news

News December 18, 2024

டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா

image

BGT மூன்றாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்திருக்கும் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதாக அறிவித்துள்ளது. அவர்கள் 7 விக்கெட்டுகளை இழந்திருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கின்றனர். இன்றைய போட்டி முடிவதற்குள் இந்திய அணியின் விக்கெட்டுகளை எடுத்தால் ஆஸி வெற்றி பெறும்., 274 அடித்தால் இந்தியா வெற்றி பெறும்., இல்லாவிட்டால் போட்டி டிரா ஆகும்.

News December 18, 2024

இனி இவர்களுக்கும் மாதம் ₹1000..

image

CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டத்தை டிச.30ம் தேதி தொடங்கி வைக்கிறார். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று, தற்போது உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ₹1000 வழங்கப்பட உள்ளது.

News December 18, 2024

இந்திய அணி ஜெயிக்க வாய்ப்பு

image

BGT தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. போட்டியில் இன்று காலை வரை இரண்டு இன்னிங்ஸ் மட்டுமே முடிந்திருந்ததால் டிரா ஆகிவிடும் என்று கருதப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் அவ்வணி 60 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருக்கிறது. இதனை இன்றைக்குள் இந்தியா சேஸ் செய்தால் வெற்றி பெறலாம்.

News December 18, 2024

நியூசிலாந்து புதிய கேப்டன் சாண்ட்னர்

image

நியூசிலாந்தின் வெள்ளைப் பந்து ஃபார்மேட் (ODI & T20) கேப்டனாக மிட்ச்செல் சாண்ட்னர் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பையை இழந்ததால் கேன் வில்லியம்சன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனையடுத்து, இலங்கையை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் எதிர்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணிக்கு சாண்ட்னர் கேப்டனாகியிருக்கிறார்.

News December 18, 2024

சற்று நேரத்தில் மழை தொடங்கும்

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் இன்னும் சற்று நேரத்தில் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றும் நாளையும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே மழை கிட்டும் என்று கூறியிருக்கும் அவர்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று தெரிவித்துள்ளனர்.

News December 18, 2024

குகேஷ் Vs காசிமா.. சர்ச்சையில் சிக்கிய TN அரசு!

image

TN அரசு, குகேஷுக்கு அளிக்கும் ஆரவாரம், கடந்த மாதம் உலக கேரம் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற காசிமாவுக்கு கொடுக்காதது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. 3 தங்கம் வென்ற எனது மகளுக்கு அரசு எதுவுமே அறிவிக்காதது வருத்தம் என காசிமாவின் தந்தையான ஆட்டோ ஓட்டுநர் மேஹ்பூப் கூறியுள்ளார். குகேஷுக்கு விழா நடத்திய அரசு, ₹5 கோடி வழங்கியுள்ளது. ஆனால், காசிமாவுக்கு அமெரிக்கா செல்ல ₹1.5 லட்சம் கொடுத்ததோடு விட்டுவிட்டது.

News December 18, 2024

பிப்ரவரியில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர்?

image

பாஜகவின் புதிய தேசிய தலைவர், பிப்ரவரி மாதம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கடந்த 2020ஆம் ஆண்டு BJP தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய தலைவர் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகளில் மேலிடம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.

News December 18, 2024

உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா

image

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று அடித்த அரைசதத்துடன் மகளிர் டி20 வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை அவர் 29 அரைசதங்களை விளாசி, நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ்(28) சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணிக்காக 147 டி20 போட்டிகளில் விளையாடி 3,684 ரன்களை விளாசி இருக்கிறார். இவரின் அதிகபட்சம் 87 ரன்கள் ஆகும்.

News December 18, 2024

ஆளுநரை சந்தித்த அண்ணாமலை

image

ஆளுநர் RN ரவியை கிண்டி ராஜ்பவனில் நேற்றிரவு அண்ணாமலை சந்தித்துள்ளார். அப்போது, அவருக்கு ஆளுநர் தேநீர் விருந்தளித்துள்ளார். அரசியல் படிப்பிற்காக லண்டன் சென்று திரும்பிய அவரை, ஆளுநர் பாராட்டியுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்டாலும், இருவரும் பல்வேறு நிகழ்வுகள் பற்றியும், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News December 18, 2024

படகு கவிழ்ந்து 25 பேர் பலி

image

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் மக்கள் பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து 25க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. அங்கு நடைபெறும் உள்நாட்டு கிளர்ச்சி காரணமாக மக்கள் சாலைகளை விடுத்து படகுகளில் பயணிக்கின்றனர். அப்படி அதிக மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற படகு நடு ஆற்றில் கவிழ்ந்ததில் 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கினர். இந்த விபத்தில், 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

error: Content is protected !!