news

News January 4, 2025

2026 தேர்தல்: அதிமுகவுக்காக களமிறங்கும் P.K.?

image

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தேர்தல் வியூக வேலை செய்தது. இந்நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த நிறுவனம், அதிமுகவுக்காக தேர்தல் வியூக பணியை செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அதிமுகவிடம் இருந்து மிகப் பெரியத் தொகையை ஐ-பேக் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

News January 4, 2025

பிராங்க் செய்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

image

கோவை தனியார் கல்லூரியில் பிராங்க் என்ற பெயரில் கிண்டல் செய்து மாணவர் ஒருவரை சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால், மனம் உடைந்த அவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட மாணவன் படிப்பில் மிக சிறந்தவராகவும், ஒழுக்கமுள்ளவராகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

News January 4, 2025

உங்கள் உடலில் சிறிய எலும்பு எது தெரியுமா?

image

*வளர்ந்த மனிதரின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன *10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எலும்பு செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன *பாதங்களில் -26, கைகளில் (மணிக்கட்டுகள் உள்பட) 54 எலும்புகள் உள்ளன *மிக நீளமான, மிக வலுவான எலும்பு தொடை எலும்பு (femur) *காதில் உள்ள `ஸ்டேப்ஸ்’ தான் உடலின் மிகச்சிறிய எலும்பு *மற்றொரு எலும்புடன் தொடர்பில்லாத ஒரே எலும்பு நாக்கின் அடியில் காணப்படும் V வடிவ ஹையாய்ட் (hyoid) எலும்பு.

News January 4, 2025

குற்றவாளிகளை பாதுகாக்கும் DMK? அண்ணாமலை

image

ஞானசேகரன் வேறு ஒரு சாரிடம் இருக்க வேண்டுமென்று மிரட்டியதாக அண்ணா பல்கலை., மாணவி மீண்டும் உறுதி செய்தார். இதுகுறித்து அண்ணாமலை, தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில், DMK அரசு செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 4, 2025

700 இளம்பெண்களிடம் மோசடி.. பலே கில்லாடி கைது

image

700 பெண்களிடம் மோசடி செய்த டெல்லி இளைஞர் போலீசிடம் சிக்கினார். நொய்டா தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் துஷார் சிங், டேட்டிங் ஆப்புகளில் அமெரிக்க மாடல் என பதிவிட்டுள்ளார். இளம்பெண்களிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, நம்பியோரிடம் அந்தரங்க படங்கள், வீடியோ பெற்றுள்ளார். பின்னர் இணையத்தில் அதை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். மாணவி ஒருவரின் புகாரில் தற்போது கைதாகியுள்ளார்.

News January 4, 2025

SBI பேட்ரன்ஸ் திட்டத்தில் வட்டி எவ்வளவு

image

<<15063922>>SBI <<>>பேட்ரன்ஸ் டெபாசிட் திட்டத்தில் ஏற்கெனவே மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட கூடுதலாக 10 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது. தற்போது SBIயில் ஓராண்டு ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 6.80%, 2 ஆண்டுகளுக்கு 7%, 3 முதல் 5 ஆண்டுகளுக்கு 6.75%, 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 6.5% வட்டி வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த புதிய திட்டத்தை குறித்தும் பரிசீலிக்கலாம்.

News January 4, 2025

சிட்னி டெஸ்ட்: ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு

image

ஆஸி.,க்கு எதிரான டெஸ்டில் 29 பந்தில் அரைச்சதம் அடித்த ரிஷப் பண்டுக்கு சச்சின் பாராட்டு தெரிவித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் ஸ்டிரைக் ரேட் 50க்கும் குறைவாக உள்ள சிட்னி ஆடுகளத்தில், 184 ஸ்டிரைக் ரேட் உடன் அவர் ஆடியது ஆச்சரியமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். முதல் பந்தில் இருந்தே ஆஸி., அணியை பண்ட் சிறப்பாக எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் 4 சிக்சருடன் 61 ரன்களை பண்ட் குவித்தார்.

News January 4, 2025

தாயை மேடைக்கு ஏற்றிய அதர்வா

image

மறைந்த நடிகர் முரளியின் 2ஆவது மகன் ஆகாஷ் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தனது தாய் ஷோபாவை அதர்வா மேடை ஏற்றினார். சினிமா மேடையில் முரளியின் மனைவி ஏறுவது இதுவே முதல்முறையாகும். ஏன் என்னை மேடை ஏற்றினாய்? என அதர்வாவை செல்லமாக திட்டிவிட்டு, ஆகாஷ் ஐ லவ் யூ டா என்று சொன்ன ஷோபாவுக்கு அடுத்து பேச வார்த்தைகள் வரவில்லை.

News January 4, 2025

கெஜ்ரிவாலை எதிர்க்கும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிடப்பட்டுள்ளது. கல்காஜி தொகுதியில் டெல்லி முதல்வர் அதிஷியை எதிர்த்து, ரமேஷ் பிதூரி போட்டியிடுகிறார். புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா போட்டியிடுகிறார். அண்மையில் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கைலாஷ் கெலாட், பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

News January 4, 2025

பொங்கல் விடுமுறையை ஈடுகட்ட ஜன.25 வேலை நாள்

image

<<15065069>>பொங்கலையொட்டி<<>> ஜனவரி 17ஆம் தேதி கூடுதலாக ஒருநாள் மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்படாது என்றும் அரசு அறிவித்துள்ளது. ஜன.17ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜன.25 (சனிக்கிழமை) அன்று வேலைநாளாக அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!