India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
INDIA கூட்டணியில் வந்து சேர்ந்துக் கொள்ளுமாறு பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு RJD தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 12 இடங்களும் நிதீஷின் JDU 12 இடங்களும் பெற்று மத்தியில் கூட்டணி ஆட்சியமைத்துள்ளன. இந்நிலையில், லாலுவின் அழைப்பு தொடர்பான கேள்விக்கு நிதீஷ்குமார் பதிலளிக்காமல் சென்றார்.
ரோஹித் ஷர்மாவிற்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட சுப்மன் கில், லயன் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 20(63) ரன்களில் வெளியேறினார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 25 ஓவர்களில் 57-3 ரன்கள் தடுமாறி வருகிறது. களத்தில் கோலி 12 (48) இருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழைக வன்கொடுமையை எதிர்த்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக பாஜக அறிவித்திருந்தது. அதற்கு போலீசார் அனுமதி மறுத்திருக்கும் நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னையில் போராடிய அதிமுக, பாமக, நாதக ஆகியோர் கைதான நிலையில், இன்று பாஜகவினர் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் 10% அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2014-15ஆம் நிதியாண்டில் 47.15 கோடியாக இருந்த வேலை வாய்ப்புகள், 2023-24ஆம் நிதியாண்டில் 64.33 கோடியாக உயர்ந்துள்ளதாகக் கூறினார். கடந்த நிதியாண்டில் மட்டும் 4.60 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிட்னியில் நடைபெறும் 5வது டெஸ்டில் தொடக்கத்திலேயே இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ராகுல் (4), ஜெய்ஸ்வால் (10) ரன்களுடன் முதலில் அவுட்டாகினர். தற்போது கோலி(8), கில்(9) விளையாடி வருகிறார்கள். 11 ஓவர்களில் இந்திய ஸ்கோர் 32/2.
மத்திய அரசின் ‘பாஷினி’ திட்டத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமிழ் மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் உலகில் பரவலாக தமிழ் மொழியை விரிவுபடுத்தவும் முடியும் என்கிற வகையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ‘பாஷினி’ செயலி மூலம் PM மோடியின் உரைகள், தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.
அறுவடைக்குப் பின் விளை பொருள்களை பாதுகாக்க, TN முழுவதும் உள்ள பதப்படுத்தும் நிலையங்கள் எங்கு உள்ளன என்பதை அறிய, ‘டி.என்.எபெக்ஸ்’ நிறுவனம் செயலியை உருவாக்கியுள்ளது. இச்செயலி மூலம் விவசாயிகள் அறுவடைக்குப் பின், அருகில் உள்ள கிடங்குகள் விவரம் அறிந்து உரிய விலை கிடைக்கும் வரை, விளை பொருள்களை அதில் பாதுகாக்கலாம். இதனை பொங்கலுக்கு செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பான சிறப்பு குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு விசாரணையில், தேர்வை வழக்கமான வினாத்தாள் அடிப்படையில் நடத்தலாமா, ஆன்லைனில் நடத்தலாமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, விசாரணை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
BGT 5வது டெஸ்டில் ரோஹித்துக்கு பதிலாக பும்ரா டாஸ் போட வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக, இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் எனவும், ரோஹித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அவை உண்மையாகி, அவர் அணியில் இல்லாதது பல சந்தேகங்களை எழுப்புகிறது. பும்ரா சொன்னது போல் ரோஹித் ஓய்வில் உள்ளாரா (அ) கழட்டி விடப்பட்டாரா என்பது விவாதமாகியுள்ளது.
▶1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.
▶1995 – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
▶1831 – சமூக சீர்திருத்தவாதி சாவித்ரிபாய் புலே,
▶1989 – பின்னணிப் பாடகி சைந்தவி பிறந்த நாள்
▶1993 – நடிகை நிக்கி கல்ரானி பிறந்த நாள்
Sorry, no posts matched your criteria.