news

News January 3, 2025

புதுச்சேரி போல தமிழகத்திலும் பொங்கல் பரிசு: கோரிக்கை

image

புதுச்சேரிக்கு பொங்கல் தொகுப்புக்கு பதிலாக, இந்தாண்டு ரூ.750 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு அறிவிக்கப்படவில்லை. புதுச்சேரிக்கு ரூ.750 அறிவிப்பு வெளியானதும், தமிழக மக்களும் தங்களுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். செவி சாய்க்குமா அரசு?

News January 3, 2025

இன்ஸ்டா LIVEஇல் இளம்பெண் தற்கொலை

image

சத்தீஸ்கரில் 19 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் LIVEஇல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 30ஆம் தேதி அங்கூர் நாத், தனது வீட்டில் தூக்கு மாட்டிக்கொள்ள தயாராவதை 21 பேர் LIVEஇல் பார்த்துள்ளனர். அவரது வீட்டிற்கு அருகே உள்ள சில ஃபாலோயர்கள் ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றபோதும், அவர்களது முயற்சி தோல்வியடைந்தது. காதல் தோல்வியே தற்கொலைக்குக் காரணம் என, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

News January 3, 2025

போராட்டம் தொடரும்: குஷ்பு உறுதி

image

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்புவை போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் விடுவிக்கப்பட்ட குஷ்பு, தங்களை ஆடுகளை அடைக்கும் கொட்டகையில் போலீசார் அடைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், மீண்டும் கைது செய்யப்படுவதாக இருந்தாலும், போராட்டம் தொடரும் என குஷ்பு அறிவித்துள்ளார். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

News January 3, 2025

பொங்கலை முன்னிட்டு 9 நாள்கள் சிறப்பு ரயில்கள்

image

பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சென்னை தாம்பரம்- திருச்சிக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு ரயில் புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்தடையும். சென்னையில் இருந்து மதியம் 3.30க்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.

News January 3, 2025

கான்ஸ்டாஸ் பும்ராவுடன் மோதியது இதனால் தான்

image

IND-க்கு கூடுதல் ஓவர்கள் கிடைக்க கூடாது என்பதற்காகவே, கான்ஸ்டாஸ் பும்ராவிடம் மோதலில் ஈடுபட்டதாக பண்ட் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர்கள் என்ன பேசினார்கள் என தனக்கு கேட்கவில்லை, ஆனால் அவர்களது ஒரே நோக்கம் நேரத்தை வீணாக்குவது தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய ஆட்டநேர முடிவில், கடைசி ஓவரில் பந்தை எதிர்கொள்ள கவாஜா நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு, கான்ஸ்டாஸ் மோதலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

News January 3, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக பறிக்காது: காங்கிரஸ்

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக, அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டும் அந்த தொகுதியை, திமுக தங்களிடம் இருந்து பறிக்காது என்றும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக, திமுக அங்கு போட்டியிட தலைமையிடம், அம்மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

News January 3, 2025

சனி-ராகு சமரசம்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

image

சனி பகவானின் சொந்த ராசியான கும்பத்துக்குள் ராகு பகவான் வரவுள்ளதால், பல ராசிகளுக்கு சிக்கல் ஏற்படப் போகிறது. ஆனால், இந்த சேர்க்கை 3 ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டத்தையும், இரட்டை பண மழையையும் கொட்டப் போகிறது. அதன்படி, மேஷம், மகரம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களுக்கு புதிதாக வீடு கட்டும் யோகம் அடிக்கும். அதேபோல, வேலை, திருமணமும் கைக்கூடும். தொட்டது எல்லாம் வெற்றி பெறும். பண அதிர்ஷ்டம் உண்டு.

News January 3, 2025

Blinkit ஆம்புலன்ஸ் சேவை.. அறிவுறுத்தும் அமைச்சர்!

image

10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சேவையை Blinkit தொடங்கியுள்ளது. இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஆம்புலன்ஸ் சர்வீஸ் அல்லது மருந்துகள் டெலிவரி செய்வதில் எனது ஒரே கவனம், இந்த நாட்டின் சட்டங்கள் மீறப்படாமல் இருக்க வேண்டும் என்பதே. சட்ட விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். Blinkit <<15054521>>ஆம்புலன்ஸ் சேவை<<>> ஹரியானா குருக்ராமில் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது.

News January 3, 2025

காதல் அனுபவத்தை பகிர்ந்த கீர்த்தி

image

பள்ளியில் படிக்கும் போதிருந்தே தனது கணவர் ஆண்டனி தட்டிலை காதலித்து வந்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தன்னை விட 7 வயது மூத்தவரான ஆண்டனி, கத்தாரில் இருந்தபோது கூட காதல் குறையவில்லை எனவும், தங்களது 12 ஆண்டுகள் காதலுக்கு, தனது அப்பா உடனே சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், காதலித்த நபரையே திருமணம் செய்து கனவை நனவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

BREAKING: ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்

image

விக்கிரவாண்டி <<15055253>>தனியார் பள்ளி <<>>கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து சிறுமி பலியான செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!