news

News January 1, 2025

அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா..?

image

ஒருவழியாக அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (ஜன.2) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. 9 நாட்கள் விடுமுறையை கழித்த மாணவர்கள், பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நாளை பள்ளி திறந்தால், இரு நாட்கள் மட்டுமே ஸ்கூல் இருக்கும். பிறகு வாரவிடுமுறை வந்துவிடும். எனவே, சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்களை கருத்தில்கொண்டு, ஜன.6 ஆம் தேதி பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 1, 2025

இன்றைய ஹாட் பிசினஸ் இதுதான்!

image

வருடத்தின் முதல் நாள், என்னோட உடம்ப இரும்பாக்குகிறேன் என்றே குறிக்கோளை வைத்து ஜிம்மில் அடியெடுத்து வைக்கும் கூட்டம் அதிகம். ஆனால், ஏனோ கொஞ்ச நாளில் அதை கைவிடுவார்கள். பொதுவாக கூறவில்லை, அப்படி சிலர் நமது குரூப்பிலும் இருப்பார்களே. இவர்களை வைத்து ஒரு பெரிய பிசினஸே இன்று பெரிய கல்லாக்கட்டுகிறது. இவர்களை குறிவைத்து சில ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. அப்படி பார்த்தால் இன்று ஹாட் பிசினஸ் இதுதான்.

News January 1, 2025

சொன்னீங்களே…செஞ்சீங்களா!!

image

2024-ம் ஆண்டுக்குள் நாட்டின் சாலைகள் ​​அமெரிக்காவில் இருக்கும் சாலைகள் தரத்திற்கு உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 2022 டிசம்பரில் கூறியதை நெட்டிசன்கள் தற்போது நினைவு கூர்ந்து விமர்சித்து வருகின்றனர். அறிவிப்பு வந்து 2 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், இன்னும் நாட்டின் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை பதிவிடும் நெட்டிசன்கள் இது குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

News January 1, 2025

லீவு ஓவர்.. நாளை அனைத்து பள்ளிகளும் திறப்பு!

image

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் டிச.23ஆம் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. டிச.24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, பல மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கிறிஸ்துமஸ், புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், 9 நாட்கள் விடுமுறை முடிந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (ஜன.2) திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

News January 1, 2025

உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனை யார்?

image

உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் பேட்மிண்டன் வீராங்கனைகளில் இந்தியாவின் PV சிந்து (29) முதலிடம் பிடித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை 2024இல் அதிகம் சம்பாதித்த வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 2024இல் PV சிந்து ₹61 கோடியை வருமானமாக ஈட்டியதாக (போட்டிகளில் வென்ற தொகை ₹86 லட்சம், விளம்பர ஒப்பந்தம் ₹60 கோடி) கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 6ஆவது ஆண்டாக போர்ப்ஸ் பட்டியலில் அவர் இடம்பிடித்துள்ளார்.

News January 1, 2025

7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் கொடுத்த செல்வா

image

இயக்குனர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலனி” படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணாவே இப்படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். நாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிப்பதாக தகவல் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News January 1, 2025

திருத்தணி முருகனை தரிசித்த யோகிபாபு

image

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் யோகி பாபு இன்று திருத்தணி முருகன் கோயில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்ய அவர் வந்ததை அறிந்த ரசிகர்களும், பக்தர்களும் அவருக்கு கை கொடுத்தும், புகைப்படம் எடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் கோயிலுக்குள் சென்ற அவர் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து வணங்கினார். சாமி தரிசனத்திற்குப் பின், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

News January 1, 2025

கொலைத் தொழில் ஆட்சியை அகற்ற உழைப்போம்: ராமதாஸ்

image

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “அறவழி மீறி மக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரை விடக் கொடியது என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் இப்போது நடக்கும் அத்தகைய ஆட்சியை அகற்ற 2025ஆம் ஆண்டில் வலிமையான அடித்தளம் அமைப்போம். நேர்மையான ஆட்சி அமைய பாமகவினர் கடுமையாக உழைக்க வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார்.

News January 1, 2025

BREAKING: மீண்டும் கனமழை எச்சரிக்கை

image

நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2025

BGTயில் புஜாராவை தவிர்த்ததா BCCI? கம்பீர் வைத்த கோரிக்கை

image

இந்திய அணி BGT தொடரில் தடுமாறி வரும் சூழலில் ரசிகர்கள் அணியில் புஜாரா இருந்திருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். தலைமை பயிற்சியாளர் கம்பீரும் தொடரில் புஜாரா விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளிவருகின்றன. ஆஸி.யில் இதுவரை 11 டெஸ்ட் மேட்சில் விளையாடியுள்ள புஜாரா 993 ரன்களை குவித்துள்ளார். அவரின் Average 47.23. இது ஒரு Costly தவறோ என தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!