India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் உரையுடன் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டு தனது உரையை வாசிக்காத ஆளுநர், சில கருத்துகளை கூறிவிட்டு அமர்ந்தார். தொடர்ந்து, சபாநாயகர் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். இதையறிந்த ஆளுநர், அவையை புறக்கணித்து சென்றார். இந்நிலையில், இன்று அரசு தயாரித்த உரையை ஆளுநர் அப்படியே வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை செல்வராஜ் (59) வேலை தேடி வெளியூருக்குச் சென்றார். பல நாள்கள் அவர் திரும்பி வராததால் உறவினர்கள் தேடத் தொடங்கினர். அப்போது ஊருக்கு அருகே உள்ள ஆற்றில் கிடந்த சடலத்தை செல்வராஜ்தான் என்று எண்ணி தகனம் செய்தனர். பின்னர் ஒருநாள் வேலை தேடிச் சென்ற செல்வராஜ் உயிரோடு வீடு திரும்பினார். இதனால், அதிர்ச்சியான உறவினர்கள் தகனம் செய்யப்பட்ட உடல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
TNல் காங். கட்சியை பலப்படுத்தும் வகையில், புதியவர்களை நியமிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில், மாவட்டத் தலைவர் பதவிக்கு ₹5,000, மாநில நிர்வாகிகள் பதவிக்கு ₹1,000 என போட்டியிடுவோர் நன்கொடையாக செலுத்துமாறு செல்வப்பெருந்தகை அறிவித்தது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நன்கொடை கட்டாயம் கிடையாது, விருப்பமுள்ளவர்கள் செலுத்தலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு WTC தொடரில் இருந்து வெளியேறிய இந்தியாவின், அடுத்த WTC 2025-27 அட்டவணை வெளிவந்துள்ளது. ஜூனில் இங்கி. எதிராக 5 டெஸ்ட், அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2 டெஸ்ட், நவம்பரில் SAவிற்கு எதிராக 2 டெஸ்ட், ஆகஸ்ட் 2026 இல் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட், 2026 அக்டோபரில் NZ க்கு எதிராக 2 டெஸ்ட், 2027 ஜனவரியில் 5 டெஸ்ட் (BGT தொடர்) ஆஸி.க்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹1000 பணம் வழங்குவது குறித்து CM ஸ்டாலின் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பணம் வழங்காததற்கு எதிர்க்கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட CM, வேறு ஏதேனும் திட்ட செலவை குறைத்து பணம் வழங்கலாமா என பரிசீலித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
ஆஸ்கர் விருதுகளுக்குப் பிறகு மிகவும் பொக்கிஷமாகக் கருதப்படும் கோல்டன் க்ளோப் விருது நிகழ்ச்சி, கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இதன், ரெட் கார்பெட் நிகழ்வில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் போஸ் கொடுத்தனர்.
வங்கதேச நீதிபதிகள் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது முதல் இந்தியா உடனான உறவு சீர்குலைந்தது. இதற்கிடையே, வங்கதேச நீதிபதிகள் 50 பேர் இந்தியாவில் பயிற்சி பெறும் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஷேக் ஹசினாவை நாடு கடத்துவது குறித்து இந்தியா பதில் அளிக்காததால், அத்திட்டத்தை வங்கதேச அரசு ரத்து செய்துள்ளது.
கடவுளை நினைத்து மனமுருகி வேண்டும் போது, சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இது நல்ல சகுனம் தானே தவிர தவறில்லை. அதற்கு பெயர் தான் பக்தி. அதே நேரத்தில், உங்களுடைய பிரார்த்தனைகளை கடவுள் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் கடவுளை வழிபட வேண்டுமே தவிர, எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என அழுது கொண்டே ஒருபொழுதும் பிரார்த்திக்க கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. 4 நாள்கள் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்பை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினார். பின்னர், 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு வழக்கறிஞர் தொடர்பான ஆவணப் படத்தை பார்த்தபடி இருவரும் இரவு விருந்தில் பங்கேற்றனர். அடுத்த சில நாள்களில் தற்போதைய அதிபர் பைடன் இத்தாலி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.