India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 24 மணி நேரத்தில் மட்டும் ஏவுகணை, ட்ரோன் மூலம் நடத்தியத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உடல்சிதறி பலி என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில், போர்மேன்களான கணேஷ், சதீஸ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, தற்போது கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடுவதாக EX CM ஓபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது, அதை எதிர்த்து போராடுவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்ற அவர், எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தால் ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும் எனவும் சாடியுள்ளார். பாஜக போராட்டத்தை தடுத்தது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகரத்தில் சுக்ரன் பெயர்ச்சி அடைந்ததால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த பெயர்ச்சியால், மேஷம், ரிஷபம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மகர ராசியில் சுக்கிர பகவானின் பெயர்ச்சி நடப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு இனி வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வ சேர்க்கையும் உண்டாகும் என கூறுகின்றனர்.
ஒரு வகுப்பில் 50 பேர் இருந்தால், அதில் 1, 2 பேர் இடதுகை பழக்கமுள்ளவர்களாக இருப்பதை பார்த்திருப்போம். அந்த வகையில், இந்திய மக்கள் தொகையில் 5.20% பேர் அத்தகைய பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 13.10%, கனடாவில் 12.80%, UKவில் 12.24%, ஃபிரான்ஸில் 11.15% பேர் உள்ளனர். இடதுகை பழக்கம் உள்ளவர்களில் நீங்கள் பார்த்த வித்தியாசமான பழக்கங்களை கமெண்ட் பண்ணுங்க.
மக்கள் பணத்தில் டெல்லியில் மாளிகை கட்டிக்கொண்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் சுஷ்மா விடுதி திறப்பு விழாவில் பேசிய அவர், அரசு கார், பங்களாவை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது 50,000 சதுர அடியில் ₹45 கோடி செலவில் பங்களா கட்டியுள்ளதாக விமர்சித்தார். இதற்காக டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் பதில் சொல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் எந்த வயதினர் வேண்டுமானாலும் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. இதனால் சமூக பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து 18 வயதுக்கும் குறைவானோர் கணக்குத் தொடங்க பெற்றோர் சம்மதம் தேவை என்ற விதியை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கருத்தையும் அரசு கேட்டுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.
அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, துஷரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அண்ணா பல்கலை., வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஊகத்தின் அடிப்படையில் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தற்போது விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்பாக தற்போது வெளியாகும் அனைத்து தகவலும் முற்றிலும் தவறானவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ரோகித் சர்மாவை தொடர்ந்து கோலியும் மோசமான ஃபார்மில் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஃபார்ம் காரணமாக ரோகித் விளையாடவில்லை. ஆனால், களமிறங்கிய கோலி 2 இன்னிங்சிலும் சேர்த்தே 23 ரன்கள் தான் எடுத்தார். இதனால், அவருக்கு எதிராகவும் திரும்பியுள்ள நெட்டிசன்கள், இருவருமே ஓய்வு பெற வேண்டும் என கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.