news

News January 9, 2025

ஒரே நாளில் பர்த்-டே

image

காதல் ஜோடிக்கு ஒரே நாளில் பிறந்தநாள் வந்து பார்த்திருக்கீங்களா? அதுவும் நாட்டின் அமைச்சருக்கும் அவருடைய ஜப்பானிய மனைவிக்கும் ஒரே நாள் பிறந்தநாள் வர்றதெல்லாம் அச்சரியமா இல்ல! இன்னைக்குதான் அது. நம்ம வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கரும் அவருடைய ஜப்பானிய மனைவி கியோகோவும் இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாடுறாங்க. நாமளும் அவங்களை வாழ்த்துவோமே..

News January 9, 2025

இனியும் யார் அந்த சார் என கேப்பீங்களா இபிஸ்?

image

பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என இபிஎஸ் கபட நாடகமாடுவதாக சாடிய அவர், அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மறைந்திருந்த அந்த சார் அதிமுக வட்டச்செயலாளர் தான். இனியும் யார் அந்த சார்? என இபிஎஸ் கேட்க விரும்பினால் கண்ணாடியை பார்த்து கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்

News January 9, 2025

அடுத்த 5 ஆண்டுகளில் இந்த வேலைகளுக்குதான் டிமாண்ட்!

image

இப்போது நாம் பார்க்கிற வேலை எதிர்காலத்தில் என்னவாகும் என்கிற பயம் நம்மில் பலருக்கு இருக்கும். World Economic Forum வெளியிட்ட அறிக்கையில், விவசாய பண்ணை வேலைகள், டிரைவர்களுக்கு எதிர்காலத்தில் அதிக டிமாண்ட் இருக்கும். கேஷியர், டிக்கெட் கிளர்க் பணிகள் சரிவை சந்திக்கும். AI, Big Data துறைகளில் டிமாண்ட் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி சார்ந்த மனித திறன்களுக்கு தேவை இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

News January 9, 2025

சந்திரபாபு நாயுடுவை கைது பண்ணுங்க: ரோஜா

image

திருப்பதி கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானது தொடர்பாக நடிகை ரோஜா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். திருப்பதியில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தை, அரசாங்கம் நடத்திய படுகொலை என அவர் சாடினார். மேலும், புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்ததை போல, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்யுமாறும் ரோஜா வலியுறுத்தினார்.

News January 9, 2025

சீனாவில் புதிய MPox வைரஸ்

image

உருமாற்றமடைந்த குரங்கம்மை வைரஸின் (MPox) புதிய வெர்ஷன் சீனாவில் கண்டறியப்பட்டு உள்ளது. காங்கோ நாட்டுக்கு சென்றுவந்த ஒருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு அரிப்பு, கொப்பளங்கள் உள்ளிட்ட ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொகுதியை 1பி என அடையாளப்படுத்துகிறது சீனா. தொற்றுள்ளவர், மற்றவரை தொட்டாலே இந்த வைரஸ் பரவக் கூடியதாம். இன்னும் எத்தனை வருமோ?

News January 9, 2025

சீமான் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்

image

பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசிய வீடியோ ஆதாரங்களுடன், சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில், திமுக சட்டத்துறை செயலாளர் மருது கணேஷ் தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு எதிரான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் தனது கருத்தில் உறுதியாக உள்ளார். பெரியாரை எதிர்ப்பதுதான் தனது கொள்கை எனவும் கூறிவருகிறார். அவரது கருத்திற்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

News January 9, 2025

6,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர்

image

TRB மூலம் விரைவில் 6,000 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் எனவும், தீர்ப்புக்குப் பிறகு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறினார்.

News January 9, 2025

விஷால் உடல்நிலை குறித்து OFFICIAL விளக்கம்

image

நடிகர் விஷால் உடல் நிலை குறித்து சோஷியல் மீடியாவில் சிலர் கற்பனை கதைகளைப் பதிவிட்டு வதந்தி பரப்பி வருவதாக அவரது ரசிகர் மன்ற செயலாளர் ஹரிகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில், மதகஜராஜா பட விழாவில் பங்கேற்ற விஷாலின் தோற்றம், கையில் ஏற்பட்ட நடுக்கம் பேசுபொருளான நிலையில், வைரஸ் காய்ச்சல்தான் இதற்கு காரணம் என விஷால் தரப்பில் மருத்துவச் சான்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News January 9, 2025

பொங்கலுக்கு ரூ.1000 எப்போது? துரைமுருகன் பேச்சு

image

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படாதது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி கேள்வியெழுப்பினார். மேலும், அதிமுக ஆட்சியில் ரூ.2,500 வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், பொங்கல் பரிசை அதிமுக வழங்கிய போது, தேர்தல் காலமாக இருந்ததாகவும், எனவே, தேர்தல் வரும் போது பொங்கல் பரிசு தருவது பற்றி நாங்கள் யோசிப்போம் எனவும் கிண்டலாக பதிலளித்தார்.

News January 9, 2025

‘விடாமுயற்சி’க்கு U/A

image

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2:30 மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் அஜித்திற்கு பிடித்த மாதிரி பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். குறிப்பாக, கார் ரேஸ் காட்சியை பார்த்து தணிக்கை அதிகாரிகளே மிரண்டு போனார்களாம். ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில், விறுவிறுப்பு குறையாத கதைக்களத்துடன் சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என ஒவ்வொன்றும் செதுக்கப்பட்டுள்ளதாம்.

error: Content is protected !!