India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. அப்போதுதான், நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் செலவழிப்புக்கான அதிக வருமானம் கிடைக்கும் என்று கேட்டுக்கொண்டுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பாக பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகள் அவரை சந்தித்து வருகின்றனர்.
2025ஆம் ஆண்டு 23 நாள்களை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. ஜன 1 – புத்தாண்டு, ஜன 14 – தைப் பொங்கல், ஜன 15 – திருவள்ளுவர் நாள், ஜன 16 – உழவர் திருநாள், ஜன 26 – குடியரசு தினம், பிப் 11 – தைப்பூசம், மார்ச் 30 – தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 31 – ரம்ஜான், ஏப்ரல் 1 – கணக்கு முடிப்பு, ஏப்ரல் 10 – மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 – புனித வெள்ளி
மே 1 – மே தினம், ஜூன் 7 – பக்ரீத், ஜூலை 6 – முஹர்ரம், ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 – கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27 – விநாயகர் சதுர்த்தி, செப் 5 – மிலாதுன் நபி, அக் 1 – ஆயுத பூஜை, அக் 2 – விஜயதசமி, அக் 20 – தீபாவளி, டிச 25 – கிறிஸ்துமஸ் ஆகிய நாள்களில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
TVK தலைவர் விஜய் நேற்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். அதுகுறித்த செய்தி வெளியீட்டில் ஆளுநர் மாளிகை அவரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டுள்ளது. அவர் தனது பெயரை விஜய் என்றே பயன்படுத்தும் நிலையில் மத சாயம் பூசுவதற்காக சிலர் ‘ஜோசப்’ விஜய் என்று அழுத்தமாக கூறுவதுண்டு. ஆனால், ஆளுநர் மாளிகை தெரிந்தோ தெரியாமலோ ஜோசப் விஜய் என்று பயன்படுத்தியிருக்கும் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 2030ம் ஆண்டுக்குள் இந்திய IT துறையில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கெஸ் IT ஸ்டாப்பிங் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பில், குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்கள் மட்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும், அதிகபட்சமாக பெங்களூருவில் 43.5% வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. கடந்த 26ம் தேதி மண்டல பூஜை முடிந்து கோவில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து, 3 நாள்களுக்கு பிறகு நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இன்றிரவு 11 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும். மண்டல சீசனில் 32.42 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
நடப்பாண்டில் மின்சார வாகன விற்பனை 26.50% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் 15 லட்சம் மின் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பு ஆண்டில் 19.40 லட்சம் மின் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 12 வாகனங்களுக்கு ஒரு மின் வாகனம் என்ற ரீதியில் விற்பனை நடந்துள்ளது. எனினும், வாகன விற்பனையில் பெட்ரோல் வாகனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதாவது, 1.91 கோடி பெட்ரோல் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
▶1879 – வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
▶1984 – ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
▶1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
▶1992 – செக்கோசிலோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.
▶1947 – எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்தநாள்.
▶1989 – நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்தநாள்.
பள்ளிகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் இதர பலன்களை பெற களஞ்சியம் App மூலம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, இச்செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்ட போதும், இதனை முழுவதும் பயன்படுத்தப்படுவது இல்லை என கருவூல கணக்கு துறை தெரிவித்துள்ளது. இதனால், ஜனவரி மாதம் முதல் கட்டாயம் இச்செயலியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டின் முதல் வாரத்திலேயே சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. பயாஸ்கோப், எக்ஸ்ட்ரீம், களன், லாரா ஆகிய படங்கள் ஜன.3ம் தேதி வெளியாக உள்ளன. அதன்படி, கடந்தாண்டை போலவே இந்தாண்டும், சிறிய பட்ஜெட் படங்களுடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து, பொங்கலுக்கு விடாமுயற்சி, வணங்கான், ஜன.26ல் வீர தீர சூரன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.