India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறையில் மிக உயரிய இவ்விருது, உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கும், ஒலிம்பிக் துப்பாக்கிச்சூடுதலில் 2 பதக்கங்கள் வென்ற மனு பாக்கருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமாரும் கேல் ரத்னா விருது பெறுகின்றனர்.
உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, 2050-க்குள் 31 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பார்கள் என்றும், இதன் மூலம் முஸ்லிம் மக்கள்தொகையில் இந்தோனேசியாவை இந்தியா முந்தும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் சராசரி வயது 28-க்கு கீழே இருப்பதும், அதிக கருவுறுதல் விகிதம் இருப்பதுமே இதற்கு காரணமாம்.
இந்திய பங்குச்சந்தைகள் இன்று கணிசமான உயர்வைக் கண்டுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 387 (1.67%) புள்ளிகளும் சென்செக்ஸ் 1,218 புள்ளிகளும் உயர்ந்துள்ளது. புத்தாண்டையொட்டி பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்கள் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே, தனது நாட்டில் இனி மரண தண்டனைகள் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஆனால், வளர்ந்த நாடான இந்தியாவில் இன்னும் மரண தண்டனைகள் தொடர்வது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை அரசாங்கமே வழங்குவது கொடுமையான விஷயம் எனவும் குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவதே சரியான நடைமுறை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
டெஸ்லா சைபர் டிரக்கில் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு காரணமாகவே வெடி விபத்து ஏற்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வெடி விபத்துக்கு டெஸ்லா சைபர் டிரக் காரணமில்லை என உறுதிப்படுத்தியுள்ளார். வாகனம் வெடித்த நேரத்தில் அனைத்து பாகங்களும் சரியாக செயல்பட்டதாக உயர்மட்ட அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
காலையில் சீக்கிரமாக எழுவேன், ஜிம் போவேன், மது – சிகரெட்டை கைவிடுவேன், இனி லைப்பில் productive ஆக இருப்பேன் என புத்தாண்டிற்கு முன்பே நான் இப்படியெல்லாம் மாறப்போகிறேன் என resolution லிஸ்ட் போட்டிருப்பீர்கள். நேற்று ஒரு நாள் கடந்தாகி விட்டது. நினைத்த Resolutionஐ நேற்று ஒருநாள் யாரெல்லாம் கரெக்ட்டா பண்ணீங்க. யார் பொங்கல் வரைக்கும் லீவ் விட்டுடீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
இவரை அதற்கு முன் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், ஒரே ஒரு படம் தான், இந்திய சினிமாவில் முக்கிய டானாக உயர்ந்தார். படத்தின் பார்ட் 2 இந்தியளவில் பெரும் வெற்றியை பெற்று, இந்த இண்டஸ்ட்ரியில் இருந்து இப்படியொரு படமா என பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இன்றைய பான் இந்திய ஸ்டார்களில் முக்கிய நடிகராக இருக்கும் இவரை இன்னுமா யார் என தெரியவில்லை.
மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. PPF, SSY, SCSS ஆகிய திட்டங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட வட்டியே ஜனவரி முதல் மார்ச் வரை வழங்கப்படவுள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளதால் சிறு சேமிப்பு வட்டியில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
நடிகர் S.V.சேகரின் ஒரு மாதகால சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பெண் பத்திரிகையாளர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஒருமாத காலம் சிறை தண்டனை விதித்திருந்தது. அதனை எதிர்த்து SV சேகர் தொடர்ந்திருந்த மேல் முறையீட்டு வழக்கில், சிறை தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.
மிஷ்கின் இயக்கத்தில் நீண்ட காலமாக வெளிவராமல் இருக்கும், பிசாசு 2 படம் வரும் மார்ச் 2025ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. படத்தில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சலித்து போன பேய் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான படமாக வந்து மக்களை கவர்ந்தது பிசாசு என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.