news

News January 2, 2025

5வது டெஸ்டில் ஆஸி.யில் மார்ஷுக்கு பதில் அறிமுக வீரர்

image

5வது BGT டெஸ்டிற்கு ஆஸி. அணியில் ஆல் – ரவுண்டர் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார். அவர் சில காலமாக டெஸ்டில் தடுமாறி வருகிறார். அவருக்கு பதிலாக, உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும், வெப்ஸ்டர் அறிமுக இருக்கிறார். ஆஸி. அணி: கான்ஸ்டாஸ், கவாஜா, லபுஷேன், ஸ்மித், ஹெட், கம்மின்ஸ், பியூ வெப்ஸ்டர், கேர்ரி, ஸ்டார்க், லயன், போலந்து.

News January 2, 2025

நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

image

ரேஷன் கடைகளில் நாளை முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்புத் தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில், அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் நாளை முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

News January 2, 2025

ஆனந்த் அம்பானி கையில் ரூ.22.5 கோடி வாட்ச்

image

கோடி ரூபாய்க்கு எத்தனை பூஜ்ஜியம் எனக் கூட தெரியாத சில மக்கள் வாழும் இந்தியாவில், ஆனந்த் அம்பானியின் வாட்ச் ₹22 கோடியா என நெட்டிசன்கள் வாயைப் பிளக்கின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்த் அம்பானி தனது மனைவி ராதிகா மெர்ச்சன்ட் உடன் இருக்கும் போட்டோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. நீல நிறத்தில் கண்ணைப் பறிக்கும் வகையில் உள்ள இந்த Richard Mille RM 052 வாட்ச் உலகிலேயே 3 மட்டுமே உள்ளதாம்.

News January 2, 2025

மீண்டும் உயிர்பெற்ற 1500 பேர்

image

2024ஆம் ஆண்டு மாநிலத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் 1500 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு தமிழகத்தில் அரசு மரியாதையும் செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 1500 பேருக்கு வாழ்க்கை அளிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

கடைசி டெஸ்டில் பண்ட்டிற்கு பதிலாக இளம் வீரர்

image

BGT கடைசி டெஸ்டில் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளில் சொதப்பும், பண்ட்டிற்கு பதிலாக ஜுரேல் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது. 4வது போட்டிக்கு பிறகு ரோஹித் பண்ட்டை விமர்சித்து பேசியதை தொடர்ந்து இம்மாற்றம் வரலாம் எனப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் அணி: ஜெய்ஸ்வால், ரோஹித், கே.எல்.ராகுல், கோலி, பண்ட்/ ஜூரேல், நிதிஷ், ஜடேஜா, சுந்தர், பும்ரா, சிராஜ், தீப்.

News January 2, 2025

சென்னையில் காய்கறி விலை சரிவு

image

சென்னையில் பூண்டு, வெங்காயம், முருங்கை விலை சரிவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் ₹400க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பூண்டு இன்று ₹280க்கு விற்பனையாகிறது. அதேபோல், கடந்த வாரம் ₹70க்கு விற்ற கிலோ வெங்காயம் இன்று ரூ.40க்கும், கடந்த வாரம் ₹30க்கு விற்பனையான கிலோ தக்காளி இன்று ₹20க்கும் விற்பனையாகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரிப்பால் விலை சரிவைக் கண்டுள்ளது.

News January 2, 2025

ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லாமலே இனி திருமணப் பதிவு

image

ஆன்லைனில் திருமணப் பதிவு திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வர TN அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் பதிவு கட்டணம் ₹100, கணினி கட்டணம் ₹100 என மொத்தம் ₹200 தான். ஆனால் சில இடங்களில் ₹10,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. நடைமுறை சிக்கல்களை களைந்து ‘ஸ்டார்-3’ மூலம் தம்பதிகள் ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லாமல், தேவையான ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்து சான்று பெற வழிவகை செய்கிறது.

News January 2, 2025

ஒரு எருமை மாட்டினால் இவ்வளவு அக்கப்போரா…

image

இது எங்க மாடு, நாங்க பலிகொடுக்க நேர்ந்து விட்டது என எருமை மாட்டினால், கர்நாடக – ஆந்திர மாநில எல்லை கிராமத்தினர் மோதி வருகிறார்கள். பொம்மனஹல்லைச் (கர்நாடகா) சேர்ந்த விவசாயி மாட்டை காணவில்லை என தேடி, மெட்டஹல்லில் (ஆந்திரா) கண்டுபிடித்தார். இருகிராமத்தினரும் இது தங்கள் மாடு என முரண்டுபிடிக்க, பஞ்சாயத்து போலீசிடம் வந்தது. திணறி போனவர்கள், DNA டெஸ்ட் எடுத்து முடிவு செய்யலாம் என இறங்கி விட்டார்கள்.

News January 2, 2025

அனைத்து பள்ளிகளிலும் இன்றே நோட்டு புத்தகம்

image

மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மூன்றாம் பருவத்திற்கான நோட்டு, புத்தகங்கள் இன்றே வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இன்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. சீருடைகளும் இன்றே விநியோகிக்கப்பட்டு, நாளை முதல் தடங்கலின்றி பாடங்களை நடத்த பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

ஜன.6 முதல் 28 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்

image

28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசரச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் வரும் 5ஆம் தேதி நிறைவடைகிறது. அந்த 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. தேர்தலை நடத்தத் திமுக அஞ்சுவதாக ஒருபுறம் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

error: Content is protected !!