India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறள் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: அடக்கமுடைமை
▶குறள் எண்: 122 ▶குறள்:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
▶பொருள்: மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
2025 ஜனவரி 1 முதல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக உத்ராகண்ட் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில CM புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக UCC சட்டத்தை நாங்கள் அமல்படுத்த உள்ளோம் என்றார். திருமணம், விவாகரத்து, சொத்து, பரம்பரை சொத்துகளில் பங்கு போன்றவற்றில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரி விதியை வகுக்க UCC சட்டம் அமல்படுத்தப்படுகிறது.
*1879 – நியூசிலாந்தில் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
*1920 – கிரேக்க மன்னராக முதலாம் கான்ஸ்டன்டைன் முடிசூடினார்.
*1929 – இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் விடுதலையை அறிவித்தது.
*1961 – டாமன்&டையுவை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
*இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பிறந்தநாள் (1934).
*விடுதலை நாள் (கோவா)
டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (895 P) முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 4, பண்ட் 9, கில் 16, விராட் கோலி 20, ரோஹித் ஷர்மா 30ஆவது இடங்களில் உள்ளனர். ஆஸி., அணியுடன் நடந்து வரும் BGT தொடரில், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலி ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்தார்.
இன்று (டிச.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பாலா- 25 விழாவில் பேசிய சூர்யா, இயக்குநர் பாலாவின் சேது படம் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு இயக்குநரால் இப்படியெல்லாம் இயக்க முடியுமா எனத் தோன்றியது. அடுத்த படம் பாலா என்னை வைத்து இயக்குவதாக சொன்னார். 2000-ம் ஆண்டில் பாலாவிடமிருந்து அந்த அழைப்பு வரவில்லை எனில் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது என உருக்கமாக பேசியுள்ளார். வணங்கான் படத்தில் ஒப்பந்தமாகி பின்னர் சூர்யா விலகியது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை வேண்டுமென்றே காங்கிரஸ் கட்சி திரித்து பேசுவதாக எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பேத்கர் மரணத்துக்குப் பின்னர் கூட பாரத ரத்னா விருது தர காங்கிரஸ் மறுத்ததாக விமர்சித்த அவர், தங்கள் கட்சியை சார்ந்தவர்களுக்கு காங்கிரஸ் விருதுகளை வழங்கியதாகவும் சாடியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அவதூறுகளை மக்கள் நிச்சயம் புறந்தள்ளுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யா- சமந்தா திருமணம் 2017-ல் நடந்தது. திருமண தேதியை morse code வடிவில் நாக சைதன்யா பச்சை குத்திக் கொண்டார். இருவரும் 2021-ல் விலகினர். பின்னர் சோபிதாவுடன் அவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் இன்னமும் நாக சைதன்யா பச்சை குத்திக் கொண்டதை மாற்றவில்லை. இது குறித்து கேட்கப்பட்டதற்கு, இப்போது வரை அதை பற்றி யோசிக்கவில்லை. மாற்றுவதற்கு எதுவுமில்லை எனப் பதிலளித்துள்ளார்.
BGT தொடரில் எந்த சூழ்நிலையிலும் இந்திய அணி எளிதாக வெற்றியை விட்டுக்கொடுக்காது என்று அந்த அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். ஃபாலோ ஆன் ஆகாமல் இந்திய அணி விளையாடியது குறித்து பேசிய அவர், “நாங்கள் தொடர்ச்சியாக சண்டை செய்ய விரும்புகிறோம். AUS அணிக்கு அழுத்தம் தராதவரை அவர்கள் எந்த நேரத்தில், எப்படி விளையாடுவார்கள் என்பது தெரியாது. அதற்கு ஏற்றார்போல் திட்டமிட வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.