news

News December 15, 2024

இயக்குநராகும் நடிகர் சூரி..!

image

நடிகர் சூரி விரைவில் படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது அப்பா முத்துச்சாமி மற்றும் அம்மா சேங்கையரசியின் வாழ்க்கையை படமாக இயக்க உள்ளதாக கூறியுள்ளார். இதை கூறும்போது சாதாரணமாக தெரியும், ஆனால், ஷேர் பண்ணுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 6 பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பெற்ற கஷ்டத்தை படமாக்க வேண்டும் என்பது சூரியின் நீண்டநாள் கனவு.

News December 15, 2024

2026 தேர்தல் கூட்டணி.. இபிஎஸ் கூறியது என்ன?

image

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களும், நிர்வாகிகளும் விரும்பும் கூட்டணி அமையும் என இபிஎஸ் கூறியுள்ளார். பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அவர், 234 தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக அரசின் அவலங்களை மக்களிடம் கூற உள்ளதாகத் தெரிவித்தார். கட்சிக்கு உண்மையான விசுவாசத்துடன் இருப்போருக்கு வரும் தேர்தலில் நிச்சயமாகச் சீட்டு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

News December 15, 2024

ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன தமிழக வீராங்கனை

image

தமிழக வீராங்கனை ஜி.கமலினி மகளிர் ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் டீம்க்கு ரூ.1.6 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார். 16 வயதான கமலினியை டீமில் எடுக்க டெல்லிக்கும் மும்பைக்கும் கடுமையான போட்டி நிலவியது. ரூ.10 லட்சம் பேஸ் ரேட்டில் இருந்து ரூ.1.6 கோடியாக ஏறியதற்கு அதுவே காரணம். U19 மகளிர் டி20 போட்டிகளில் 311 ரன்கள் எடுத்து தமிழ்நாட்டை வெற்றி பெறச் செய்தவர். நீ கலக்கு ராசாத்தி!

News December 15, 2024

மன்னராட்சி நடத்தும் திமுக: இபிஎஸ் விளாசல்

image

திமுகவில் CM ஆக வரவேண்டும் என்றால் கருணாநிதி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என இபிஎஸ் சாடியுள்ளார். உதயநிதியின் பெயரைக் கூறாமல் ஒருவருக்கு முடிசூட்டும் முயற்சி நடப்பதாகவும் விமர்சித்தார். மன்னராட்சி(DMK) மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால், இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், 2026 தேர்தலில் அதிமுக 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறினார்.

News December 15, 2024

“₹2,000 வேண்டாம்; ₹6000 கொடுங்க” கூட்டணி கட்சிகள்

image

பாகுபாடு பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக கூட்டணியில் உள்ள தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் ₹6,000 நிவாரணம் வழங்கிய அரசு, மற்ற மாவட்டங்களில் ₹2,000 வழங்குவது ஏற்புடையதல்ல எனவும் சாடியுள்ளார். அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள VCK தலைவர் திருமாவும், வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு ₹5,000 வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 15, 2024

மெகா ஹிட் டைரக்டருடன் இணையும் சூர்யா?

image

‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் அடுத்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் நிறுவனர் நாக வம்சி, சமீபத்தில் சூர்யாவை சந்தித்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’ தோல்விக்கு பிறகு கதை தேர்வில் சூர்யா அதிக கவனம் செலுத்துவதால், இந்த கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News December 15, 2024

19ஆம் தேதி வரை கனமழை

image

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரத்தில் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது, மேலும், வரும் 19ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News December 15, 2024

ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று 38 தொகுதிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நியூ டெல்லி தொகுதியிலும் முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர். பிப். 2025-ல் டெல்லி மாநில தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 15, 2024

அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கொடுத்த ஐடியா!

image

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த இபிஎஸ், அவரவர் மாவட்டங்களில் மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து நிர்வாகிகள் போராட்டத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மழை பாதிப்பு, வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட இன்னல்களை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடந்த 43 மாதங்களில் 113 நாட்கள் மட்டுமே பேரவைக் கூட்டம் நடந்துள்ளதாகவும் கூறினார்.

News December 15, 2024

‘விடுதலை-2’ படத்திற்கு A சான்றிதழ்

image

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘விடுதலை-2’ படத்திற்கு தணிக்கை குழு ‘A’ சான்றிதழை வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், டிச.,20ஆம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘விடுதலை-‘ பாகத்தைப் போல, இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!