news

News December 18, 2024

போய் வாருங்கள் அஸ்வின்

image

நம்ம தமிழ் பையன் ரவி அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பவுலராக இருந்த அஸ்வின், பல சாதனைகளுக்கு சொந்தக் காராகவும் இருக்கிறார். ”உங்களை நாங்கள் மிஸ் செய்வோம்” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

News December 18, 2024

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு

image

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்(38) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். பேட்டிங்கிலும் சிறந்து விளங்கும் அஸ்வின் வரும் ஐபிஎல் தொடரில் CSK அணியில் விளையாட உள்ளார்.

News December 18, 2024

இந்தியா ஆஸ்திரேலியா போட்டி டிரா

image

BGT தொடரின் மூன்றாவது போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 445 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா மோசமாக விளையாடி 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., 89 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து டிக்ளேர் செய்ய, 275 என்ற இலக்கோடு இந்தியா களம் இறங்கியது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி கைவிடப்பட்டது.

News December 18, 2024

அமித்ஷா பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி

image

மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார் என ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அம்பேத்கர் பெயரை முழக்கமிடுவது ஃபேஷனாகிவிட்டதாக அமித்ஷா கூறியது சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்வினையாற்றி வருகின்றன. எவ்வளவு தைரியம் இருந்தால் அம்பேத்கரை இவ்வளவு இழிவாக பேசுவீர்கள் எனக் கேள்வி எழுப்பிய கே.சி.வேணுகோபால், அம்பேத்கர் கடவுளுக்கு ஒப்பானவர்தான் என்றார்.

News December 18, 2024

முகேஷ் கன்னாவை வறுத்தெடுத்த சோனாக்ஷி!

image

நீங்க விளம்பரம் தேட என் குடும்பம் தான் கிடைச்சதா என முகேஷ் கன்னாவுக்கு சோனாக்ஷி சின்ஹா விளாசியுள்ளார். சோனாக்ஷிக்கு அவரது தந்தை ராமாயணம் சொல்லிக் கொடுக்கவில்லை என முகேஷ் பேசியதே இந்த பஞ்சாயத்துக்குக் காரணம். பல வருசங்களுக்கு முன்னாடி நடந்த ஷோவில் இருந்த மத்தவங்களை விட்டுவிட்டு என்னை டார்கெட் செய்வது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர் என் குடும்பத்தையும் வைத்து செய்தியில் வர நினைக்காதீர்கள் என்றார்.

News December 18, 2024

இனி வீடு கட்டுறது ஈஸி..

image

‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்திற்கு மேலும் ₹400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே ரூ.995.61 கோடி செலவீனம் செய்யப்பட்ட நிலையில், மேலும் ₹400 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குத் தொகை விடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

News December 18, 2024

வெளிச்சமில்லாததால் BGT போட்டி பாதிப்பு

image

BGT தொடரின் மூன்றாவது போட்டி போதிய வெளிச்சம் இல்லாததால் நிறுத்தப்பட்டது. ஐந்தாவது நாளான இன்று இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2.1 ஓவர்களில் 8 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. அதோடு, மழையும் லேசாக பெய்யத் தொடங்கியிருக்கிறது.

News December 18, 2024

தங்கம் விலை குறைந்தது

image

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ₹57,200க்கு விற்பனையான நிலையில் இன்று ₹57,080ஆக உள்ளது. நேற்று ₹7,150க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ₹15 குறைந்து ₹7,135க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹100க்கு விற்பனையாகிறது.

News December 18, 2024

அடுத்தடுத்த படங்களில் பிசியான கார்த்தி

image

‘கார்த்தி 29’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரலில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ‘மெய்யழகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’, பிரேம் குமார் இயக்கத்தில் ‘கார்த்தி 28’ ஆகிய படங்களில் கார்த்தி பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே, அவரது 29ஆவது படத்தை ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

News December 18, 2024

800 உயிரை காத்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு விருது❤️❤️❤️

image

தூத்துக்குடி மழை வெள்ளத்தின்போது செந்தூர் விரைவு ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தடுத்த ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு ரயில்வேயின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் பணியை கெளரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 800 பேரின் உயிரை காப்பாற்றிய ஜாபர் அலிக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

error: Content is protected !!