news

News January 1, 2025

புத்தாண்டு மகிழ்ச்சி, ஆரோக்கியத்தை கொடுக்கட்டும்

image

2025ஆம் ஆண்டு அனைவருக்கும் செழிப்பைக் கொடுக்கட்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டில், இந்தியாவின் நிலையான வளர்ச்சியை உருவாக்க நாம் அனைவரும் உறுதியுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், 2025ஆம் ஆண்டு, அளவில்லாத மகிழ்ச்சி, ஆரோக்கியத்தை நாட்டு மக்களுக்குக் கொடுக்கட்டும் என PM மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

News January 1, 2025

3 வகை வங்கிக் கணக்குகளை மூடும் RBI

image

அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடிகளை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை RBI இன்று முதல் அமல்படுத்தவுள்ளது. அதன் விளைவாக 3 வகையான வங்கிக்கணக்குகள் இன்று முதல் மூடப்பட உள்ளன. அதாவது, 2 ஆண்டுகள் (அ) அதற்கு மேல் எந்த பரிமாற்றமும் நடக்காத கணக்குகள், செயல்படாத வங்கிக்கணக்குகள், பூஜ்ய பேலன்ஸ் கணக்குகள் மூடப்படும். தங்களது வங்கிக்கணக்குகள் இந்த ரகத்தை சேர்ந்தவையா என சோதித்துக்கொள்வது நல்லது.

News January 1, 2025

விளையாட்டால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

image

புற்றீசல் போல் உருவாகும் சில App நமக்கு பெரும் ஆபத்தை தருகின்றன. கொடைக்கானலில் 13வது சிறுமி, முன் பின் தெரியாதவர்களுடன் Omegle ஆப்பில் வீடியோ காலில் அரட்டை அடித்த போது, விளையாட்டாக ‘ஐ லவ் யூ’ சொன்னதை ரெக்கார்டு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு மிரட்டியுள்ளனர். தனிப்படை அமைத்து ஹரியானா சென்ற TN போலீசார், தினேஷ் என்பவரை தட்டித் தூக்கி அவருக்கு ஜெயில் பாடம் எடுக்கின்றனர். உஷாரா இருங்க மக்களே..

News January 1, 2025

நல்லவங்களை ஆண்டவன் கை விட மாட்டான்: ரஜினிகாந்த்

image

புத்தாண்டு பிறப்பையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் என்றும், கை விட மாட்டான் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் என்றும், ஆனா கை விட்டுடுவான் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். வாழ்த்தில் சிலேடையாக யாரையோ சாடியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 1, 2025

குறையா செல்வம் அருளும் பசுபதீஸ்வரர்

image

கொங்கு மண்டலத்தில் உள்ள சப்த சிவத்தலங்களில் முதன்மையானது ஆதி கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 சிறப்புகளையும் பெற்ற இத்தலத்தில்தான் காமதேனு தனது படைப்பு தொழிலை முதல் முதலாக தொடங்கியதாக ஸ்தல புராணம் கூறுகிறது. மலை, காடு, ஆறு, தீர்த்தம், நகரம், கோயில் எனும் ஆறு மங்கல அம்சங்கள் பொருந்திய இங்கு சென்று ஈசனை வணங்கினால் குறையா செல்வம் கிட்டும் என்பது ஐதீகம்.

News January 1, 2025

நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை: பரபரப்பு பின்னணி

image

நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், சென்னையில் நேற்று தற்கொலை செய்த சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்ராஜ் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டார். மகள் சாவுக்கு காரணமான ஹேம்ராஜ் விடுதலையானதும், அவருக்கு தண்டனை கிடைக்காததாலும் காமராஜ் வருத்தத்திலும், விரக்தியிலும் இருந்துள்ளார். இதனாலேயே தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

News January 1, 2025

சிமெண்ட் விலை உயருகிறது

image

கட்டுமான வேலைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் பொருள்களில் சிமெண்டும் ஒன்று. அதன் விலை அண்மையில், தென் மாநில சந்தைகள் தவிர்த்து பிற சந்தைகளில் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் சிமெண்ட் விலையை நாடு முழுவதும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் விரைவில் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூடைக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை உயர்த்தலாம் எனக் கூறப்படுகிறது.

News January 1, 2025

BRICS உறுப்பு நாடாக புதிதாக இணைந்த 9 நாடுகள்

image

தாய்லாந்து, கியூபா, பெலாரஸ், உகாண்டா, மலேசியா & உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் BRICS அமைப்பின் உறுப்பு நாடுகளாக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. இதன்படி, அந்த அமைப்பில் உறுப்பினர் அந்தஸ்து பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்த 9 நாடுகளில் வர்த்தகம், முதலீடு & சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் BRICS நாடுகளுடனான பொருளாதார உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 1, 2025

புயலால் ஒத்திவைப்பு: நாளை முதல் அரையாண்டு தேர்வுகள்

image

பெஞ்சல் புயல் காரணமாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. அத்தேர்வுகள் நாளை முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதையொட்டி, தேர்வுகளுக்கு தேவையான ஏற்பாட்டை செய்யும்படி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News January 1, 2025

UPI123Pay பணம் அனுப்பும் வரம்பு 2 மடங்கு அதிகரிப்பு

image

FEATURE போன் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கப்பட்டது UPI123Pay செயலி. இதன் மூலம் மற்ற UPI பயனாளர்களுக்கு தினமும் ரூ.5,000 மட்டுமே இதுவரை அனுப்ப முடிந்தது. அதை ரிசர்வ் வங்கி அண்மையில் 2 மடங்கு அதிகரித்தது. அதன்படி, இன்று முதல் ஒருநாளைக்கு ரூ.10,000 வரை அனுப்பலாம். அதேநேரத்தில், மற்ற UPI செயலிகளான GPAY, Paytm, PHONE PE உள்ளிட்டவற்றுக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை. ரூ.1 லட்சம் வரை அனுப்பலாம்.

error: Content is protected !!