news

News December 31, 2024

விஜய் ஹசாரே தொடர்: தமிழக அணி தோல்வி

image

விதர்பா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே தொடரில், தமிழ்நாடு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. முதலில் களமிறங்கிய தமிழக அணி, 48.4 ஓவரில் 256 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய விதர்பா அணி, 43.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் கருண் நாயர் 111 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

News December 31, 2024

பொய் வழக்குகளுக்கு அதிமுக அஞ்சாது: ஜெயக்குமார்

image

பாசிச திமுக அரசின்‌ பொய் வழக்குகளுக்கு அதிமுக அஞ்சாது என்று அக்கட்சியின் EX அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை. விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக EX அமைச்சர்கள் உள்ளிட்டாேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள ஜெயக்குமார், ஜனநாயக ரீதியாக போராட முயன்ற தங்கள் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 31, 2024

புத்தாண்டில் தங்கம் விலை சவரன் ரூ.12,000 உயர வாய்ப்பு

image

ஆபரணத் தங்கம் விலை தற்போது 1 கிராம் ரூ.7,110ஆகவும், சவரன் தங்கம் ரூ.56,880ஆகவும் விற்பனையாகிறது. இந்நிலையில், தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கணக்கிட்டு தங்கம் விலை 2025ஆம் ஆண்டிலும் பல மடங்கு அதிகரிக்ககூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கிராமிற்கு ரூ. 1,400 வரை உயர்ந்து ரூ.8,500ஆகவும், சவரனுக்கு ரூ.12,000 வரை உயர்ந்து ரூ.68,000ஆகவும் அதிகரிக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

News December 31, 2024

யாருப்பா அந்த ‘அப்பாட்டக்கர்’!

image

திருச்சி டிஐஜி வருண்குமாரை ‘அப்பாடக்கர்’ என சீமான் கூறியுள்ளார். உண்மையிலேயே அப்பாடக்கர் யார் தெரியுமா? குஜராத்தை சேர்ந்த அமிர்தலால் விதால்தாஸ் தக்கர் தான் அது. அவரது பெயரே ‘அப்பாடக்கர்’ என மருவிவிட்டது. குஜராத்தில் பெரிய சமூக சீர்திருத்தவாதியாக இருந்தவர். அறிஞர் என்பதால் எந்த கேள்விக்கும் டான் டான் என பதில் சொல்வாராம். அதனால், துடுக்காக பேசுவோரை நீ என்ன அப்பாடக்கரா என கேட்பது வழக்கமாகிவிட்டது.

News December 31, 2024

10ஆம் வகுப்புத் தேர்வு: திருத்தம் செய்ய 2 நாளே அவகாசம்

image

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எண்ணுடன் கூடிய பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விடுபட்டோரின் பெயர்களை சேர்க்கவும், இறப்பு மற்றும் மாற்றுச் சான்று பெற்றோரின் பெயரை நீக்கவும் வருகிற 2ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நாளை மறுதினத்துடன் நிறைவடையவுள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.

News December 31, 2024

தீமைக்கு இன்றே முடிவு கட்டுங்கள்

image

இன்னும் 4 மணி நேரத்தில் 2024க்கு குட் பை சொல்லி விட்டு, 2025ஐ வரவேற்போம். கடைசி நாளான இன்றுடன் தீய பழக்கங்களுக்கு முற்றிப்புள்ளி வைப்பதாக கூறிவிட்டு பார்ட்டி செய்வது வழக்கம். ஆனால், அவர்கள் மீண்டும் தொடரவே செய்வார்கள். எனவே, இன்றே சரக்கு, சிகரெட் அடிப்பது இல்லை; புகையிலை போடுவது இல்லை என்ற தீர்க்கமான முடிவை எடுத்து, புத்தாண்டில் புதிய வாழ்க்கையை தொடங்குங்கள். நீங்க எதற்கு முடிவு கட்ட போறீங்க.

News December 31, 2024

அண்ணா. பல்கலை விவகாரம்: அண்ணாமலை புது அறிவிப்பு

image

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணாமலை தன்னைத் தானே சவுக்கால் அடித்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதையடுத்து இந்த சம்பவத்தை மூடி மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இதை கண்டித்து வரும் 3ஆம் தேதி முதல் பாஜக மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு பேரணி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

News December 31, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காலையில் இருந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும். எனவே, புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட பைக்கில் வேகமாக செல்வதை தவிர்க்கவும்.

News December 31, 2024

பகிரங்க மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

image

மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த அனைத்து துயரங்களுக்காகவும் வருந்துவதாக கூறிய அவர், இந்த ஆண்டு மணிப்பூர் மக்களுக்கு துரதிர்ஷ்டவசமானது என்றார். 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என்றும், அதற்கான முயற்சியை எடுத்து வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

DMK கூட்டணியில் முதல் எதிர்ப்பு குரல்

image

திமுக அரசின் கைது நடவடிக்கைக்கு கூட்டணியில் இருந்து முதல் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன், ஜனநாயக அமைப்பில் பிரச்சாரங்கள், போராட்டங்கள் எல்லாம் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகள். ஆனால் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என எல்லாவற்றிற்கும் அனுமதி தருவதில் காவல்துறை இழுத்தடிக்கிறது. தொட்டதற்கெல்லாம் முன்னெச்சரிக்கை கைது என காவல்துறை நடந்துகொள்வது சரியானதல்ல என சாடியுள்ளார்.

error: Content is protected !!