India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TN தொடக்கக் கல்வித்துறையில் கற்றல் – கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 30 நாள் சான்றிதழ் படிப்பை பெங்களூருவை சேர்ந்த RIESI நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு TN அரசு பள்ளி ஆசிரியர்களில் ஆர்வமுள்ள 50 பேர் தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 16ம் தேதி முதல் பெங்களூருவில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5%க்கும் கீழ் குறைந்துள்ளதாக SBI ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. நாட்டின் ஏழ்மை நிலவரம் குறித்த புள்ளிவிபர அறிக்கையை 2023ம் ஆண்டுடன் ஒப்பிட்டு SBI வெளியிட்டுள்ளது. அதில், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும், கிராமப்புறங்களில் பணம் செலவிடும் பழக்கம் அதிகரித்து இருப்பது வறுமை குறைப்புக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
✦எதிரிகளை அழிப்பதற்கான சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்குவதுதான். ✦ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது. ✦எல்லோரையும் நம்புவது பயங்கரமானது; யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது. ✦ஏமாற்றுவதைக் காட்டிலும், தோற்றுப்போவது மரியாதைக்குரியது. ✦சட்டப்பூர்வமாக சரியான சில விஷயங்கள், நியாய ரீதியாக பார்த்தால் சரியானவை அல்ல – ஆபிரகாம் லிங்கன்.
லடாக் எல்லையில், சீனா அறிவித்துள்ள இரண்டு புதிய மாவட்டங்கள் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதாக மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் இதுபோன்ற சட்டவிரோத ஊடுருவல்களை, நாம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது. லடாக் மற்றும் திபெத் எல்லையில் உள்ள ஹோட்டன் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் ஹீயான், ஹீகாங் என்ற 2 புதிய மாவட்டங்களை சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதள கணக்கை தொடங்குவதற்கு பெற்றோரின் அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு வெளியிட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளில் கூறியுள்ளது. கணக்கு துவங்கப்படுவதற்கு முன்னர் இதனை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆஸி.,யில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேர்வுக்குழுவின் எதிர்கால திட்டத்தில் ரோஹித் ஷர்மா இல்லை என கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். வரும் நாட்களில் அணியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும் கணித்துள்ளார். ரோஹித்துக்கு தற்போது 37 வயதாகும் நிலையில், அடுத்த WTC போட்டிக்குள் 41 வயதை அடைந்துவிடுவார். அந்த வயதில் அவர் டெஸ்ட் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவருக்கு பதிலாக இளம் தலைமையை BCCI தயார் செய்யும் என்றார்.
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த தமிழிசை செளந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் பதவியை கேட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பாஜக அமைப்பு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, கடந்த 2 நாள்களுக்கு முன்பு நட்டாவை சந்தித்த தமிழிசை, அதிமுகவுடன் மீண்டும் இணக்கமான சூழல் உருவாக வேண்டுமெனில், தன்னை தலைவராக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டாதாகக் கூறப்படுகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 138 ▶குறள்: நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். ▶பொருள்: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.
ஸ்க்ரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்றால் TNல் கடந்த ஆண்டு (2024) மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த பூச்சிகள் மனிதர்களை கடிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த பாதிப்பு தீவிரமாக உள்ளதாகவும், தற்போது தினசரி 10 – 20 பேர் வரை பாதிப்புடன் ஹாஸ்பிடல் வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மக்களின் கவனத்தை ஈர்க்கவே சில ஹீரோக்கள் Bodyguardகளை வைத்துள்ளதாக சோனு சூட் தெரிவித்துள்ளார். அதனால் தான், நடிகர்கள் வரும்போது அவர்கள் சத்தம் எழுப்பி தங்களது இருப்பை காட்டிக் கொள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நடிகர்கள் சிம்பிளாக பொது இடங்களுக்கு போகும்போது, அவ்வளவு களேபரம் ஏற்படாது எனவும், யாருக்கும் தொந்தரவை கொடுக்க கூடாது என தனது Bodyguardகளுக்கு கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.