news

News December 18, 2024

சென்னையில் அதானி யாரை சந்தித்தார்? தொடரும் புதிர்

image

கடந்த ஜூலை மாதம் சென்னை வந்த அதானி எந்தெந்தத் துறை அரசு பொது ஊழியர்களை சந்தித்தார் என்ற எந்த தகவலும் இல்லை என TN செய்தி &மக்கள் தொடர்பு துறை கூறியுள்ளது. அதானி யாரை சந்தித்தார் என அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு, மேற்கூறியவாறு பதிலளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதானியை CM ஸ்டாலின் சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில், சட்டமன்றத்தில் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

News December 18, 2024

JPC குழுவுக்கு 2 திமுக எம்பிக்கள் பரிந்துரை!

image

மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழு(JPC) பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் எம்பிக்கள் வில்சன், செல்வ கணபதி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. LSஇல் இருந்து 10, RSஇல் இருந்து 5 என மொத்தம் 15 எம்பிக்கள் இடம்பெறவுள்ள இந்த JPC குழுவின் தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

News December 18, 2024

அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ்தான்: மோடி

image

அம்பேத்கர் தொடர்பான அமித்ஷாவின் பேச்சு குறித்து PM மோடி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவரது X பக்கத்தில், அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ்தான் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அம்பேத்கரை 2 முறை தேர்தலில் தோல்வியடைய செய்த கட்சிதான் காங்கிரஸ். அம்பேத்கருக்கு பாரத ரத்னாவை மறுத்தது காங்கிரஸ்; அம்பேத்கருக்கு எதிராக பரப்புரை செய்தவர் நேரு என்று, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

News December 18, 2024

சுபாஷே, அஜித்தே, முகுந்தே

image

2024ஆம் ஆண்டு இன்னும் 13 நாள்களில் முடியப் போகிறது. இதனை சற்று திரும்பிப் பார்த்தால் “சுபாஷே, அஜித்தே, முகுந்தே” என்ற மூன்று வார்த்தைகள்தான் நினைவில் வந்து போகின்றன. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் வந்த ‘சுபாஷே’, தல ரசிகர்கள் ஓயாமல் கத்திய ‘அஜித்தே. கடவுளே’, அமரன் படத்தில் வந்த ‘முகுந்தே’ ஆகிய வார்த்தைகள் 2024ஆம் ஆண்டை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியிருக்கிறது.

News December 18, 2024

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி வட மேற்காக நகரும். அதன்பின், வடக்கு புறமாக திரும்பி ஆந்திர கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News December 18, 2024

2025இன் செயல் திட்டம்.. வரும் 28ஆம் தேதி பாமக பொதுக்குழு!

image

பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி புதுச்சேரியில் கூடுகிறது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் நடக்கவுள்ள கூட்டத்தில், 2024இல் பாமக வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2025இல் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், புதுவையின் மாநில, மாவட்ட, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

News December 18, 2024

மதுவிலக்கு பிரிவு என்ன செய்கிறது?: ஐகோர்ட் கேள்வி

image

பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல், மதுவிலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என ஐகோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அனைத்து மனுக்கள் மீதான இறுதி விசாரணையை வரும் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

News December 18, 2024

அஸ்வினுக்கு திருப்பு முனையாக இருந்த சிஎஸ்கே

image

2006இல் தமிழக அணிக்காக விளையாட தொடங்கிய அஸ்வின் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வந்தார். இதனால் 2009இல் ஐபில் போட்டிகளில் விளையாட சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 2010இல் சாம்பியன்ஸ் லீக்கில் சிஎஸ்கேவிற்காக ஆடி பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருது வென்றது அவரது வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, 2010இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டராக அறிமுகமானார்.

News December 18, 2024

அமித்ஷாவை மறைமுகமாக விமர்சித்த CM ஸ்டாலின்

image

அமித்ஷாவின் பெயரை குறிப்பிடாமல் CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், நாடு, மக்கள், அரசமைப்பு சட்டம் பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள், சொல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஃபேஷனுக்காக சிலர் அம்பேத்கர் பெயரை கூறுவதாக அமித்ஷா பேசியிருந்தார்.

News December 18, 2024

இந்திய அணியின் பிரீமியம் ஸ்பின்னர் அஸ்வின்

image

இந்திய அணியின் பிரீமியம் ஸ்பின்னராக வலம் வந்தவர் அஸ்வின். ஒரு கட்டத்தில் ஜடேஜா, அஸ்வின் ஆகிய இருவர் மட்டுமே அணியின் வழக்கமான ஸ்பின் பவுலர்கள் ஆனார்கள். ICC cricketer of the year என்ற அவார்டை சச்சின் மற்றும் டிராவிட்டிற்குப் பிறகு 2016இல் அஸ்வின் பெற்றார். IPL வரலாற்றில் ஹர்பஜன் சிங்கிற்குப் பிறகு 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 2வது ஆஃப் ஸ்பின்னர் என்ற பெருமையும் பெற்றார்.

error: Content is protected !!