India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று காலை தொடங்கியது. வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை ஆகும். ஆனால் பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக, அனைத்து ரேஷன் கடைகளும் இன்று திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆதலால் டோக்கனில் குறிப்பிடப்பட்ட எண்கள் வைத்திருப்போர் பொங்கல் தொகுப்பை நேரில் பெற்று கொள்ளலாம்.
பெரியார் விவகாரத்தில் தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க நினைத்தால், சட்டம் தன் கடமையை செய்யும் என சீமானை மினிஸ்டர் துரைமுருகன் எச்சரித்துள்ளார். மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேசமாட்டார்கள் என கூறிய அவர், யாருக்கோ ஏஜெண்டாக இருக்கும் சில தற்குறிகள் இங்கே அரசியல் செய்ய முயல்வதாகவும், தமிழகத்தை ஏன் பெரியார் மண் என்கிறோம் என்பது சில மண்ணாந்தைகளுக்கு புரியாது என்றும் விமர்சித்துள்ளார்.
சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் காெல்லப்பட்டனர். சுக்மா மாவட்டம் பலிகுடா அருகே பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்று முதல் மக்கள் சொந்த ஊர் பயணிக்க உள்ளனர். இதற்காக, ஜன.13ம் தேதி வரை மட்டும் 1.4 லட்சம் பேர் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்துள்ளதாக அச்சங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆன்லைனில் அதிக கட்டணம் விதித்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்ச கட்டண விவரத்தை www.aoboa.co.in என்ற இணையத்தில் பயணிகள் அறியலாம் என்றும் கூறினர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது 2002இல் தொடரப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 22 ஆண்டுகளாக நடந்த விசாரணையில் காவல்துறை தரப்பில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு நாளை இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல், தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நாளை இரவு 11.35 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதுரைக்கு நாளை காலை 10.45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில்களுக்கான <
பொங்கலுக்கு முந்தைய தினம் (ஜன.13) மக்கள் போகி பண்டிகை கொண்டாடுகின்றனர். அப்போது பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பது வழக்கம். அந்த நேரத்தில் வீட்டிலுள்ள பிளாஸ்டிக், டயர், ட்யூப் உள்ளிட்டவற்றை மக்கள் எரிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அரசு, டயர், பிளாஸ்டிக், ட்யூப்பை எரிக்க வேண்டாம். சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு போகி கொண்டாடுங்கள் எனக் கேட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிடவில்லை. அண்மையில் தவெக கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை, ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் பாலாஜி சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் புஸ்ஸி ஆனந்த், 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் தவெகவின் இலக்கு என்று விஜய் தெரிவித்திருக்கிறார். ஆதலால் எந்த இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடாது எனக் கூறியுள்ளார்.
சீமான் மீது நெல்லை, மயிலாடுதுறை காவல்நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் தி.க.வினர் அளித்த புகாரின்பேரில் வடலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை, மயிலாடுதுறையிலும் தற்போது அடுத்தடுத்து வழக்குப்பதிவு ஆகியுள்ளது.
MSMEகளுக்கு ₹100 கோடி வரை கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சிறு நிறுவனங்கள் இயந்திரங்கள், உபகரணங்களை பிணையின்று வாங்க வழிவகை செய்யப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்நிலையில், நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்தர உள்ளது.
Sorry, no posts matched your criteria.