India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து பேசுவதற்காக சென்னை ராஜ் பவன் வந்தடைந்தார். 1 மணிக்கு அவர் ஆளுநரை நேரில் சந்தித்து உரையாடவிருக்கிறார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தான் அரணாக இருப்பேன் என்று பெண்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகவே அவர் ஆளுநரை சந்திக்க சென்றிருக்கிறார்.
தமிழக பாஜக தன்னை எந்தக் கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். ”என்னை ஏன் அழைப்பதில்லை என்று தலைவர் அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குஷ்புவின் இந்த வெளிப்படையான பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை என்ன பதில் வைத்திடுக்கிறார்?
Smartphone, Tablet உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு Type-C சார்ஜரை மட்டுமே பயன்படுத்தும் நடைமுறை ஐரோப்பிய ஒன்றியத்தில் அமலுக்கு வந்துள்ளது. லேப்டாப்களுக்கு மட்டும் 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மின் கழிவுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் இதை பின்பற்ற முன்வந்துள்ள நிலையில், ஆப்பிள் மட்டும் சிறிது தயக்கம் காட்டி வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ‘விடுதலை 2’ படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளது. தனியார் விடுதியில் நடந்த இந்த விழாவில் விஜய் சேதுபதி, சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார், உதவி இயக்குநர்கள் கலந்துகொண்டனர். விழாவில், எல்ரெட் குமார் ஆளுயர மாலையை வெற்றிமாறனுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
வரவிருக்கும் புத்தாண்டில் சனி மற்றும் குருவின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்து அவர்களது பொருளாதார நிலையை உயர்த்தவுள்ளன. குறிப்பாக மேஷம், சிம்மம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசியினருக்கு நிதியோகம் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு இந்தாண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் வாழ்வில் நிம்மதியும் கிடைக்கும்.
தற்போது ஆஸி. 2-1 என BGT தொடரில் லீட் எடுத்துள்ளது. கடைசி சிட்னி மேட்சில் இந்தியா வெற்றி பெற்றால் WTC புள்ளிப்பட்டியலில் இந்தியா 10 வெற்றிகளுடன் 55.26 % பெறும். ஆஸி.யும் 10 வெற்றிகளுடன் இருக்கும். அடுத்த நடைபெறும் இலங்கை – ஆஸி. தொடரில், இலங்கை 2 போட்டிகளையும் வென்றால் மட்டுமே, இந்தியாவிற்கு WTC பைனலுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். அடுத்த போட்டியில் இந்தியா வெல்லுமா?
2024 முடிவதற்கு இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு. இப்போ பேசுவோம். இந்த வருடத்தில் நீங்கள் பார்த்த படங்களில் உங்களை “என்னடா இது ரொம்ப cringeஆ இருக்கு” என நினைக்கவைத்த/ இல்லை கதற வைத்த திரைப்பட காட்சி எது? நம் ஊர் தமிழ் படங்கள் மட்டுமில்லை. பான் இந்தியா லெவலில் யோசிச்சி கமெண்ட் பண்ணுங்க மக்களே. எந்த காட்சி அதிக அளவில் மக்களை சோதித்துள்ளது என பார்ப்போம்.
நடப்பாண்டில் ஜம்மு & காஷ்மீர் பிராந்தியத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் அவ்வப்போது தீவிரவாதிகள் ஊடுருவும்போது, இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், ரஜோரி, பூஞ்ச், கிஷ்த்வார், கதுவா மாவட்டங்களில் இந்தாண்டு மட்டும் 75 பாக்., தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தனியார் வங்கி ஊழியர்களின் பணி விலகல், 25% அதிகரித்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வங்கி சேவைகள் முடங்கி வருவதாக எச்சரித்துள்ள RBI, பணி விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியார் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், நிதிசார்ந்த முறைகேடுகளை உன்னிப்பாக கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள 466 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிச.30) நிறைவடைய உள்ளது. Supervisor, Turner உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி : 10th, ITI, UG Degree. வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹19,900-₹92,300. தேர்வு முறை: உடற்தகுதி, எழுத்துத் தேர்வு. கூடுதல் தகவலுக்கு https://marvels.bro.gov.in/ சென்று பார்க்கவும்
Sorry, no posts matched your criteria.