத்து இது அமைகிறது.

News December 30, 2024

அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைக்குமா.. கோர்ட் உத்தரவு

image

புஷ்பா 2 படத்தின் ப்ரோமஷனுக்காக ஹைதரபாத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்ற அல்லு அர்ஜுனை பார்க்க சென்ற பெண், கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், தனக்கு நிரந்தர ஜாமீன் கோரி அல்லு அர்ஜுன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி, தீர்ப்பை ஜன.3-க்கு ஒத்தி வைத்தது.

News December 30, 2024

பொங்கல் பரிசுத் தாெகுப்புடன் ரூ.2,000 வழங்குக: பாஜக

image

பொங்கல் பரிசுத் தாெகுப்புடன் ரூ.2,000 வழங்க பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், ரேஷன் பொருள்கள் விநியோகத் துறைக்கு பாஜக மனு அளித்துள்ளது. அதில், 2023, 2024இல் ரூ.1,000 ரொக்கம் கொடுக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இயற்கை இடரினால் நிதி ஆதாரத்தை இழந்த மக்கள், பொங்கலை கொண்டாட ரூ.2,000 அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

News December 30, 2024

பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!

image

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான அரசு மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில், இப்பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் மாத சம்பளமாக ரூ. 11,970 பெற்று வந்த நிலையில், அது தற்போது ரூ.14,150ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிக ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

News December 30, 2024

இஸ்ரேலுக்கு புதிய பிரதமர்

image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீடீர் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதித்துறை அமைச்சராக உள்ள யாரிவ் லெவின், தற்காலிக பிரதமராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெதன்யாகுவிற்கு சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், வெற்றிகரமாக ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!