news

News December 18, 2024

சஞ்சு சாம்சனுக்கு அதிர்ச்சி கொடுத்த அணி நிர்வாகம்

image

50 ஓவர் போட்டியாக நடைபெறும் விஜய் ஹசாரே டிராபியில் தொடரில் கேரள அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளார். தொடருக்கான பயிற்சி முகாமில் சஞ்சு கலந்து கொள்ளாததால், அவர் அணியில் இடம் பெறவில்லை என மாநில கிரிக்கெட் வாரிய செயலாளர் வினோத் குமார் விளக்கமளித்திருக்கிறார். தற்போது அவருக்கு பதிலாக சல்மான் நிசார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொடர் வரும் 21ஆம் தேதி தொடங்குகிறது.

News December 18, 2024

விவசாயிகளுக்கு கவச உடை.. சிறப்பம்சங்கள் என்ன?

image

வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது விவசாயிகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ‘Kisan Kavach’ உடையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், கண் பார்வைக் கோளாறு உள்ளிட்ட பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும். நவீனத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இலகுவான இந்த உடையைத் துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம், இதன் விலை ₹4,000 ஆகும்.

News December 18, 2024

கூட்டுறவு செயலி மூலம் எளிதாக கடன் பெறலாம்

image

TNல் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடன் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் பெற “Kooturavu” என்ற மொபைல் போன் செயலி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், கடன் விண்ணப்பத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால், தகுதியானோருக்கு உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. இதுவரை செயலி மூலம் 5,034 பேர் விண்ணப்பித்ததில், 4,900 பேருக்கு ₹60 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

News December 18, 2024

பொங்கலுக்கு வெளியாகும் ‘SK23’ டைட்டில் டீசர்

image

‘SK23’ படத்தின் டைட்டில் டீசர் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் 90% நிறைவடைந்துள்ளன. இதனிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டில் ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி முடித்துவிட்டு இப்படத்தை தொடரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News December 18, 2024

இந்திய அணி அதிர்ச்சித் தோல்வி

image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 159/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 62 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 15.4 ஓவர்களில் 160/1 எடுத்து வெற்றி பெற்றது. ஹேலி மேத்யூஸ் 85 ரன்கள் அடித்தார். முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால், தொடர் 1-1 என சமனில் உள்ளது.

News December 18, 2024

ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது ‘Laapataa Ladies’

image

ஆஸ்கர் விருதுக்கான போட்டியிலிருந்து வெளியேறியது ‘லாப்பட்டா லேடீஸ்’ திரைப்படம். 2025 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த Laapataa Ladies இறுதிப் பட்டியலில் உள்ள 4 படங்களில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் குழந்தை தொழிலாளர்களைப் பயப்படுத்தி எடுக்கப்பட்ட அனுஜா (Anuja) குறும்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

News December 18, 2024

108 ஆம்புலன்ஸ் இருப்பிடம் அறிய புதிய வசதி

image

TNல் 108 ஆம்புலன்ஸ் சேவை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதுடன், வாகன இருப்பிடத்தை அறியும் வகையில் மேப் இணைப்புடன் கூடிய புதிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அதன்படி, ஒருவர் ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டதும் அவரது மொபைல் எண்ணுக்கு ஓட்டுநர் தொடர்பு எண், மேப்புடன் SMS அனுப்பப்படும். அதில், பயனாளிகள் தங்கள் லோக்கேஷனையும் பகிரலாம். இதனால், ஓட்டுனர் பயனாளிகள் இருப்பிடத்தை குழப்பமின்றி வேகமாக வந்தடையலாம்.

News December 18, 2024

பொதுத் தேர்வில் தமிழ் கட்டாயம் அல்ல?

image

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் கட்டாயம் அல்ல என்று பரவிய செய்தியை தமிழக அரசு மறுத்துள்ளது. தனியார் ஊடகம் ஒன்று பிரசுரித்த செய்தியை பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்து கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் அரசு, சிறுபான்மை பள்ளிகளில் மட்டும் 2023 – 24 கல்வியாண்டில் தமிழ் படிக்க விலக்கு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

News December 18, 2024

விவசாயிகளுக்கு புதிய கடன் உத்தரவாத திட்டம்

image

சிறு விவசாயிகளுக்கு வங்கிகள் தயக்கமின்றி கடன் வழங்க ₹1,000 கோடியில் கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, தானியங்களை இருப்பு வைத்ததற்கான கிடங்கின் மின்னணு ரசீதை காட்டி சிறு, குறு விவசாயிகள் கடன் பெறலாம். வங்கிகள் கிடங்கு ரசீதை பிணையாக ஏற்கும். விவசாயக் கடன் திட்டங்களில் இத்திட்டம் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News December 18, 2024

டாப் ட்ரெண்டிங்கில் அஜித் – த்ரிஷா

image

ஜீ படத்துல பார்த்த மாதிரி அப்படியே freshஆ இருக்காங்க நம்ம தல அஜித்தும் எவர்கிரீன் த்ரிஷாவும். அவங்க கூட்டணியில உருவாகியிருக்கற ’விடாமுயற்சி’ படத்தின் போட்டோக்கள் நேற்று வெளியாச்சு. அதுல குறிப்பா இந்த ஒரு ஃபோட்டோ பயங்கர வைரல். உடம்பு எடை குறைஞ்சு இருக்கற அஜித் மற்றும் புடவைல கலக்குற த்ரிஷாவை பார்த்தா நம்ம கண்ணே பட்டுடும் போல..

error: Content is protected !!