India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. <
CPI (M) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பதவி விலக முடிவு செய்துள்ளார். கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் எந்தவிதமான பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது. அடுத்த மாதம் 72 வயது ஆவதையொட்டி, தன்னை பொறுப்புகளில் இருந்து விடுவிக்கக்கோரி, மாநில மாநாட்டில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், அவருக்கு பதில் விரைவில் புதிய மாநிலச் செயலாளர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை தனியார் ஹாஸ்பிட்டலில் நடிகர் பிரபுவுக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பெரிய ரத்தநாளமான நடுத்தர பெருமூளை தமனியின் பிளவுகளில் உள் கரோடிட் தமனியின் மேற்புறத்தில் வீக்கம் இருந்துள்ளது. அதை சரி செய்ய அங்கு ஆபரேசன் நடந்துள்ளது. இதையடுத்து பிரபுவின் உடல்நிலை சீரானதாகவும், பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தகவல் கூறுகின்றன.
தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், PM மோடி எழுதிய “எக்ஸாம் வாரியர்ஸ்” புத்தகத்தை படிக்க வேண்டும் என ஆளுநர் ரவி அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் 5,000 மாணவர்களை, தனியார் டிரஸ்ட் இன்று இன்பச் சுற்றுலா அழைத்து சென்றது. இதனை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆளுநர், மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, கல்வி மட்டுமே பிறருக்கு நன்மை செய்யும் பலம், வலிமை மற்றும் தலைமைப் பண்பை கொடுக்கும் என ஆலோசனை வழங்கினார்.
டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவோரிடம் கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்கும் வகையில் QR கோடு முறையில் பில் வழங்கும் நடைமுறை 11 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த முறை ஜன.15-க்குள் மேலும் 10 மாவட்டங்களிலும், பிறகு மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக அமலானால், அனைத்து மதுபிரியர்களுக்கும் பில் கிடைக்கும், பணமும் மிச்சமாகும்.
இந்தியாவிற்கு எதிரான BGT தொடரை 3- 1 என்ற கணக்கில் வென்று கோப்பையை ஆஸி., கைப்பற்றியது. இந்த வெற்றியை, ஆஸி., வீரர்கள் மட்டுமல்லாமல், அந்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, ஆஸி.,வின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட், புதிதாக பிறந்த தனது குழந்தை மற்றும் மனைவி, மகளுடன் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்ட கோப்பைக்கு முன், சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, தாமரை மலரும் என்று நம்பிக்கை வையுங்கள் என PM மோடி கூறியுள்ளார். வளர்ந்த இந்தியாவின் தலைநகராக DLஐ மாற்ற வேண்டும் என்பதே தங்களது கனவு எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கும், DLக்கும் மிக முக்கியமானவை; இந்த ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் உறுதி அளித்தார். டெல்லி சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
பிரபல நடிகர் பிரபு ஹாஸ்பிடலில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில், அண்மையில் அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் அதே ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் மூளையில் வீக்கம் இருப்பது தெரிந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்காக நவம்பர் மாதம் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தங்கள், விலாசம் மாறுதல் என 23.09 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், நாளை ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
காயத்தால் விளையாட முடியாதது விரக்தியை ஏற்படுத்தியதாக இந்திய கேப்டன் பும்ரா கூறியுள்ளார். தொடர் நாயகன் விருதை வென்ற பிறகு பேசிய அவர், இந்த தொடரில் பந்துவீச அதிக சாதகமான பிட்ச்-இல் பந்துவீச முடியாமல் போனது பெரிய ஏமாற்றம் என்றார். முதல் இன்னிங்ஸில் விளையாடும் போதே, கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், வெற்றி பெற்ற ஆஸி., அணியை வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.