news

News January 3, 2025

ED ரெய்டு: அமைச்சர் துரைமுருகன் அவசர ஆலோசனை

image

வேலூரில் உள்ள வீட்டில் ED சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, வேலூர் காந்தி நகரில் கதிர் ஆனந்துடன் வசிக்கும் அவரது வீடு, காட்பாடியில் உள்ள கல்லூரியில் ED சோதனையானது நடைபெற்று வருகிறது.

News January 3, 2025

6 நாள்கள் தொடர் விடுமுறை!

image

இன்னும் 10 நாள்களில் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. இதற்கான அரசு விடுமுறை செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் வர இருப்பதால் அலுவலகம் செல்வோர் மற்றொரு நாள் விடுமுறை எதிர்பார்க்கின்றனர். அதாவது, திங்கட்கிழமை (ஜன 13) அல்லது வெள்ளிகிழமை (ஜன 17) சுய விடுப்பு எடுத்துக் கொண்டால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 6 நாள்கள் விடுமுறை கிடைக்கும். ஜாலிதானே!

News January 3, 2025

ஒரு தசாப்தத்துக்கு பின் வெளியாகும் மதகஜராஜா

image

விஷால் பாடிய “மை டியர் லவ்வரு” பாட்டு எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு. இந்த பாட்டு வந்த போது ஸ்கூல் படித்து கொண்டிருந்த பலரும் தற்போது வேலைக்கே வந்துவிட்டார்கள். 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் நீண்ட காலமாக வெளிவராமல் முடங்கி கிடந்தது. இந்நிலையில், சுந்தர்.சி இயக்கிய ‘மதகஜராஜா’ படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் வெளியாவதாக சந்தானம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். எத்தனை பேர் வெயிட்டிங்?

News January 3, 2025

தங்கம் விலை ₹640 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹640 உயர்ந்துள்ளது. நேற்று ₹57,440ஆக இருந்த ஒரு சவரன் தங்கம், இன்று ₹58,080ஆக விற்கப்படுகிறது. நேற்று ₹7,180க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ₹80 உயர்ந்து ₹7,260க்கு விற்பனையாகிறது. கடந்த 10 நாள்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு சுமார் ₹1,300 வரை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹100க்கு விற்பனையாகிறது.

News January 3, 2025

போலீசார் அடித்தால் திருப்பி அடிக்க சட்டத்தில் இடம் உண்டா?

image

சில போலீசார் அதிகாரத்தை மீறி, மக்களை பொதுவெளியில் தாக்குவார்கள். பலரும் மரியாதை, பயத்தின் காரணமாக அமைதியாக இருந்து விடுகிறார்கள். ஆனால், தேவையற்ற சூழலில் போலீஸ்காரர் ஒருவர் தாக்கினால், அவர்களிடம் இருந்து தற்காத்து கொள்ள தாக்கலாம். அப்போது, உங்களுக்கு BNS 35 சட்டம் உதவும். கிரிமினல் அத்துமீறல் குற்றங்களுக்கு எதிராக ஒருவர் தனது சொந்த உடல், சொத்து போன்றவற்றை தற்காத்து கொள்ள சட்டத்தில் இடம் உண்டு.

News January 3, 2025

பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் தொடங்கியது

image

பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கவுள்ளது. இதற்காக, வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ரேஷன் அதிகாரிகள் அவர்களது லிமிட்டில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனர். 9ஆம் தேதி முதல் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடங்குகிறது.

News January 3, 2025

எதையாவது சொல்லி பாலிசியை ரிஜெக்ட் பண்றாங்க!

image

பெரும்பாலான மருத்துவ காப்பீடு பாலிசிதாரர்கள் திருப்திகரமாக இல்லையென ஆய்வில் தெரியவந்துள்ளது. Local Circles நிறுவனம் நடத்திய ஆய்வில், கடந்த 3 ஆண்டுகளில் நியாயமற்ற முறையில் பாதி அல்லது முழு கிளைம் ரிஜக்‌ஷனை எதிர்கொண்டதாக பாலிசிதாரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் 327 மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் 33% பேர் பாதி கிளைம் கிடைத்ததாகவும், 20% பேர் கிளைம் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

News January 3, 2025

காஷ்மீரின் பெயர் மாற்றம்?

image

காஷ்மீரின் பெயரை ‘காஷ்யப்’ என்று மாற்றலாம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா யோசனை தெரிவித்துள்ளார். நேற்று அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இந்து துறவி ‘காஷ்யப்’ வாழ்ந்த மண் இது என்பதால் இம்மாநிலத்தின் பெயரை அவ்வாறாக மாற்றலாம் என்றார். ஏற்கெனவே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை பாஜக அரசு ரத்து செய்த நிலையில் அமித் ஷா இவ்வாறு பேசியுள்ளார்.

News January 3, 2025

திமுக எம்பி வீட்டில் ED சோதனை

image

வேலூர் காந்தி நகரில் திமுக எம்பியும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனின் 2 வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலின் போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலிருந்து 11 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

News January 3, 2025

சம்பளத்தை குறைத்த ராம் சரண், ஷங்கர்?

image

‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக ராம் சரணும், ஷங்கரும் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தயாரிப்பு பணிகள் தாமதமாகியுள்ளன. இந்நிலையில், ராம் சரண் ₹65 கோடியும், ஷங்கர் ₹15 கோடியும் சம்பளத்தைக் குறைத்துள்ளார்களாம்.

error: Content is protected !!