news

News January 4, 2025

ஜனவரி 10ஆம் தேதி கனமழை பெய்யும்

image

தமிழகத்தில் ஜனவரி 10ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதோடு, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் MET கூறியுள்ளது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யவுள்ளது.

News January 4, 2025

Second hand மொபைல் வாங்கப் போறீங்களா?

image

*மொபைல் கேமரா மூலம் போட்டோ எடுத்துப் பார்த்து செக் பண்ணவும் *திருட்டு ஃபோன் வாங்குவதை தவிர்க்க ஒரிஜினல் பில் கேட்கவும் *ஃபோனின் பாடி கண்டிஷன், ஸ்பீக்கர் கிரில், சிம்கார்ட் ஸ்லாட் & சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கவும் *டிஸ்ப்ளே ஸ்க்ரீன் ஒரிஜினலா, டேமேஜ் உள்ளதா எனப் பார்க்கவும் *சார்ஜிங் போர்ட், சிம் கார்டு ஸ்லாட்டை செக் செய்யவும். கால் செய்து, மைக் வேலை செய்வதையும் கன்ஃபர்ம் செய்யவும்.

News January 4, 2025

ஈரோடு (கிழக்கு) தொகுதியை கேட்கும் காங்கிரஸ்

image

இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த இவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஏற்கெனவே அத்தொகுதி MLA திருமகன் ஈவெரா இறந்தபோது அத்தொகுதி காங்கிரசுக்கே மீண்டும் ஒதுக்கப்பட்டு EVKS இளங்கோவன் தேர்வானார்.

News January 4, 2025

யார் அந்த சார் என விசாரணை நடக்கிறது: கனிமொழி

image

அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கின் FIRஇல் குறிப்பிடப்பட்ட ‘அந்த சார்?’ குறித்து விசாரணை நடப்பதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். மாணவி வன்கொடுமை விவகாரத்தைப் போராட்டம் என்ற பெயரில் சிலர் அரசியலாக்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி விவகாரம் போல் இல்லாமல் இந்த வழக்கில் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டதால் தான் போராடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

News January 4, 2025

காற்றுக்கு இத்தனை பெயர்களா!

image

*மணிக்கு 6 கி.மீ வேகத்தில் வீசுவது மென்காற்று
*மணிக்கு 6-11 கி.மீ வரை வீசுவது இளந்தென்றல்
*மணிக்கு 15-19 கி.மீ வரை வீசுவது தென்றல் காற்று *மணிக்கு 20-29 கி.மீ வரை வீசுவது புழுதிக் காற்று *மணிக்கு 30-39 கி. மீ வரை வீசுவது ஆடிக் காற்று *மணிக்கு 40-100 கி.மீ வரை வீசுவது கடும் காற்று *மணிக்கு 101-120 கி. மீ வரை வீசுவது புயல் காற்று *மணிக்கு 120 கி.மீ. மேல் வீசுவது சூறைக்காற்று

News January 4, 2025

₹4 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர்

image

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ₹4 லட்சம் நிதியுதவி அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இயங்கிவந்த சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, தலைமறைவான அதன் உரிமையாளரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

News January 4, 2025

HMPV-யும் COVID-19 வைரஸும் ஒன்றா?

image

சீனாவில் பரவிவரும் HMPV வைரஸுக்கும் கொரொனாவுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன: *இரண்டுமே சுவாச மண்டலத்தை பாதித்து, லேசானது முதல் தீவிர தொற்றை ஏற்படுத்தும் *காற்றில் பரவும் *காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், வீஸிங், மூச்சுத்திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகள். *குழந்தைகள், முதியோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை அதிகம் தாக்கும் *மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி போன்றவை முக்கிய தடுப்பு முறைகளாகும்.

News January 4, 2025

அண்ணாமலைக்கு எதிராக ஆவணம் வெளியானது

image

அண்ணாமலை ஊழல் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை பத்திரிக்கையாளர் ’நக்கீரன்’ பிரகாஷ் முன் வைத்திருக்கிறார். திமுக அமைச்சர்களின் உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் இருந்தாலும் அது அமைச்சர்கள் செய்த ஊழல்தான் என்று அண்ணாமலை பேசி வருகிறார். இந்நிலையில், அண்ணாமலையின் மனைவி ₹70 கோடிக்கு சொத்து வாங்கிய ஆவணங்கள் வெளியாகியிருக்கிறது. இது அண்ணாமலையின் சொத்து இல்லையா என்று பிரகாஷ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

News January 4, 2025

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் லிஸ்ட் இதோ

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – திருநெல்வேலி (ஜன.13, 20, 27), தாம்பரம் – கன்னியாகுமரி (ஜன.13), தாம்பரம் – ராமநாதபுரம் (ஜன.11, 13, 18), சென்னை <>சென்ட்ரல் – நாகர்கோவில்<<>> (ஜன.12, 19) இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை(ஜன.5) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..

News January 4, 2025

செப்டிக் டேங்கில் சடலமாக கிடந்த பத்திரிகையாளர்

image

சத்தீஸ்கரில் சாலை ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் செப்டிக் டேங்கில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்தார். முகேஷ் சந்திரகர்(28) தனியார் சேனலில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 1ஆம் தேதி காணாமல் போனார். இந்நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு பிஜப்பூரில் காண்ட்ராக்டர் ஒருவரின் வணிக வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர், 2021இல் காவல்துறை விருது பெற்றவர் ஆவார்.

error: Content is protected !!