news

News December 18, 2024

விலை கம்மி! செயல் அதிகம்!!

image

சாத்துக்குடி ஜூஸ் அனைத்து சீசன்களிலும் அருந்தும் ஒரு அற்புதமான பானம். நாள்தோறும் காலையில் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். இதனால், நாள் முழுவதும் கலோரிகளை உங்கள் உடல் மிகத் திறமையாக எரிக்க உதவும். இந்த சிட்ரஸ் பழம் உடல் எடை குறைப்புக்கு உதவும் எனக் கூறப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று செரிமானத்தை மேம்படுத்தும் இதன் திறன் ஆகும்.

News December 18, 2024

மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்

image

இசை, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை IITஇல் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் புதிய முறை அடுத்த கல்வியாண்டு அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, “பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் புதுமையான சிந்தனை அவசியம். இதனை கருத்தில்கொண்டு 34 இடங்கள், நுண்கலை மற்றும் கலாசார சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ளது”என்றார்.

News December 18, 2024

நிம்மதி பெருமூச்சு விடும் இந்திய ரசிகர்கள்

image

\BGT தொடரில் இந்தியா-ஆஸி., இடையே 3வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் AUS 445 ரன்கள் குவித்தது. 4ஆம் நாள் ஆட்டநேர முடிவுவரை IND அணி 252/9 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 5ஆம் நாள் ஆட்டம் நடைபெறும் நிலையில், போட்டி டிராவில் முடிந்துவிடும் என்பது அறிந்ததே. இதனால் மகிழ்ச்சியில் உள்ள இந்திய ரசிகர்கள், அடுத்த போட்டியிலாவது IND அணி வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News December 18, 2024

முள்ளங்கியின் முத்தான பயன்கள்

image

நம்மில் பலருக்கு முள்ளங்கி சாப்பிட பிடிக்காது. ஆனால், பல மருத்துவ பலன்கள் அதில் ஒளிந்துள்ளன. அவற்றில் சில…
*உடல் எடையை குறைக்க உதவுகிறது.
*இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.
*கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள செல்கள் செயல்பட ஊக்குவிக்க உதவுகிறது.
*மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.

News December 18, 2024

ரசிகர்களை தேடி வருகிறது: அட்லீ

image

மிகச்சிறந்த அறிவிப்புகள் சினிமா ரசிகர்களை தேடி வந்துகொண்டிருப்பதாக, இயக்குநர் அட்லீ கூறியுள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்துள்ள அவர், “இன்னும் சில வாரங்களில் என்னுடைய புதிய படம் தொடங்க இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய ஆற்றல் தேவை என்றாலும் எங்களுக்கு நிறைய ஆசிர்வாதங்களும் தேவை. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். அட்லி இயக்கியுள்ள பேபி ஜான் படம் டிச.25இல் ரிலீஸாகிறது.

News December 18, 2024

வழிபடுவதற்கு மரபு உள்ளது: தருமபுரம் ஆதினம்

image

யார் எங்கு நின்று வழிபட வேண்டும் என்று ஒரு மரபு உள்ளது என தருமபுரம் ஆதினம் தெரிவித்துள்ளார். கோயில் தரிசனம் தொடர்பான விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என <<14895444>>இளையராஜாவே<<>> கூறிவிட்டதாக குறிப்பிட்ட ஆதினம், மரபை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றார். மேலும், நாகை நீலாயதாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த அவருக்கு சிவாச்சாரியார் பிரசாதம் வழங்கியதை சுட்டிக்காட்டி ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை உண்டு எனத் தெரிவித்தார்.

News December 18, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶டிச.18 (மார்கழி 3) ▶புதன் ▶நல்ல நேரம்: 09:15 – 10:15 AM, 04:45 – 05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:15 – 11:00 AM, 06:30 – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: 12:54 PM வரை திரிதியை பின்பு சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶நட்சத்திரம்: பூசம் ▶சந்திராஷ்டமம்: மூலம்.

News December 18, 2024

செஸ் என்றால் தமிழ்நாடுதான்: விஸ்வநாதன் ஆனந்த்

image

“செஸ்” என்றால் அது தமிழ்நாடு தான் என விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார். உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய அவர், இங்கிருந்துதான் முதல் சர்வதேச சாம்பியன், கிராண்ட் மாஸ்டர், வேர்ல்டு சாம்பியன் போன்ற பலர் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், திறமையான வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்வதாகவும் அவர் கூறினார்.

News December 18, 2024

தாக்கத்தை ஏற்படுத்தியவர் AK: மஞ்சு வாரியர்

image

தனது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடிகர் அஜித் என மஞ்சு வாரியர் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்பதை அஜித் சாரை பார்த்து நானும் எங்கோ ஊக்கமடைந்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டார். மேலும், சிறு வயதில் இருந்தே பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை தன்னுள் இருந்ததாகவும் அவர் கூறினார். அஜித்துடன் சமீபத்தில் மஞ்சு வாரியர் பைக் ரைடு சென்றார்.

News December 18, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறள் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 121 ▶குறள்:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
▶பொருள்: அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

error: Content is protected !!