India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் பேச்சு அருவருப்பாக உள்ளதாக RJD சாடியுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அக்கட்சி எம்.பி மனோஜ் ஜா, இந்திய மக்களுக்கு வானுலக சொர்க்கம் தேவையில்லை, இந்த நிலம் சொர்க்கமாக்கப்பட வேண்டும், அதுதான் அம்பேத்கரின் விருப்பம் என்றார். அம்பேத்கர் பற்றி அமித்ஷா மனதில் இருப்பது வாய் தவறி வந்துவிட்டதாகவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் சென்னையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்க்கிறது. இந்நிலையில், தற்போது சென்னையில் நிமிடத்திற்கு நிமிடம் மழை தீவிரமாகி வருவதால் வாகன ஓட்டிகளால் சாலைகளில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அம்பேத்கர் விவகாரத்தில் அமித் ஷாவுக்கு எதிராக TMC MP டெரிக் ஓ பிரியன் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார். விதி எண்.187 படி, தலித் தலைவரை அவமதித்துப் பேசியதற்காக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கர் பெயரை கூறுவது ஃபேஷனாகிவிட்டது எனவும் அதற்குப் பதிலாகக் கடவுள் பெயரைச் சொல்லியிருந்தால் சொர்க்கத்திற்கு சென்றிருக்கலாம் என அமித் ஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் Space-ல் வாழ்வதற்கான ஆய்வுகள் தீவிரமாக நடக்கின்றன. கதிர்வீச்சு அதிகமுள்ள அங்கு மனித இனப்பெருக்கம் சாத்தியமா என்கிற கேள்விக்கு பதில்தேட, ஜப்பான் விஞ்ஞானிகள் எலியின் உறைய வைக்கப்பட்ட விந்தணுக்களை ஸ்பேஸுக்கு அனுப்பியுள்ளனர். 2025-ல் பூமிக்கு கொண்டு வரப்பட்டு அவை ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குகிறதா என ஆய்வு செய்யப்படுமாம். Mission Success எனில் நாம் பெட்டி படுக்கையோடு கிளம்பிவிடலாம்.
தோனி தலைமையில் 2011 ஒருநாள் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களில், ஒருவரை தவிர அனைவரும் ஓய்வை அறிவித்துவிட்டனர். நேற்று வரை அஸ்வினும், கோலியும் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களாக இருந்தனர். ஆனால், அஸ்வின் இன்று ஓய்வை அறிவித்துவிட்டதால், கோலி மட்டுமே எஞ்சியுள்ளார். உலகக்கோப்பையை வென்ற புகைப்படத்தில், கோலி மட்டும் கலரில் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்திருப்பது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அவரது தாய் உயிரிழந்த நிலையில், மகனும் கவலைக்கிடமாக இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறி, சமீபத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கரை பாஜகவுக்கு எப்போதும் பிடித்ததில்லை என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளில் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் பாஜகவினருக்கு, மக்களவையில் அம்பேத்கர் பற்றி பேசினால் மட்டும் பிடிப்பதில்லை எனவும் குறை கூறியுள்ளார். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சை ஏற்க முடியாது என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை மத்திய அரசால் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்பி சரண்ஜித் சிங் தலைமையிலான வேளாண், கால்நடைத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ரூ.12,000ஆக அதிகரிக்க மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
யூ-டியூபர் சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேனி கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை போலீசார், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கரை காவலில் வைக்க உத்தரவிட்டது.
ஜமைக்காவில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நெல்லை இளைஞர் விக்னேஷ்(31) உயிரிழந்தார். பிராவிடன்ஸ் தீவில் தென்காசியைச் சேர்ந்தவர் நடத்தி வரும் சூப்பர் மார்க்கெட்டில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த 2 தமிழர்கள் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளனர். பலியான விக்னேஷ் உடலைத் தாயகம் கொண்டுவர உதவி செய்யக்கோரி, உறவினர்கள் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.