news

News January 2, 2025

அதிமுக நிர்வாகி நிர்மல் குமாருக்கு முன்ஜாமீன்

image

அதிமுக நிர்வாகி CTR.நிர்மல்குமாருக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் பெய்த கனமழையால் மின்கசிவு என பொய் தகவல்களை பரப்பியதாக, நிர்மல்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் நிர்மல் குமார் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது.

News January 2, 2025

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்..!

image

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் C மற்றும் D பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 163.81 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

News January 2, 2025

BREAKING: கேப்டனாக பும்ரா நியமனம்

image

ஆஸி., அணிக்கு எதிரான BGT டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் IND மோசமாக விளையாடியதால், ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், கடைசி போட்டியில் இருந்து ரோஹித் விலகியுள்ளார். அவருக்கு பதில் கில் அணியில் சேர்க்கப்பட்டு, கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

இஸ்ரேல் தாக்குதலில் 10 பேர் பலி!

image

ஹமாஸ் படையினருக்கு எதிராக, கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பாலஸ்தீனம் உருக்குலைந்து போயுள்ளது. இதில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்த சூழலில், வீடு மற்றும் உறவுகளை இழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முவாசி பகுதியில் இஸ்ரேல் இன்று அதிகாலை பயங்கர வான் தாக்குதலை நடத்தியது. இதில் 3 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News January 2, 2025

திருப்பதியில் ₹1,365 கோடி உண்டியல் காணிக்கை

image

கடந்த 2024ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹1,365 கோடி உண்டியல் காணிக்கை வரப்பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். 99 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 6.30 கோடி பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 12.14 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News January 2, 2025

3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருதுகள்

image

பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமணி முருகேசனுக்கும், வெண்கல பதக்கம் வென்ற மணிஷா ராமதாஸுக்கும்
2024ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடகள வீராங்கனை அன்னு ராணி, செஸ் வீராங்கனை வந்திகா அகர்வால், பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் பதக்கங்கள் வென்ற நித்யஸ்ரீ சுமதி சிவன், நிதேஷ்குமார் உள்ளிட்ட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

MHஇல் மீண்டும் ஒன்றாக இணைகிறதா என்சிபி?

image

சரத் பவாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என அஜித் பவாரின் தாயார் அஷதை பவார் விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவரது உறவினரும், NCP மூத்த தலைவருமான பிரபு படேலும் இந்த கருத்தைக் கூறியிருந்த நிலையில், NCP மீண்டும் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. டிச.12ம் தேதி 84ஆவது பிறந்தநாள் கொண்டாடிய சரத் பவாரிடம் அஜித் பவார் தனது மனைவியுடன் நேரில் சென்று ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கடைசி வாய்ப்பு!

image

போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, ரேஷன் அட்டைதாரர்கள் சுய விவரங்களை (KYC) அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு, ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டும். இல்லையெனில், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இதற்கான காலக்கெடு டிச.31 உடன் முடிவடைந்த நிலையில், அவகாசத்தை இன்னும் சில நாட்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. எனவே இதனை விரைந்து முடிப்பது நல்லது.

News January 2, 2025

சீரியலுக்கு வெளியே ஒரு ஸ்வீட் அப்டேட்

image

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரின் ஹீரோ, ரியல் ஃலைப்பில் நடந்த ஸ்வீட்டான அப்டேட்டை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான அவர், அழகு, அம்மன், கயல் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். 13 ஆண்டுகளாக காதலித்த தெரசாவை கடந்த ஆண்டு கைப்பிடித்தவர், தற்போது அப்பாவாக உள்ளார். இவரது தங்கை அன்ஷிதா தான் பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா.

News January 2, 2025

ஜெட் வேகத்தில் உயரும் சின்ன வெங்காயம் விலை!

image

சின்ன வெங்காயத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து, பெருமளவு குறைந்ததே இதற்கு காரணம். கோயம்பேடு மொத்த சந்தையில் 4 நாட்களுக்கு முன்பு வரை கூட ரூ.70-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், இன்று ரூ.130-க்கு விற்கப்படுகிறது. சில்லறை கடைகளில் ரூ.150 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!