news

News January 5, 2025

தண்டனையுடன் வெள்ளை மாளிகை செல்லும் முதல் அதிபர்

image

பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. வரும் 10ஆம் தேதி தண்டனை விபரங்கள் வெளியாகவுள்ள நிலையில், 20ஆம் தேதி அவர் USA அதிபராகப் பதவியேற்கிறார். சிறைத் தண்டனையின்றி அபராதம் மட்டும் விதிக்கலாம் எனத் தெரிகிறது. ஆனாலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் நுழையும் முதல் அதிபர் என்ற மோசமான பெயரை சுமக்க உள்ளார் டிரம்ப்.

News January 5, 2025

இந்திய அணி கண்ணாடியில் பார்க்க வேண்டிய நேரம்

image

உள்நாட்டில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் BGT தொடர்களை தோற்றிருக்கும் இந்திய அணி மறு கட்டமைப்பு செய்ய வேண்டிய இடத்தில் இருக்கிறது. அவுட் ஆஃப் பார்ம் வீரர்கள் ரோஹித், கோலி, கில், ஒரு தொடரை கூட ஜெயிக்காத கம்பீரின் பயிற்சி, ரோஹித்தின் கேப்டன்சி, டெஸ்ட் வீரர்களை தேர்வு செய்யாத அகர்கர் என்று அனைத்து பொறுப்புகளுமே கேள்விக்குறி ஆகியிருக்கிறது. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்க.

News January 5, 2025

மாதம் ₹3000 பென்ஷன் வாங்க உடனே அப்ளை பண்ணுங்க

image

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு e-Shram திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 60 வயதைக் கடந்த பிறகு மாதம் ₹3000 பென்ஷன், ₹2 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும். 18 – 59 வயதுடைய அனைவரும் விண்ணப்பிக்கலாம். ஆதார், பேங்க் அக்கவுண்ட், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனை ரெடியா வச்சிக்கிட்டு, இந்த <>லிங்கை கிளிக்<<>> பண்ணி ரொம்ப சிம்பிளா அப்ளை பண்ணுங்க.. SHARE IT

News January 5, 2025

பொங்கலுக்கு எத்தனை நாள் விடுமுறை தெரியுமா?

image

2025 அரசு விடுமுறை கேலண்டரின்படி, ஜனவரி 14 முதல் 16 வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த தேதிகள் செவ்வாய், புதன், வியாழனில் வருவதால் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை விடுமுறை கேட்டு அரசு ஊழியர்கள் மனு அளித்திருந்தனர். அதனை ஏற்று ஜனவரி 17 (வெள்ளி) விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், செவ்வாய் முதல் ஞாயிறு வரை 6 நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது.

News January 5, 2025

400 ஆண்டுகளாக ஞாயிறு அன்று கறி சாப்பிடாத கிராமம்

image

பல வீடுகளில் ஞாயிறில் கறி சமைப்பது வழக்கம். ஆனால் பல நூறு ஆண்டாக ஆந்திராவின் நந்தியாலா மாவட்டம் எஸ்.கோட்டூர் கிராமத்தில் ஞாயிறு அன்று கறி சமைப்பது, மது அருந்துவது இல்லை. ஏன் யாராவது இறந்தாலும், இறுதிச் சடங்கு அடுத்த நாள் தான். 400 ஆண்டுகளுக்கு முன்பு வயல்வெளியில் கிடைத்த சுப்பிரமணியேஸ்வரர் சிலைக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஞாயிறு பிடித்தமான நாள் என கிராம மக்கள் நம்புவதால் இந்த நம்பிக்கை.

News January 5, 2025

திமுகவை வழிநடத்தும் கனிமொழி?

image

திமுக எம்பி கனிமொழியின் 57ஆவது பிறந்தநாள் இன்று. இதனையடுத்து திமுகவினரால் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் 2026ஆம் ஆண்டு, கட்சியை கனிமொழி சட்டசபைக்கு வழிநடத்துவது போன்ற சித்திரம் இடம்பெற்றிருக்கிறது. கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில் இருந்தே கனிமொழி MP அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். தற்போது, அவர் சட்டசபைக்கு செல்வது போன்று ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 5, 2025

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சில டிப்ஸ்

image

‣ பொறுப்பு வழங்கப்படும் போது, குடும்ப சூழலை வைத்து தவிர்க்க வேண்டாம் ‣ பணியிடத்தில் கோபத்தை வெளிப்படுத்திவிடாதீர்கள் ‣ மனக்கசப்பை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு வீடு திரும்புவது நல்லது ‣ வீட்டு பிரச்னை அலுவலகத்தில் பகிர வேண்டாம் ‣ கெட் டூ கேதரில் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள் ‣ செய்யும் வேலை குறித்து வார, மாத, ஆண்டு திட்டங்களை வகுத்து கொண்டு பணிபுரியுங்கள். ட்ரை பண்ணி பாருங்க..

News January 5, 2025

MP சு.வெங்கடேசன் ஹாஸ்பிட்டலில் அட்மிட்

image

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உடல் நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெறும் CPI(M) கட்சியின் மாநில மாநாட்டிற்கு அவர் வந்திருந்தபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அம்மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று MPயின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர் எதனால் அட்மிட் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை ஹாஸ்பிட்டல் நிர்வாகம் வெளியிடவில்லை.

News January 5, 2025

இதுதான் கம்பீர் Eraவா!!

image

உலகக்கோப்பை T20 தொடரை வென்று உச்சத்தில் இருந்தது இந்தியா. ஜூலை மாதம் தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்தார். இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடர் (0-2), சொந்த மண்ணில் நியூசி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் (0-3), தற்போது BGT (3-1) என பெரிய தோல்விகளை இந்தியா கண்டுள்ளது. கம்பீர் Era இது தானா என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வினவி வருகிறார்கள்.

News January 5, 2025

ஷங்கரின் அடுத்த படம் இதுதான்

image

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து ‘வேள்பாரி’ படத்தை தொடங்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார். இது தனது கனவுத் திரைப்படம் என்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இப்படத்தின் ஸ்க்ரிப்ட் பணிகளை முடித்ததாகவும் அவர் கூறியுள்ளார். சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல், விகடனில் தொடராக வெளியானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!