news

News January 10, 2025

அஜித்தை இயக்கும் லோகேஷ்?

image

அஜித்தை வைத்து படம் இயக்க நீண்ட நாள்களாக ஆசைப்பட்டு வருவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆசை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது ‘கூலி’ படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ், அடுத்ததாக ‘கைதி 2’ எடுக்க உள்ளார். அதற்கு அடுத்ததாக ‘ரோலக்ஸ்’ என பட்டியல் நீண்டு வரும் நிலையில் தான் அவர் இதை தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

ராசி பலன்கள் (10-01-2025)

image

➤மேஷம் – ஏமாற்றம் ➤ ரிஷபம் – பக்தி ➤மிதுனம் – தெளிவு ➤கடகம் – மேன்மை ➤சிம்மம் – கவலை ➤கன்னி – பரிசு ➤துலாம் – தனம் ➤விருச்சிகம் – பாராட்டு ➤தனுசு – நலம் ➤மகரம் – சுகம் ➤கும்பம் – சினம் ➤மீனம் – அனுகூலம்.

News January 10, 2025

powerful passport: 85வது இடத்திற்கு சரிந்த இந்தியா

image

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 80வது இடத்தில் இருந்த இந்தியா 85வது இடத்திற்கு சரிந்துள்ளது. இதற்கு அரசியல் கலவரங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்றவை முக்கிய காரணம். முதல் இடத்தில் சிங்கப்பூரும், 2வது இடத்தில் ஜப்பானும் உள்ளன. இந்தியர்கள் 57 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி செல்ல முடியும். ஆனால், சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 195, ஜப்பானியர்கள் 193 நாடுகளுக்கு செல்லலாம்.

News January 10, 2025

FIR லீக்.. உச்சநீதிமன்றத்தை நாடிய அரசு

image

அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை தொடர்பான FIR லீக் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள தமிழக அரசு, FIR வெளியானதற்கு அரசு காரணம் இல்லை என விளக்கமளித்துள்ளது. அதே நேரத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை, இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய பிற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படவில்லை.

News January 9, 2025

தேசிய விருது கடவுள் கொடுத்த லஞ்சம்: நித்யா

image

சினிமாவில் நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என நித்யா மேனன் தெரிவித்துள்ளார். சிம்பிளான வாழ்க்கையை வாழ்வதே தனக்கு பிடிக்கும் எனவும், ஆனால் அதை சினிமா அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கமிட் பண்ண படங்களை முடித்து கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து விலகலாம் என நினைத்த போது தேசிய விருது கிடைத்ததாகவும், அதை கடவுள் தனக்கு கொடுத்த லஞ்சமாக பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 9, 2025

LGBTQ+ சமூகங்களுக்கு NO சொன்ன கோர்ட்

image

ஒரே பாலினத்தவர் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுத்துள்ளது. 2023 தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2023ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது மற்றும் ஒரே பாலின தொழிற்சங்கங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு கோர்ட் எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கியது.

News January 9, 2025

SCAM ALERT: இலவச ரீசார்ஜ் எனக்கூறி மோசடி

image

பண்டிகை காலத்தை குறிவைத்து மோசடி நடந்து வருவதாக சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. போலி சலுகைகள், ரீசார்ஜ் டீல், தள்ளுபடி என்ற பெயரில் இணையத்தில் மோசடி நடக்கிறது. எனவே, இலவச ரீசார்ஜ் என்று கூறி செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். அந்த லிங்கை தொட்டால் தனிப்பட்ட தகவல் திருட்டு, நிதி மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க அலர்ட் கொடுத்துள்ளது.

News January 9, 2025

தமிழக அரசை தூக்கி எறிந்தால் மட்டுமே விடிவுகாலம்: H.ராஜா

image

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு திமுக அரசு தடையாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் H.ராஜா விமர்சித்துள்ளார். தமிழக காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளதாகவும், மக்களுக்காக போராட்டம் நடத்தும் தங்களை மாநில அரசு ஒடுக்க முயற்சிப்பதாகவும் சாடியுள்ளார். தமிழகத்துக்கு திமுகவால் நன்மையில்லை எனவும், அரசை தூக்கி எறிந்தால் மட்டுமே மாநிலத்துக்கு நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

அமெரிக்காவின் பெயரையே மாற்றுவேன்: மெக்சிகோ அதிபர்

image

அமெரிக்காவின் பெயரை தாங்கள் நினைத்தால் மாற்றி விடுவோம் என ட்ரம்புக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐநா.வால் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோ வளைகுடாவின் பெயரை, அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்ற வேண்டும் என சில தினங்களுக்கு முன் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த
கிளாடியா, அமெரிக்காவின் பெயரை மெக்சிகன் அமெரிக்கா என்று மாற்றுவோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

FACT CHECK: வருகிறதா லாக்-டவுன்?

image

நாட்டில் லாக்-டவுன் அமல்படுத்தப்படும் என்று பரவிய வதந்திக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிகரித்து வரும் HMPV வைரஸ் தொற்று காரணமாக லாக்-டவுன் அமல்படுத்தப் படலாம் என்று தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை மறுத்திருக்கும் மத்திய அரசின் Fact Check குழு, அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!