India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் பாண்டுரங் (65). கடந்த டிச.16ல் மாரடைப்பு ஏற்பட்டதால், குடும்பத்தினர் அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றனர். ஆனால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறவே, சடலத்தை ஆம்புலன்ஸில் வைத்து கொண்டுவந்துள்ளனர். அப்போது, ஆம்புலன்ஸ் வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது, அவரது உடலில் அசைவுகள் தெரிந்துள்ளது. இதையடுத்து வேறு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், அவர் உயிர்பிழைத்து வந்துள்ளார்.
தமிழக மக்களுக்காக அண்ணாமலை தன்னையே வருத்திக் கொள்வதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். மக்களுக்கு நீதி கிடைக்க தன்னை வருத்திக்கொள்ளும் அண்ணாமலையை பாராட்ட மனமில்லாமல், அவர் செய்யும் நல்லவற்றை மக்களிடம் மறைக்கும் வேலையை திமுக செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியலில் அண்ணாமலை தவிர்க்க முடியாத சக்தியாக மாறுவார் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.
2025இல் அடியெடுத்து வைத்துள்ள ரோகித்துக்கு தொடக்கமே மோசமாக மாறியிருக்கிறது. சமீபத்தில் 2வது குழந்தையை வரவேற்ற மகிழ்ச்சியில் இருந்த அவருக்கும், ரசிகர்களுக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் என்பது துக்கத்தின் விளிம்புக்கே அழைத்து சென்றுள்ளது. மனித வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்து, பழைய ரோகித்தாக மீண்டு வாங்க என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு (C, D பிரிவு) பொங்கல் போனஸை முதல்வர் இன்று அறிவித்தார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 போனஸாக வழங்கப்படவுள்ளது. ஆனால், இந்த போனஸ் தங்களுக்கு போதாது என தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல, ரூ.7000 போனஸை முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மக்களுக்காக உழைக்கும் திராவிட மாடல் அரசை குறை கூற காரணங்கள் இன்றி, இபிஎஸ் பொய் கூறுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஒரே பொய்யை அரைத்து அரைத்து மக்களை ஏய்க்க நினைக்கும் இபிஎஸ்-ஐ மக்கள் புறக்கணிப்பார்கள் எனக் கூறிய அவர், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் சமரசமின்றி திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், இது உண்மைதான். 1959ஆம் ஆண்டு 11.66 கிராம் தங்கத்தின் விலை ₹113 தான். இதன் பொருள், 1 கிராம் தங்கம் ₹10க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முந்தையை இந்த ரசீதை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆகியுள்ளனர். இன்றைக்கு ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் ₹57,440 தேவைப்படுகிறது. ஆனால், அந்த காலத்தில் ₹113 என்பதும் பெரிய தொகைதான்.
திமுக ஆட்சிக்கு வந்தபின் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அண்ணாமலை குறை கூறியுள்ளார். தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹44,042 கோடி எங்கு சென்றது என கேள்வி எழுப்பிய அவர், திமுக மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி எம்.பிக்கள் வரை தனியார் பள்ளிகளை நடத்துகின்றனர். எனவே, அரசுப் பள்ளிகளின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலை.விவகாரத்தில் போராட்டம் நடத்த முயன்றதால் கைதான சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இதன்பின் பேசிய செளமியா, மாநிலத்தில் பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன; பெண்கள் பயத்துடன் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், பெண்களுக்கு அரசு கொடுக்கும் ₹1000 வேண்டாம்; பாதுகாப்புதான் வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தினால்கூட அரசு கைது செய்கிறது என்றார்.
புதன் – சூரிய பகவான் பெயர்ச்சியால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம், 3 ராசிக்காரர்களை குபேரன் போல மாற்றும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, மேஷம், துலாம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இனி பணப் பிரச்னை நீங்கும். சிக்கலில் இருந்த பணம் வீடு தேடி வரும். முதலீடு நல்ல லாபத்தை தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். மகிழ்ச்சி பல மடங்கு பெருகும். உடல்நலனில் கவனம் தேவை.
இந்த தலைமுறையினரிடம் நியூ இயர் கொண்டாட்டங்கள் மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பார், பப் என்பது மட்டுமில்லாமல் இறை வழிபாட்டிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. காசி, அயோத்தி, திருப்பதி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் டிச.31 மற்றும் ஜன.1 லட்சக்கணக்கான மக்கள் கூடியதே இதற்கு உதாரணம். சுருக்கமாக சொல்வதானால் ஆங்கில புத்தாண்டு இந்தியமயமாக மாறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.