India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்ப்பமாக இருப்பது தெரிந்தவுடன் பயங்கர ஷாக் ஆனதாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து தாங்கள் யோசிக்கவில்லை எனவும், கர்ப்ப காலத்தில் உடலின் எடை அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன் உடலை பேணுவதற்கு கஷ்டப்பட்டதாகவும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் காற்று மாசுக்கான AQI அளவு மிக மோச நிலையான 450ஐ தாண்டியுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் அது அதிகபட்சமாக 482 புள்ளிகளை தொட்டது. குளிர் அதிகமானதாலும், காற்றின் வேகம் குறைந்ததாலும் மாசு அதிகரித்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், டெல்லி மக்கள் கடும் சுகாதார பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். சென்னையில் இந்த AQI அளவு 70 முதல் 100ஆக உள்ளது.
பார்லிமென்ட்டில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய வீடியோக்களை பகிர்ந்த காங்கிரஸ் எம்பிக்களுக்கு ‘X’ நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வீடியோக்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதால் அதனை நீக்க உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பேத்கர் குறித்த தனது பேச்சை சிலர் திரித்து வெளியிட்டுள்ளதாக அமித் ஷா விளக்கமளித்திருந்தார்.
நேற்று நடைபெற்ற ‘வணங்கான்’ பட பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யாவும் பாலாவும் இணைந்துவந்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். இப்படத்தில் அருண் விஜய் ஒப்பந்தமாவதற்கு முன்பு சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் பிரிந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் கை கோர்த்து நட்பு பாராட்டினர்.
ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொள்கிறார். முதல்வர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, 2 நாள்கள் பயணமாக ஈரோடு செல்லும் அவர், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்று திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கியும் வைக்கிறார். மேலும் ₹284 கோடி மதிப்பில் 50,088 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.
தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகராமல் வடக்கு நோக்கி செல்வதால் மழை படிப்படியாக குறையும் என்று தெரிகிறது.
இயக்குனர் பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் கொண்டாடும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய SK,” தீபாவளியன்று வெளியாகும் படங்களில் சோகமான முடிவுகள் இருந்தால் படங்கள் ஓடாது என்ற ஒரு கட்டுக்கதை உள்ளது. அமரனை பொறுத்தவரை, இதனால் நிறைய மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், தீபாவளியன்று வெளியான பாலா சாரின் ‘பிதாமகன்’ அதை அனைத்தையும் உடைத்து வசூல் சாதனை படைத்தது” என்றார்.
நடப்பாண்டில் ரியல் எஸ்டேட் துறையில் ₹75,000 கோடி அளவிற்கு நிறுவன முதலீடுகள் குவிந்துள்ளன. இந்தியாவில் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளுக்கான தேவை தொடர்ந்து வலுவடைவதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜே.எல்.எல். இந்தியா தெரிவித்துள்ளது. அதன் தகவலின்படி, கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் முதலீடு ₹49,700 கோடியாக இருந்துள்ளது. இது தற்போது 51% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் வங்கி அதிகாரிகள், இது பொய்யான தகவல் என்று மறுத்துள்ளனர். அரசு பொது விடுமுறைகள், இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2024க்கான மிஸ் இந்தியா-அமெரிக்கா பட்டத்தை, சென்னையை பூர்வீகமாக கொண்ட கைட்லினா சான்ட்ரா நீல் (19) என்பவர் வென்றுள்ளார். நியூஜெர்சி மாகாணத்தில் ஆண்டுதோறும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், USAவின் 25 மாகாணங்களை சேர்ந்த 47 இந்திய வம்சாவளி பெண்கள் கலந்துகொண்டனர். இதில் மிஸ் டீன் பட்டத்தை அர்ஷிதா என்பவரும், மணமானவர்களுக்கான அழகி பட்டத்தை சன்ஸ்கிருதி என்பவரும் வென்றனர்.
Sorry, no posts matched your criteria.