India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤மேஷம் – பக்தி
➤ ரிஷபம் – பெருமை
➤மிதுனம் – வரவு
➤கடகம் – இன்பம்
➤சிம்மம் – ஆர்வம்
➤கன்னி – நன்மை
➤துலாம் – ஆதாயம்
➤விருச்சிகம் – அன்பு
➤தனுசு – ஜெயம்
➤மகரம் – லாபம்
➤கும்பம் – சுகம் ➤மீனம் – மகிழ்ச்சி.
‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு இல்லை என்ற ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு அஜித் ரசிகர்கள், சம்பவம் பண்ண ரெடியா இருக்காரு தல. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நாளை ட்ரெய்லர் வருது, அதில் உங்களுக்கு எல்லா பதிலும் கிடைக்கும் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். அதற்கு அந்த ட்ரெய்லர் எந்த டைம் வருதுன்னு தான் தெரியவில்லை என நெட்டிசன்களும் பதிலுக்கு கமெண்ட் செய்கின்றனர்.
சீமான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமையை கண்டித்து., சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அனுமதியின்றி போராட்டம் நடத்த முயற்சித்ததால், சீமான் உட்பட நாதக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புத்தாண்டு நாளை பிறப்பதால் எல்லோர் வீட்டிலும் புத்தம் புது காலண்டர்கள் மாட்டப்பட்டிருக்கும். டெய்லி காலண்டர்கள் என்றால் தினசரியும், மாத காலண்டர்கள் என்றால் மாதந்தோறும் அதன் பேஜ்களை மாற்ற வேண்டும். இந்த கஷ்டம் கூட வேண்டாம் என்பதற்காக, ‘ஒன் பேஜ் காலண்டர்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே பக்கத்திலேயே தேதி, கிழமை, வாரத்தை பார்த்துக் கொள்ளலாம். இந்த சூப்பர் காலண்டர் உங்களுக்குதான். SHARE IT.
இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதேபோல், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.
உலக மக்கள் தொகை நாளை 809 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் 2022-2023ம் ஆண்டைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை 7.1 காேடி அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. 2022-23இல் மக்கள் தொகை 7 கோடி அதிகரித்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் 0.9% குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, TN சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேஜஸ்வி சூர்யா தற்போது பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பியாக உள்ளார். திருமணம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டு வாழ்த்து சொல்வதுபோல் மோசடி நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. WhatsApp எண்ணுக்கு புத்தாண்டு வாழ்த்து என வரும் லிங்க் மூலம் இந்த மோசடி அரங்கேறி வருகிறது. செல்போனுக்கு வரும் apk fileஐ திறந்தால் தரவுகள், வங்கி கணக்கு தொடர்பான விவரம் திருட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற லிங்க் வந்தால், கிளிக் செய்ய வேண்டாம். மோசடி ஏதும் நடந்தால் cybercrime.gov.in & 1930 எண்ணில் புகார் பதியலாம்.
பூமியில் உள்ள அனைவருக்கும் ஒருமுறை புத்தாண்டு என்றால், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட (ISS) விண்வெளி வீரர்கள் 16 முறை புத்தாண்டை கொண்டாடுவார்கள். இன்று காலையில் இருந்து பூமியை முன்னும் பின்னுமாக 90 நிமிடத்துக்கு ஒருமுறை சுற்றுவார்கள். அதன் காரணமாக இன்றில் இருந்து நாளை வரை இவர்களுக்கு 16 sunrises and sunsets ஏற்படும். இதன்படி, அவர்களுக்கு 16 தடவை புத்தாண்டு பிறக்கும்.
புத்தாண்டில் குரு, சனி, ராகு பெயர்ச்சிகள் இந்த 3 ராசிகளை கொடிகட்டி பறக்க வைக்கப் போவதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 1) மேஷம்: தொழிலில் முதலீடு செய்து பெரிய லாபத்தை பெறுவீர்கள். புத்திர பாக்கியம் உண்டு. 2) மிதுனம்: தொழிலில் வருமானம் பெருகும். வார்த்தையில் கவனம் தேவை. எதிரிகள் சரணடைவார்கள். 3) கன்னி: பிரச்னைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். சாதுர்யமாக செயல்பட்டால் பண வரவு உண்டு.
Sorry, no posts matched your criteria.