news

News December 31, 2024

சூரிய குடும்பத்தில் புதிய மர்ம கோள்?

image

சூரிய குடும்பத்தில் நெப்டியூனுக்கு அடுத்த படியாக மறைந்திருக்கும் 9ஆவது கோளை கண்டுபிடிக்கும் முயற்சியில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 2014 முதல் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இது பூமியை விட 5-7 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும், சூரியனை சுற்றி வர 10,000 முதல் 20,000 ஆண்டுகள் ஆகும் எனவும் கூறுகின்றனர். இருப்பினும், சில ஆய்வாளர்கள் புதிய கோள் இருப்பதை சந்தேகிக்கின்றனர்.

News December 31, 2024

வயநாடு நிலச்சரிவு: அதி தீவிர பாதிப்பாக அங்கீகரிப்பு

image

இந்தியாவையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக மத்திய அரசு அங்கீகரித்தது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு வலியுறுத்தி வந்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்த மத்திய அதி தீவிரப் பாதிப்பாக அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட எந்த ஒரு கோர தாண்டவத்தையும் தேசிய பேரிடராக அறிவித்தது கிடையாது.

News December 31, 2024

60 சிறந்த நடிகர்களில் ஒரே ஒரு இந்தியர்

image

உலக அளவில் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த நடிகர்களின் பட்டியலை UKவைச் சேர்ந்த ‘THE INDEPENDENT’ இதழ் வெளியிட்டுள்ளது. 60 பேர் கொண்ட இந்த பட்டியலில், ஒரே ஒரு இந்திய நடிகராக இர்ஃபான் கான் மட்டும் இடம்பெற்றுள்ளார். கடந்த 1988ல் பாலிவுட்டில் அறிமுகமான அவர், 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ‘Slumdog Millionaire’ மற்றும் ‘Life of Pi’ ஆகிய படங்கள், அவருக்கு சர்வதேச அளவில் பெயரை வாங்கிக் கொடுத்தன.

News December 31, 2024

நீர் ஈரமாக இருப்பதாக நினைத்தால் அது தவறு!

image

தண்ணீர் ஈரமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் அப்படி கருதவில்லை. நீர் ஈரமாக இல்லாமல் இருக்கலாம் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. ஒரு திடப் பொருளுடன் தொடர்பை ஏற்படுத்த, ஒரு திரவம் மேற்கொள்ளும் திறனே ஈரம் என என்று அவர்கள் வரையறுக்கின்றனர். அதாவது, தண்ணீர் ஈரமாக இல்லை, ஆனால், அது மற்றப் பொருள்களை ஈரமாக்குவதாக கூறுகின்றன. SHARE IT.

News December 31, 2024

ராசி பலன்கள் (31-12-2024)

image

➤மேஷம் – திறமை
➤ ரிஷபம் – இன்பம்
➤மிதுனம் – புகழ்
➤கடகம் – அன்பு
➤சிம்மம் – செலவு
➤கன்னி – உறுதி
➤துலாம் – வாழ்வு
➤விருச்சிகம் – உயர்வு
➤தனுசு – ஊக்கம்
➤மகரம் – மறதி
➤கும்பம் – போட்டி ➤மீனம் – தாமதம்.

News December 31, 2024

விஜய்யால் கோமாவில் இருந்து மீண்ட மகன்: நாசர்

image

தனது மகன் கோமாவில் இருந்து நினைவு திரும்பிய போது உச்சரித்த முதல் பெயர், நடிகர் விஜய் தான் என நாசர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, மகனின் நினைவு சீராக விஜய்யின் படங்கள் மற்றும் பாடல்களை போட்டுக் காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தகவலைத் தெரிந்து கொண்ட விஜய், ஹாஸ்பிடலுக்கு அடிக்கடி வந்து தனது மகனை நலம் விசாரித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

News December 31, 2024

சாதனை படைப்பாரா ஜெய்ஸ்வால்?

image

ஆஸி.,க்கு எதிரான 5ஆவது டெஸ்டில் மேலும் 84 ரன்கள் எடுத்தால், ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைப்பார். 2024இல் இதுவரை 1,478 ரன்களை எடுத்துள்ள அவர், அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளார். முன்னதாக, 2010இல் சச்சின் 1,562 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், 1979இல் கவாஸ்கர் 1,555 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

News December 30, 2024

ELITE CLUB நாடுகள் பட்டியலில் இணையும் இந்தியா!

image

விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பதற்காக, PSLV-C 60 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. அதன் பிறகு, இந்த ராக்கெட்டில் உள்ள 2 சாட்டிலைட்டுகளை விண்வெளியிலேயே ஒன்றாக இணைக்கும் <<15024790>>SPACE DOCKING <<>>எனும் சவாலான பணியை இஸ்ரோ மேற்கொள்ளும். இந்த ஸ்பேஸ் டாக்கிங்கை இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே செய்துள்ளன. எனவே, இதில் நாம் வெற்றி பெற்றால் அந்த ELITE CLUB நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணையும்.

News December 30, 2024

அது என்ன ‘SPACE DOCKING’.. சாதனையை நோக்கி இஸ்ரோ

image

விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள இஸ்ரோ, இதற்காக பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது. இந்த ராக்கெட், தலா 220 எடைக்கொண்ட 2 சாட்டிலைட்டுகளை (SPADEX A, B) புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தும். அதன் பிறகு, இந்த 2 சாட்டிலைட்டுகளையும் விண்வெளியிலேயே ஒன்றாக இணைக்கும் SPACE DOCKING எனும் சவாலான பணியைதான் இஸ்ரோ செய்யவுள்ளது. இது வெற்றியடைந்தால், SPACE STATION அமைப்பது சாத்தியமாகும்.

News December 30, 2024

இளைஞர்களுக்கு Inspiringஆக மாறிய டெலிவரி பாய்

image

உணவு டெலிவரி பணி செய்த யாசீன் ஷான் முஹம்மது, கேரள நீதித்துறை தேர்வில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். குழந்தை பருவத்தில் தந்தை கைவிட்ட நிலையில், தாயாரின் அரவணைப்பில் சட்டப்படிப்பு முடித்து சாதித்துள்ளார். அவரின் பயணம், தடைகளை கடக்க முயற்சிக்கும் எண்ணற்ற நபர்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது. கடின உழைப்பு, உறுதிப்பாடு இருந்தால், வெற்றியை எளிதில் எட்டிவிட முடியும்.

error: Content is protected !!