India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் வாழ்த்து வெளியிட்டுள்ளார். அதில் அவர், புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று கூறியுள்ளார். மேலும், பொற்கால ஆட்சியை மாநிலத்தில் மீண்டும் அமைப்போம் என இந்நாளில் சபதமேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தாண்டில் (2025) 23 நாள்களை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று ஜன 1 விடுமுறை. இதையடுத்து, ஜன 14, ஜன 15, ஜன 16, ஜன 26, பிப் 11, மார்ச் 30 விடுமுறையாகும். இதேபோல், மார்ச் 31, ஏப்ரல் 1, ஏப்.10, ஏப்.14, ஏப். 18, மே 1, ஜூன் 7, ஜூலை 6, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 16, ஆகஸ்ட் 27, செப் 5, அக் 1, அக் 2, அக் 20, டிச 25 ஆகிய நாள்களும் அரசு பொது விடுமுறை ஆகும். இந்தத் தகவலை பகிருங்க.
புத்தாண்டு பிறப்பையொட்டி, CM ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் புதிய ஆண்டு, புதிய நம்பிக்கைகள் எனக் குறிப்பிட்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார். அதில், 2025இல் உதய சூரியன் உதயமாகும்போது, அன்பு, சமத்துவம், முன்னேற்றத்துடன் 2024-இன் வெற்றிகளைக் கட்டியெழுப்புவோம் என கூறியுள்ளார். அனைவருக்கும் ஒற்றுமை, சாத்தியங்கள் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
19 கிலோ எடை கொண்ட வர்த்தக உபயோக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது. நேற்று அந்த சிலிண்டரின் விலை ரூ.1,980.50ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை ரூ.1966ஆக குறைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் சிலிண்டர் விலை 1ஆம் தேதி மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வர்த்தக சிலிண்டர் விலை ரூ.16 அதிகரிக்கப்பட்டது. ஆனால் இந்த 1ஆம் தேதி அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது.
* சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் * UPI 123 pay மூலம் இனி ₹10,000 வரை பரிமாற்றம் செய்யலாம். * விவசாயிகள் இனி ₹2 லட்சம் வரை unsecured லோன் பெற்றுக் கொள்ளலாம் * NSE பங்குச்சந்தை தனது expiry தேதிகளில் மாற்றம் செய்துள்ளது * PF பணத்தை ஏடிஎம் மையங்களில் எடுக்கும் வசதி 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. * வருமான வரியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சுவாரஸ்யமான சாதனை பதிவாகியுள்ளது. 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டு 53 டெஸ்ட் போட்டிகளில் 50 போட்டிகள் முடிவு பெற்றுள்ளன. 3 போட்டிகள் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து 9 டெஸ்டிலும், இந்தியா, ஆஸி., நியூசி., தென்னாப்பிரிக்கா, இலங்கை தலா 8 டெஸ்டிலும், வங்கதேசம், அயர்லாந்து, பாக்., வெஸ்ட் இண்டீஸ் தலா 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றன.
1912 – சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
1892 – சுதந்திரப் போராட்ட வீரர் மகாதேவ் தேசாய் பிறந்தநாள்
1951 – நடிகர் நானா படேகர் பிறந்தநாள்
1979 – நடிகை வித்யா பாலன் பிறந்தநாள்
1977 – திரைப்பட இயக்குநர் தாமிரா பிறந்தநாள்
1971 – நடிகர் கலாபவன் மணி பிறந்தநாள்
வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைமுறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதத்தை 3 மாதங்களுக்கு ஒருதடவை மத்திய அரசு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் 4வது காலாண்டுக்கான (ஜன.1 முதல் மார்ச் 31ம் தேதி வரை) சிறுசேமிப்பு திட்ட வட்டிவிகிதம் குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டது. அதில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.
✦மனிதனின் பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை; அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் இருக்கிறது. ✦பெண் அழுதுகொண்டிருக்கும் மாளிகையைவிட அவள் சிரித்துக்கொண்டிருக்கும் குடிசை மேலானது. ✦நாம் அனைவரும் சிறைக்கைதிகள்தான் சிலர் சிறைக்கம்பிகளோடு, சிலர் கம்பிகள் இல்லாமலேயே இருக்கிறோம். ✦இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்
– கலீல் ஜிப்ரான்
மும்பையைச் சேர்ந்த கமலேஷ் காந்தேகர் Graphics Design துறையில் 14 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அதில், மேனேஜர் நிலை வரை சென்ற அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதால், வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மனம் சோர்ந்த அவர், கடைசியில் ஆட்டோ ஒன்றை வாங்கியுள்ளார். ஒருவருக்கு கீழ் உழைப்பதை விட, இப்படி உழைத்தால் சுயமரியாதை, பணம் இரண்டும் கிடைக்கும் எனக்குறிப்பிட்டு linkedinல் அவர் பதிவிட்டது வைரலாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.