news

News December 18, 2024

குறைந்தபட்ச PF ஓய்வூதியம் உயருகிறது?

image

தற்போது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச PF ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதை அதிகரிக்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், பாஜக மூத்தத் தலைவர் பசவராஜ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு, வாழ்வாதார செலவீனம் அதிகரித்திருப்பதால், அந்த ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

News December 18, 2024

அடுத்த 15 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சி தான்: அமித்ஷா

image

தன்னை பதவிவிலக சொன்ன காங்., தலைவர் கார்கேவுக்கு அமித்ஷா பதிலளித்துள்ளார். பதவி விலக நான் தயார். ஆனால், நான் பதவி விலகுவதால், கார்கேவின் பிரச்னை தீரப் போவதில்லை. ஏனெனில், இன்னும் 15 ஆண்டுகளுக்கு அவர் எதிர்க்கட்சி இருக்கையில் தான் அமரப் போகிறார் என்ற அமித்ஷா, தன்னுடைய ராஜினாமா எதையும் மாற்றிவிடாது என்றும் குறிப்பிட்டார்.

News December 18, 2024

ஆஸ்கருக்கு தேர்வான ஹிந்தி படம்

image

2025 ஆஸ்கர் விருது நாமினேஷனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட லபாடா லேடீஸ் தேர்வு பெறவில்லை. ஆனால் இங்கிலாந்து சார்பில் நாமினேட் செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ திரைப்படம் இறுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது. UK, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான, சந்தியா சூரி இயக்கிய இந்த படம் 2024 கேன்ஸில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 18, 2024

Xல் இனி Hashtag தேவையில்லை: மஸ்க்

image

X தளத்தில் ஹேஷ்டேக் பயன்படுத்துவதை பயனர்கள் தவிர்க்க வேண்டும் என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார். இது அசிங்கமாக இருப்பதாகவும், Xக்கு இனி அந்த அமைப்பு தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். X தள பதிவுகளில் அது சார்ந்த ஹேஷ்டேக்குகளை இடுவதும், அது ட்ரெண்ட் ஆவதும் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. மேலும், இந்த ஹேஷ்டேக்குகளை சேர்ப்பதன் மூலம் பதிவுகளை எளிதாகத் தேட முடியும்.

News December 18, 2024

அம்பேத்கர் குறித்த கருத்து: பாஜகவை மக்கள் நிராகரிப்பர்

image

அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்துகளுக்காக பாஜகவை மக்கள் நிராகரிப்பார்கள் என்று அதிமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சி மூத்தத் தலைவர் ஜெயக்குமார், அம்பேத்கர் இந்தியா முழுவதும் போற்றப்படக்கூடிய மாபெரும் தலைவர் என்றும், அவரின் புகழை சிறுமைப்படுத்தும் செயலை செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார். அமித்ஷாவின் பேச்சால் பாஜகவிற்கு பின்விளைவு கடுமையாக இருக்கும் என்றும் கூறினார்.

News December 18, 2024

கனமழை: நாளை இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை முதலாகவே கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி வருவதால், கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மேலே சொன்ன 4 மாவட்டங்களுக்கும் நாளை விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News December 18, 2024

சனாதனிகளின் சதி முயற்சிகள் சாம்பலாகும்: திருமா விளாசல்

image

நாடு முழுவதும் அம்பேத்கர் விஸ்வரூபம் எடுப்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என திருமாவளவன் சாடியுள்ளார். பார்லிமென்ட்டில் காங்கிரஸைப் பழித்துப் பேசுவதாக நினைத்து, <<14910754>>அமித் ஷா<<>> தனது முகத்திரையை கிழித்துக் கொண்டார் எனவும் சனாதனிகளின் சதி முயற்சிகள் சாம்பலாகும் என்றும் விமர்சித்துள்ளார்.

News December 18, 2024

காங்கிரஸ் தான் அம்பேத்கருக்கு எதிரானது: அமித்ஷா தாக்கு

image

<<14910754>>அம்பேத்கர் பற்றிய சர்ச்சைக்கு<<>> விளக்கமளித்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தான் உண்மைகளை திரித்துக் கூறுவதாக குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் தான் அம்பேத்கருக்கு எதிரானது, இட ஒதுக்கீட்டுக்கும் அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது, வீர சாவர்க்கரை அவமதித்தது, எமர்ஜென்சியை திணித்தது, அரசியலமைப்பின் அனைத்து விழுமியங்களையும் காங்கிரஸ் மீறியதாகவும் அவர் விமர்சித்தார்.

News December 18, 2024

உயரும் கடல்நீர் மட்டம்: சென்னைக்கு ஆபத்து?

image

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், 1993-2020 காலகட்டத்தில் சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 4.31 மி.மீ உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். மத்திய அமைச்சரின் இந்த அறிக்கையால், தமிழகத்தை சுற்றிய கடல் பகுதியில் நீர்மட்டம் உயர்வது தெரிய வந்துள்ளது. இதுபோல் கடல்நீர் மட்டம் அதிகரித்தால் சென்னைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது.

News December 18, 2024

இந்தியாவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!

image

97வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட குறும்படம் ‘Anuja’. Live Action Short Film பிரிவில் 180 படங்களுடன் போட்டியிட்ட இப்படம், ‘டாப்-15’ பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. ஆடம் கிரேவ்ஸ் இயக்கியுள்ள இப்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்னையைப் பற்றி பேசுகிறது. The Elephant Whisperers குனீத் இதில் பணியாற்றி இருப்பதால் இது ஆஸ்கர் வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!