news

News December 18, 2024

சென்னையில் மழை தொடங்கியது

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தாக்கத்தால் சென்னையில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று IMD அறிவித்திருந்தது. இதனையடுத்து நகரில் மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உங்கள் பகுதியில் மழை இருக்கானு சொல்லுங்க.

News December 18, 2024

பேட்ஸ்மேன் ஸ்பின்னரான வரலாறு..!

image

நல்ல கிரிக்கெட் அகாடமி இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக St. Bede’s Anglo Indian பள்ளியில் அஸ்வின் படித்தார். உலகின் சிறந்த ஸ்பின்னரான அவர், சிறுவயது முதலே ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் என்பது ஆச்சரியம். லோக்கல் கிளப் மேட்களில் திறமையை காட்டியதால், அண்டர் 17 டீமிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரியில் படிக்கும்போது கோச் வழங்கிய அறிவுரையால், முழு நேர ஸ்பின்னாக முடிவெடுத்தார்.

News December 18, 2024

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ₹1 கோடி ஃபைன்!

image

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ₹1 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 999 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், இது பெரும் தலைவலியாகவும் மாறியுள்ளது. இப்படி விளையாட்டாக விடுக்கப்படும் மிரட்டல்களால் பயணிகள் கடும் அவதியடைவதோடு, விமான நிறுவனத்திற்கு தலா ₹3 கோடி வரை நிதி இழப்பு ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News December 18, 2024

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட காங்கிரசார்

image

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து, காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அக்கட்சியினர் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்துச் செல்லுமாறு போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

News December 18, 2024

டெஸ்டில் சுழன்ற சென்னை பையன்

image

டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆப் ஸ்பின்னர்களில் ஒருவர் அஷ்வின். 106 டெஸ்ட் ஆடியுள்ள 24 விக்கெட் சராசரியுடன் 50.7 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். மொத்தம் 537 விக்கெட் வீழ்த்தி, கும்ப்ளேவுக்கு அடுத்து அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியராக மின்னும் அஷ்வின், சர்வதேச அளவில் 7-வது வீரராக உள்ளார். 37 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ள அஷ்வின், உலகளவில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஆப் ஸ்பின்னராக திகழ்கிறார்.

News December 18, 2024

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா தவாக?

image

திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சட்டப்பேரவை தொடங்கி பிரஸ் மீட் வரை ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை அவர் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், வரும் பட்ஜெட் தொடரில் பண்ருட்டி தொகுதிக்கு வெள்ளத் தடுப்பு உள்ளிட்ட 3 அறிவிப்புகள் இடம்பெறாவிட்டால் கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என்று திமுகவுக்கு கெடு விதித்துள்ளார்.

News December 18, 2024

அஸ்வினுக்கு கிரிக்கெட் கனவை விதைத்த தந்தை

image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆல்ரவுண்டராக திகழ்ந்த அஸ்வின், 1986ஆம் ஆண்டு செப்., 17ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். கிரிக்கெட் பிளேயரான இவரது தந்தை ரவிச்சந்திரன், தான் சாதிக்காததை மகன் சாதிக்க வேண்டுமென எண்ணி கிரிக்கெட் பயிற்சிக்கு தேவையானதை செய்து கொடுத்தார். விளையாட்டு ஒருபக்கம் இருந்தாலும், படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்து தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டம் பெற்றார் அஸ்வின்.

News December 18, 2024

அஸ்வினை கட்டிப்பிடித்து வழியனுப்பிய கோலி

image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வினை விராட் கோலி கட்டிப்பிடித்து வழியனுப்பி வைத்தார். மழையால் இன்றைய போட்டி பாதிக்கப்பட்டிருந்தபோது ட்ரெஸிங் ரூமில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேமரா படம் பிடித்தது. அப்போது, சோகமான முகத்துடன் இருந்த அஸ்வினை கோலி கட்டியணைத்து தேற்றினார்.

News December 18, 2024

CSK-வில் கலக்கப்போகும் அஷ்வின்

image

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து பார்மேட்களில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள அஷ்வின், இனி கிளப் கிரிக்கெட்டில் முழுக் கவனத்தையும் செலுத்தப் போகிறார். 2008-ல் சிஎஸ்கே அணிக்கு தோனியால் கண்டெடுக்கப்பட்ட அவர், அதன்பின் இந்திய அணிக்குள் சென்று சாதித்துக் காட்டினார். இப்போது தாய்வீடான சிஎஸ்கேவுக்கு திரும்பும் அஷ்வின், இனி ஐபிஎல் ரசிகர்களுக்கு பெரிய விருந்து படைப்பார் என எதிர்பார்க்கலாம்.

News December 18, 2024

அமித்ஷா பேச்சால் முடங்கியது நாடாளுமன்றம்

image

அம்பேத்கர் பற்றிய அமித்ஷா பேச்சுக்கு நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி MPக்கள் ‘ஜெய்பீம்’ முழக்கம் எழுப்பி, கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியடைந்ததால், பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!