India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிட்னியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இப்போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக டாஸ் போட வந்தார். ரோஹித் விருப்ப ஓய்வு எடுத்துள்ளதாகவும், அவர் கூறினார். ரோஹித்துக்குப் பதிலாக கில் இறுதி அணியிலும், ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக பரிசித் கிருஷ்ணாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் வியூக நிபுணரும், ஜன சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர், பாட்னாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார். பீகார் மாநில தேர்வாணையம் சார்பில் கடந்த மாதம் 13ஆம் தேதி போட்டித்தேர்வு நடந்தது. இத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை, விற்பனை செய்த அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்னர் நிறுத்தப்பட வேணடும் என்று அவர் வலியுறுத்தி உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ளார்.
தனது கட்டுபாட்டில் இருந்து அதிமுக கை நழுவி போய்விடுமோ என EPS அச்சத்தில் இருப்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். EPS மட்டமான அரசியல் செய்வதாகவும், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தை வைத்து தனது இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க துடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வீண் வதந்தி பரப்புபவர்களை மக்கள் புறந்தள்ளுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
காஸாவில் உள்ள ஹமாஸ் தளங்கள் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 54 குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காசா நிர்வாகம் கூறியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் பதுங்கியிருந்த அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும் கொதித்துள்ளது. இதனிடையே, தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.
நடப்பாண்டு 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹249.76 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை TN அரசு வழங்க உள்ளது. இதில், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் இன்று முதல் வீடு வீடாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதில், பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
TN பாஜக தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரியாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியில் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கையை தொடர்ந்து அமைப்பு தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் மாவட்ட, மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அண்ணாமலை மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 137 ▶குறள்: ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. ▶பொருள்: ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.
வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி, சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், இன்று கூடுதலாக 245 பஸ்களும், நாளை 240 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளில் பயணிக்க TNSETC இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். இதேபோல பிற மாவட்டங்களில் இருந்தும் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
‘STR48’ படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், தேசிங் பெரியசாமி உடன் இருக்கும் போட்டோவை சிம்பு பகிர்ந்துள்ளார். வரலாற்று பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த பிரமாண்ட படமாக உருவாக இருக்கும் ‘STR48’-க்கு மிகப்பெரிய பட்ஜெட் செலவாகும் என்பதால், கமல் விலகியதாகவும், படம் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் கைகோர்த்தபடி இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இன்று (ஜன.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.