news

News January 4, 2025

நடிகை குஷ்பு மீது வழக்கு

image

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் தடையை மீறி பேரணி நடத்திய நடிகையும், பாஜக நிர்வாகியுமான <<15058402>>குஷ்பு<<>> உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மேற்கு கிராம உதவியாளர் ஜலபதி அளித்த புகாரின் பேரில், திலகர் நகர் காவல் நிலையத்தில் பாஜகவினர் 319 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News January 4, 2025

பள்ளி மாணவி விவகாரத்தில் மூவர் கைது

image

விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு சென்ற LKG மாணவி லியோ லட்சுமி (3), திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் செயிண்ட் மேரீஸ் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அலட்சிய மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News January 4, 2025

ச்ச.. என்ன மனுசன் யா!

image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போதைய கேப்டன் பும்ராவுக்கு ஆலோசனை வழங்கினார். மோசமான ஆட்டம் காரணமாக ரோஹித் BGT 5ஆவது போட்டியில் இருந்து தானாக விலகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டிரிங்ஸ் இடைவேளையின்போது எந்தவித ஈகோவும் இல்லாமல் ரோஹித் ஆலோசனை வழங்கினார். அதனை பும்ராவும் அடக்கத்துடன் கேட்டுக் கொண்டார். இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

News January 4, 2025

மீண்டும் நார்மல் போனுக்கு மாறினால் எப்படி இருக்கும்?

image

எந்த நேரமும் கையில் போனுடனே வாழ்கிறோம். தூங்கும் போது கூட பக்கத்திலேயே இருக்கிறது. 3வது கையாகவே மாறிவிட்ட இந்த ஆண்ட்ராய்டு போன் இனி யூஸ் பண்ண கூடாது, மீண்டும் பழையபடி சாதாரண மொபைல் தான் அனைவரும் உபயோகிக்கணும் என்ற நிலைமை உருவானால் என்ன செய்வீர்கள்? அது எப்படி நடக்கும் என லாஜிக் கேள்வியெல்லாம் கேட்க கூடாது. ஒரு முறை யோசித்து பாருங்கள். தோன்றுவதை கமெண்ட்டில் பதிவிடவும்….

News January 4, 2025

பும்ராவை தூண்டிவிடுவது ஆபத்து: மார்க் வாக்

image

பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை உற்சாகப்படுத்துவது ஆஸி.,க்கு ஆபத்தானது என முன்னாள் வீரர் மார்க் வாக் கூறியுள்ளார். இச்சம்பவத்திலிருந்து கான்ஸ்டாஸ் பாடம் கற்க வேண்டும், கடைசி ஓவரில் பும்ராவை தூண்டிவிட வேண்டிய அவசியம் இல்லை என்றார். அவரால் இந்திய வீரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததாகவும், கான்ஸ்டாஸ் தன் நாக்கைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் எதிர் அணிக்கு இலக்காகிவிடுவார் என்றும் அறிவுறுத்தினார்.

News January 4, 2025

விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம்!

image

பொங்கல் பரிசு தொகுப்பாக அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கான பணம் நேரடியாக விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணைய முகவரி வாயிலாகவோ, மாவட்ட இணை பதிவாளர்களை தொடர்பு கொண்டோ கரும்பை விற்பனை செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.

News January 4, 2025

பரவும் ‘ஸ்க்ரப் டைபஸ்’: இதை செய்யாதீங்க!

image

தமிழகத்தில் <<15060077>>ஸ்க்ரப் டைபஸ்<<>> தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், விவசாயிகள், புதர் மண்டிய, வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், கர்ப்பிணியர், பூச்சி கடிக்குள்ளாகும் சூழலில் இருப்போர் கவனமாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. புதர் மண்டிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பூச்சிகள் ஏதேனும் கடித்தால், அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் கூறியுள்ளது.

News January 4, 2025

விவசாயிகளுக்கு ஆதார் போல அடையாள எண்!

image

மத்திய அரசு ஆணைப்படி, TNல் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்குவதற்கான பணிகளை, வேளாண் துறை தொடங்க உள்ளது. இதற்காக ‘பார்மர்ஸ் ரிஜிஸ்டரி’ என்ற பெயரில் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்ற அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை வைத்து தான், வரும் காலங்களில் விவசாயத்திற்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கும்.

News January 4, 2025

ஜன.4: வரலாற்றில் இன்று

image

▶1493 – கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
▶1643 – விஞ்ஞானி ஐசாக் நியூட்டன் பிறந்தநாள்.
▶1954 – எழுத்தாளர் ஞாநி சங்கரன் பிறந்தநாள்.
▶1984 – நடிகர் ஜீவா பிறந்தநாள்.
▶1974 – இந்திய அறிவியலாளர் ஜி.டி.நாயுடு காலமானார்.

News January 4, 2025

சென்னைக்கு வருகிறது ‘ஏர் டாக்சி’!

image

சென்னையில் ‘ஏர் டாக்சி’ எனப்படும் சிறிய விமானங்களை இயக்கும் திட்டத்தை செயல்படுத்த TN அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நகரத்திற்குள் வான்வழியாக விரைவாக பயணிக்க முடியும். மருந்து உள்ளிட்ட சரக்குகளையும் விரைந்து எடுத்துச் செல்ல முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பாதுகாப்பு அம்சம், வழிகாட்டு நெறிமுறைகளை போயிங் நிறுவனத்துடன் இணைந்து அரசின் டிட்கோ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!