India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற 11ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 14ஆம் தேதி வரை மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல, திமுகவின் அனுதாபி என பேரவையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஞானசேகரன் திமுக ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை எனவும், அவர் அமைச்சர்களோடும், அரசியல் பிரமுகர்களோடும் போட்டோ எடுத்திருக்கலாம் அதில் தவறில்லை என்றும் கூறினார். மேலும், அவர் யாராக இருந்தாலும், ஏன் திமுகவைச் சேர்ந்தவராக இருந்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம் என்றார்.
மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காத மகளிர் புதியதாக விண்ணப்பிக்க 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் Dy CM உதயநிதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விடுபட்ட பல லட்சம் பெண்கள் எங்கே விண்ணப்பிப்பது என்ற பேச்சு சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. <
பாமகவினர் கைது குறித்து ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த CM ஸ்டாலின், போராட்டங்களுக்கு முன் அனுமதி அவசியம் என்றார். பல இடங்களில் அனுமதியுடன் போராட்டங்கள் நடைபெறுவதாகவும், அனுமதியின்றி போராட்டங்களை நடத்தியவர்கள் மீதே வழக்கு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார். ஆளும்கட்சியாக இருந்தபோதும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட DMKவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
உதவிப் பேராசிரியர் பணியில் சேர NET தேர்ச்சி கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை(NEP) 2020-ன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. PhD உள்ளிட்ட பிற தகுதிகள் மூலம் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பணியில் சேர்வதற்கு NET தேர்ச்சி கட்டாயம் இல்லை என்றாலும், உதவிப் பேராசிரியர், பேராசிரியர்கள் பதவி உயர்வு பெற PhD கட்டாயம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கிவரும் ‘Vijay 69’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க டிஜே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அசுரன், பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டிஜே நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் அக்டோபரில் ரிலீசாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாணவிக்கு நடந்த வன்கொடுமை என்பது மாபெரும் கொடூரம் என அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக பேரவையில் CM ஸ்டாலின் பதிலளித்தார். எந்த சாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக மலிவான செயலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், அந்த சார் குறித்து ஆதாரம் இருந்தால் புலனாய்வு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தினார்.
உரிய நேரத்தில் பஸ்சை இயக்காத டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று TN அரசு எச்சரித்துள்ளது. மாநிலத்தில் 1,200 அரசு விரைவு பேருந்துகள் இயங்கும் போதும், மக்கள் நேர விரயம் காரணமாக ஆம்னி பேருந்துகளில் பயணிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு அரசு பஸ்களை இயக்கும் டிரைவர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பயணிகளிடம் பயண அனுபவம் குறித்து SMS மூலம் கருத்து கேட்கப்பட உள்ளது.
சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர் ICUவில் சிகிச்சை பெற்று வருகிறார். பிஹாரில் அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து ஹாஸ்பிட்டல் அழைத்துச்சென்றனர். அங்கும், அவர் உண்ணாவிரதம் இருந்த நிலையில், நேற்றிரவு ICUவில் அனுமதிக்கப்பட்டு நரம்பு வழியாக திரவம் செலுத்தப்பட்ட பின் உடல்நலம் தேறி வருகிறது.
Sorry, no posts matched your criteria.