India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக மத்திய அரசு வழங்கும் நிதி எங்கு செல்கிறது என, தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். குமரி மாவட்டத்தில், அழுகிய முட்டைகளை பள்ளி மாணவர்களுக்கு விநியோகத்த சம்பவத்தை சுட்டிக்காட்டி Xஇல் பதிவிட்டுள்ள அவர், உணவில் தரமற்ற முட்டைகளை வழங்கி, குழந்தைகள் உயிருடன் விளையாடுவதை, “அழுகிய முட்டை அமைச்சர்” கீதா ஜீவன் உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
பேச்சு சுதந்திரத்தை குறைக்கும் வகையில், காங்கிரஸ் முதன்முறையாக அரசியலமைப்பை திருத்தி 19 ஏ சட்டப்பிரிவை சேர்த்தது என அமித் ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சி காலத்தில் 77 முறை அரசியலமைப்பை திருத்தியதாக குறிப்பிட்டார். மேலும், பாஜக 22 முறை மட்டுமே திருத்தியதாக சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸின் வேலைகளை மக்கள் கவனிக்கிறார்கள் என்றார்.
*தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர் பிறந்தநாள்
*நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் பிறந்தநாள்
*பன்னாட்டுக் குடிபெயர்வோர் நாள்
*அரபு மொழி நாள் (ஐக்கிய நாடுகள்)
*2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.
*2006 – ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறை நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில், இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய IND W அணி, 159/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா 62 ரன்கள் குவித்தார். 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய WI W அணி, 15.4 ஓவர்களில் 160/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிரடியாக ஆடிய மேத்தீவ்ஸ் 47 பந்துகளில் 85 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இன்று (டிச.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
திமுக அரசு பட்ஜெட் கூட்டத் தொடருக்கான வேலைகளில் இயந்திர கதியில் இயங்கி கொண்டிருப்பதாக கோட்டை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. 2025ஆம் ஆண்டு ஜனவரி கடைசி (அ) பிப்ரவரி முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து, திமுகவின் தலைமை அப்போது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் குட் கேரக்டருக்காக அஜித்குமார் 25 கிலோ எடை குறைத்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. கடுமையான டயட் முறைகளை பின்பற்றி ஒரு மாதத்திற்குள் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. க்ளீன் ஷேவ்வில் இளவட்டமாக அஜித் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்தில் குட், பேட், அக்லி என 3 கெட்டப்பில் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் 2ஆவது சிங்கிள் ‘லாவெண்டர் நிறமே’ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க, கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக, இப்படத்தின் முதலாவது சிங்கிள் ‘என்னை இழுக்குதடி’ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
‘சங்கி’ என ஸ்டாம்ப் குத்திவிடுவார்கள் என்று அச்சத்தில் மத்திய அரசை நடிகர் விஜய் விமர்சிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், மழைக்குக்கூட வெளியில் வராதவர் விஜய். அவர் எங்களைப் பார்த்து கேள்வி கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. மணிப்பூருக்கு விஜய்யை அழைத்துச் செல்வதாக அண்ணாமலை சொல்லியிருக்கிறார். மக்கள் மீது அவருக்கு கவலை இருந்தால், செல்லலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.