India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. அதற்காக, அடுத்த நாளும் இப்படியேதான் இருக்கப் போகிறது என்று துவண்டுபோகாமல் பாசிட்டிவாக காலையை தொடங்குவதே புத்துணர்ச்சியின் அடையாளம். ஒரு நாளுக்கே அப்படியென்றால், ஆண்டுக்கு எப்படி இருக்க வேண்டும்? 2025 புத்தாண்டை புதிய resolutionகளுடன் சந்தோஷமாக தொடங்குங்கள். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. HAPPY NEWYEAR
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. நேற்று ₹57,200ஆக இருந்த ஒரு சவரன் தங்கம், இன்று ₹56,880ஆக விற்பனையாகிறது. நேற்று ₹7,150ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று ₹40 குறைந்து ₹7,110ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹98ஆக விற்பனையாகிறது.
FIRஇல் குறிப்பிடப்பட்டுள்ள ‘அந்த சார்’ விவகாரத்தில் காவல்துறை இன்னும் பதில் அளிக்காமல் இருப்பது ஏன் என இபிஎஸ் வினவியுள்ளார். அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அமைச்சரும், காவல்துறையும் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறி வருகிறது எனக் கூறிய அவர், மாணவிக்கு நீதி கிடைக்கவே அதிமுக போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாலிவுட் நட்சத்திரங்களான ஏஞ்சலினா ஜோலி & பிராட் பிட் விவாகரத்து கோரி வழக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014இல் திருமணம் செய்த இருவரும் 2016இல் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். தற்போது, இருவருக்கும் பொதுவான சொத்துகளை பிரித்து கொள்ள இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களுக்கு 6 குழந்தைகள் இருப்பது கவனிக்கத்தக்கது.
சுனாமியையே எதிர்கொண்டு கம்பீரமாக நிற்கும் வள்ளுவர் சிலை பண்பாட்டின் குறியீடு என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை வெளியிட்ட அவர், ‘வள்ளுவர் சிலை வெள்ளி விழா’ எனது வாழ்நாள் பரிசு என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மாவட்டந்தோறும் திருக்குறள் பயிலரங்கம் அமைக்கப்படும் எனவும் டிச. மாதத்தின் கடைசி வாரம் திருக்குறள் வாரமாக கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் ஒப்பிடும் அளவுக்கு ரோஹித் ஷர்மா தகுதியான பேட்ஸ்மேன் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ரோஹித் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது. அவருடைய தற்போதைய தடுமாற்றத்தை சரி செய்ய பேட்டிங் பயிற்சியாளர் முயற்சிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் (ECI) தலையிட முடியாது என EPS கூறியுள்ளார். ‘இரட்டை இலை’ தொடர்பாக ECI எழுப்பிய கேள்விக்கு, ADMK பொதுச் செயலாளர் இபிஎஸ் எழுதிய கடிதத்தை டெல்லியில் டிச.19இல் சி.வி.சண்முகம் அளித்தார். அதில், 2022 ஜூலை 11இல் நடந்த பொதுக்குழு தீர்மானங்களை ஆணையம் அங்கீகரித்துள்ளது எனவும், இரட்டை இலை தொடர்பாக இனி யார் மனுவையும் ஏற்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகளை இழந்த தந்தை, மகள் தேடிய <<15027081>>விபரீத பாதையைத்<<>> தேடிக்கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான காமராஜை, அவரது மகள் சித்ராவின் தற்கொலை (9.12.2020) துயரில் தள்ளியது. சித்ராவின் மரண வழக்கில் 4 ஆண்டுகளாக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர், கடும் மன உளைச்சலில் இருந்த காமராஜ் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என அவரது உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
2024ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை கொண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ஒரு அணியை உருவாக்கியிருக்கிறது. அதில், நமது பும்ரா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ஜெய்ஸ்வால், டக்கெட், ஜோ ரூட், ரச்சின் ரவீந்திரா, ஹாரி ப்ரூக், கமிண்டு மெண்டிஸ், அலெக்ஸ் கேரி, மாட் ஹென்றி, ஹேசல்வுட், மஹாராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் தருவாயில் இருக்கும் நிலையிலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 14 செமீ மழை பதிவாகியிருக்கிறது. மேலும், நாலுமுக்கு – 13 செமீ, காக்காச்சி – 12 செமீ, மாஞ்சோலை – 10 செமீ என கனமழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது.
Sorry, no posts matched your criteria.