news

News January 1, 2025

2025ல் உங்களுக்கே நீங்க சொல்ல நினைக்கும் Advice என்ன

image

புத்தாண்டு தொடங்கிவிட்டது. பல புதிய கனவுகள் இருக்கும். பல புது முயற்சிகள் மேற்கொள்ள திட்டம் போட்டிருப்பீர்கள். இந்த ஆண்டில் பல விஷயங்களை செய்து முடித்திட வேண்டும் என பலர் பல resolution-ம் எடுத்திருப்பீர்கள். இந்த ஆண்டில் நான் இதை நிச்சயமாக தவிர்த்து விட வேண்டும் என உங்களுக்கே நீங்கள் ஒரு Advice சொல்லிக்க வேண்டுமென்றால் என்ன சொல்வீர்கள்? கமெண்ட்டில் சொல்லுங்க….

News January 1, 2025

பொங்கல் தொகுப்புடன் முழுக் கரும்பு: அரசு உத்தரவு

image

பொங்கல் தொகுப்புடன் மக்களுக்கு முழு கரும்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நா. சுப்பையன் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், கரும்பு கொள்முதலில் மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றும், அதிகபட்ச கொள்முதல் விலை ரூ.35ஆக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பொங்கல் தொகுப்புடன் முழு கரும்பை தோகையை வெட்டாமல் முழுதாக வழங்க வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்.

News January 1, 2025

சரிவை சந்தித்த ஸ்மிருதி… ஏற்றம் கண்ட தீப்தி ஷர்மா!

image

சர்வதேச மகளிர் ODI கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (720 புள்ளி) ஒரு இடம் சரிவை சந்தித்து, 3ஆம் இடத்திற்கு வந்துள்ளார். ODI பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஒரு இடம் ஏற்றம் கண்டு 5ஆம் இடத்திற்கு முன்னேறிய தீப்தி ஷர்மா ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளார். அணிகளின் பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது.

News January 1, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

image

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.7,110ஆகவும், 1 சவரன் தங்கம் ரூ.56,880ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.7,150 ஆகவும், 1 சவரன் தங்கம் ரூ.320 அதிகரித்து ரூ.57,200ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ ரூ.98,000ஆகவும் விற்பனையாகிறது.

News January 1, 2025

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

image

The New India Assurance நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. தேசிய அளவில் நிரப்பப்படும் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: UG Degree. வயது வரம்பு: 21-30. சம்பளம்: ₹62,265. விண்ணப்ப கட்டணம்: ₹850. கூடுதல் தகவல்களுக்கு இந்த <>NIACL <<>>லிங்க்கை கிளிக் செய்யவும்.

News January 1, 2025

BREAKING: புதிதாக 14 மாநகராட்சிகள்!

image

இந்தாண்டில், தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 19 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், ஊட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது. மேலும் 50 நகராட்சிகளின் எல்லையும் விரிவடைகிறது. 25 மாநகராட்சிகள் உள்ள நிலையில், மாவட்டத்திற்கு ஒரு மாநகராட்சி என புதிதாக 14 மாநகராட்சிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

News January 1, 2025

148 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை நடந்த சாதனை

image

148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 2024ல் அரிய சாதனை ஒன்று பதிவாகியிருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 53 டெஸ்ட் போட்டிகளில் 50 போட்டிகளில் முடிவுகள் கிடைத்துள்ளது. மூன்று போட்டிகள் டிராவில் முடிந்தன. இங்கி. 9 டெஸ்டிலும், இந்தியா 8, ஆஸி., நியூசி., தென்னாப்பிரிக்கா, இலங்கை தலா 8 டெஸ்டிலும், வங்கதேசம், அயர்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் தலா 2 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

News January 1, 2025

ஆண்டின் முதல் சூரிய உதயத்தை யார் பார்த்தீங்க?

image

புது வருஷம் தொடங்கியாச்சு. இரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க பலரும் பார்ட்டிகளில் ஈடுபட்டிருப்பீர்கள். பீச், ஹோட்டல் என பலவிதமாக புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாடித் தீர்த்திருப்பீர்கள். ஆனால், தொடங்கிய புத்தாண்டின் முதல் நாளை நமக்கு கொடுத்த முதல் சூரிய உதயத்தை யாரெல்லாம் கண்டு களித்தீர்கள் என கமெண்ட் பண்ணுங்க. இதுவும் ஒரு புது வரவேற்பு தானே.

News January 1, 2025

2025ல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுது

image

இந்த புத்தாண்டில் நிகழும் சனி, குரு பெயர்ச்சி பலன்களின் அடிப்படையில், * மீனம்: குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். வேலையில் அடுத்தடுத்த முன்னேற்றங்களை பெற்று பணவரவு அதிகரிக்கும் சூழல் உண்டு * சிம்மம்: காதல் கைகூடும். பணம் தொடர்பான விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும் *துலாம்: வாழ்க்கை துணையால் பெருமை கிட்டும். வேலை – வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். சொத்துகளை வாங்கும் நிலை உருவாகும்.

News January 1, 2025

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் விரைவில் ஓய்வு

image

இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, ஏற்கெனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். எனினும், டெஸ்ட், ODI போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஆஸி. டெஸ்ட் தொடரில் அவர் ரன் குவிக்க திணறி வருவதை அடுத்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சிட்னி டெஸ்ட் தொடரின் முடிவில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!